Wednesday, November 27, 2019

Seetha Kalyanam

Courtesy: Smt.Dr.Saroja Ramanujam

சீதாகல்யாணம்
கம்பசித்திரம்
சீதையின் வருகையை கம்பன் பின்வருமாறு வர்ணிக்கிறான்.
பொன்னின் ஒளி பூவின் வெறி சாந்துபொதி சீதம்
மின்னின் எழில் அன்னவள் தம் மேனி ஒளி மான
அன்னமும் அரம்பையரும் ஆர் அமிழ்தும் நாண
சிற்றிடை நுடங்க ஒளிர் சீரடி பெயர்ந்தாள்

இந்த பாடலில் காணும் நடை சீதையின் மெல்லிய நடையை ஒத்திருக்கிறது. இதே நடையை சூர்பனகையின் வரவிலும் காணலாம் . ஆனால் அதில் ஒரு ராக்ஷசியின் வல்லிய நடையை ஒத்த சொற்கள் காணப்படுகின்றன.

இப்போது எல்லா விவாகங்களிலும் சொல்லப்படுவது ஜனகரால் கூறப்பட்ட கன்யாதான ஸ்லோகம் .

இயம் சீதா மம ஸுதா ஸஹதர்ம சரீ தவ
ப்ரதீச்ச சைனாம் பத்ரம் தே பாணீம் க்ருஹ்ணீஷ்வ பாணினா

இதன் விளக்கம் பின்வருமாறு.
இயம் சீதா- இந்த சீதை – அதாவது ,
1.சாதாரணமானவள் அல்ல. கொழுமுகத்தின் அடியில் தானாகத் தோன்றியவள் என்ற அவள் பெருமைஅயை குறிக்கும் சொல்.

2. மின்னலைப்போல் ஒளி மயமானவள் இந்த சீதை.
3.நாராயணன்ராமனாக அவதாரம் செய்கையில் திருமகளை விட்டுப் பிரிந்து உள்ளதால் இதோ உன் திருமகள் என்று உணர்த்தும் சொல்.

4. இவளும் உன்னைப் போல் மானிடௌருவம் தாங்கி வந்துள்ளாள் என்று பொருள்

5.உனக்கு கன்யாதானம் செய்யவே நான் செய்த தவப்பயனாக இங்கு வந்திருக்கிறாள் என்று கூறுவதைப் போல் இயம் சீதா என்று கூறினார்.

மம சுதா- என் புதல்வி- ஜனகர் ராஜரிஷி ஆனதால் அவர் புதல்வி என்பது சிறந்த சான்றிதழாகும்

.சஹதர்ம சரீதவ- அதனால் உன்னுடைய யோகத்திலும் போகத்திலும் சமமாகத் துணை நிற்கத் தகுந்தவள்.
கருணை காட்டுவதில் சீதை ராமனையும் மிஞ்சியவள்.ராமன் விபீஷணன் குற்றமற்றவன் என்று அறிந்து ரக்ஷித்தான். ஆனால் சீதையோ தனக்கு துன்பம் விளைவித்த அரக்கியரையும் ஹனுமானிடம் 'ந கஸ்சித் நாபராத்யதி,' யார்தான் தவறிழைக்கவில்லை என்று கூறி தண்டனையிலிருந்து காப்பாற்றினாள்.

ப்ரதீச்ச ச ஏனாம் – இவளை எடுத்துக் கொள் . அவள் ராமனுக்கு சொந்தம் ஆனபடியால் உன் சொத்தை நீ எடுத்துக்கொள் என்று பொருள்.

பத்ரம் தே-மங்களாசாசனம் செய்கிறார். மேலும் ராமனின் அவதார காரியத்தை நிறைவேற்ற துணை புரியப்போவதால் உனக்கு இவளால் நன்மையே என்று பொருள்.'

பாணிம் க்ருஹ்ணீஷ்வ பாணினா- இது எட்டுவகை திருமணங்களில் ப்ராம்ம என்று சொல்லப்படும் விவாகம் ஆதலால் பிதாவின் சம்மதத்துடன் பாணிக்ரஹணம் செய்வது.

No comments:

Post a Comment