Friday, October 18, 2019

Vishnu Sahasranama 753 to 770 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

விஷ்ணு ஸஹஸ்ரநாமம்

753.அமாநீ-பக்தர்கள் விஷயத்தில் தம் உயர்வை நினையாதவர்.பாண்டவ தூதனாகவும் அர்ஜுன சாரதியாகவும் இருந்தவர். ராஜசூய யாகத்தில் அதிதிகளின் பாதம் கழுவிய பணியை ஏற்றவர். 
மானம் என்றால் அளவு என்று ஒரு பொருள். அமாநீ என்றால் அளவுக்கடங்காத என்று கொள்ளலாம்.

754.மானத:- பக்தாநாம் மானம் ததாதி- பக்தர்களை கௌரவிப்பவர். மானம் த்யதி- கர்வத்தை அழிப்பவர். மகாபலியின் கர்வத்தை வாமனராக வந்து அழித்தார்.

755. மான்ய:- எல்லோராலும் பூஜிக்கத்தகுந்தவர்
756,லோகஸ்வாமீ- உலகநாயகன் 
757. த்ரிலோகத்ருத்-மூன்று உலகங்களையும் தாங்குபவர். 
விஷ்டப்யாஹம் இதம் க்ருத்ச்னம் ஏகாம்சேன த்ருதோ ஜகத் – (ப. கீ.) 
" நான் இந்த பிரபஞ்சம் முழுவதும் வியாபித்து என்னுடைய ஒரு சிறு பகுதியால் மூன்று உலகங்களையும் தாங்குகிறேன். "

758.ஸுமேதா: -மங்களகரமான ஞானத்தை உடையவர்.
759. மேதஜ: -யாகத்தில் உண்டாகிறவர். தேவகியின் பூர்வஜன்மத்தில் புத்திரனை வேண்டி நோற்ற நோன்பென்னும் யாகத்தின் பலனாக அவதரித்தவர்.

760. தன்ய: - செல்வம் தர்மம் மேலோங்கியவர். பக்வானுடைய செல்வம் அவர் பக்தர்கள் தான். அவரே தர்ம ஸ்வரூபம். 
'ஆசாரப்ரபவோ தர்ம: தர்மஸ்ய பிரபுரச்யுத: ' பீஷ்மர்

761. ஸத்யமேதா: - உண்மை அறிவானவர். 'ஸத்யம் ஞானம் அனந்தம் பிரம்ம' 
762. தராதர: -தர என்றால் பூமி அதைத் தாங்குபவர் என்பதால் தராதர: (தர +ஆதர )
தர என்றால் மலை என்று ஒரு பொருள் இருப்பதால் இதை கோவர்தன மலையைத் தாங்கியவர் என்றும் கொள்ளலாம்

763.தேஜோவ்ருஷ: ஒளியைப் பொழிபவர். சூரிய ரூபியாக ஜலத்தை வர்ஷிப்பவர். அன்பரைக் காப்பாற்றுவதில் தம் அருளை வர்ஷிப்பவர்.
வ்ருஷ என்ற சொல் தர்மத்தையும் குறிக்கும் ஆதலால் அவருடைய தேஜஸ் தர்மமே என்று கொள்ளலாம்.

764. த்யுதிதர: -த்யோததே பிரகாசதே இதி த்யுதி:- பிரகாசிப்பது .அந்த பிரகாசத்தை உடையவர் த்யுதிதர: எனப்படுகிறார்.
765. ஸர்வ சஸ்த்ரப்ருதாம் வர: -ஆயுதம் தாங்கியவர் எல்லோரிலும் சிறந்தவர். எவராலும் வெல்ல முடியாதவர்.

766.ப்ரக்ரஹ:-பக்தர்கள் அர்ப்பணம் செய்யும் பூ இலை முதலியவற்றை அங்கீகரிப்பவர் . 
பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி 
ததஹம் பக்த்யுபஹ்ருதம் அச்னாமி பிரயதாத்மன: ( ப. கீ)
"பக்தியுடன் இலையோ பூவோ, பழமோ எது அர்ப்பணித்தாலும் நான் அதை பிரியமுடன் ஏற்றுக் கொள்கிறேன்.

ப்ரக்ரஹ என்றால் கடிவாளம் என்று ஒரு பொருள். இதனால பார்த்தசாரதியான கண்ணனைக் குறிப்பிடுவதாகக் கொள்ளலாம். இந்த்ரியங்களாகிய குதிரைகளை அங்கும் இங்கும் ஓடாமல் நேர் வழியில் செலுத்தும் சாரதியாக இருக்கிறான்

767. நிக்ரஹ:-எல்லாவற்றையும் அடக்குபவர்.
768. வ்யக்ர:-வி அக்ரே யஸ்ய – வி என்றால் பறவை . கருடனை வாஹனமாக முன்னால் வைத்திருப்பவர். அல்லது அக்ரம் (முடிவு ) விகதம்( இல்லாத) பக்தாபீஷ்டத்தைக் கொடுப்பதிலும் முடிவில்லாதவர்.

769.நைகஸ்ருங்க: - அநேக கொம்புகளை உடையவர். (சங்கரர்) தர்மம் அர்த்தம் காமம் மோக்ஷம் என்பவை அல்லது நான்கு வேதங்கள் (சத்வாரி ஸ்ருங்கா: என்று வேதத்தில கூறியபடி ) கொம்புகள். ஸ்ருங்க என்றால் சிகரம் என்றாலும் வேதங்கள் அவருடைய சிகரம் என்று கொள்ளலாம்.

770.கதாக்ரஜ: - கத: என்பது பலராமரைக் குறிக்கும் அவரை அக்ரஜ: அதாவது அண்ணனாக கொண்டவர் என்றால் க்ருஷ்ணனைக் குறிக்கும் நாமம்

No comments:

Post a Comment