Friday, October 4, 2019

Thirunaangur temple

ஸ்ரீவைஷ்ணவ 108 திவ்யதேசங்கள்  ஒரு விளக்கம் 72

ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ🙏

சோழநாட்டு திவ்யதேசங்கள் திருநாங்கூர் 11 திவ்யதேசங்கள் அறிமுகம் 02

      இதன்பின் பதினொரு சிவரூபங்களை திருமாலின் அவதார
மூர்த்திகளாகிய பதினொருவரும் அழைத்து ஒரு சிவனுக்குள் ஒரு சிவனாகச்
செலுத்தி பார்வதியையும் ஏற்றுக் கொள்ள வைத்ததாக ஐதீகம்.

     இந்த பதினொரு திவ்ய தேசங்களை சேவித்த வகையில் இங்கு ஒரு
சிவன் கோயில் உள்ளது.

      11 பெருமாள்களாக வந்தவர்கள் யார் யார் எனில் பத்திரிநாத்தில் உள்ள
நாராயணப் பெருமாளே அதே பெயரில் வந்து மணிமாடக்கோவில் இருந்த
இடத்தில் எழுந்தருளினார்.

     1. மணிமாடக்கோவில்   - நாராயணப்பெருமாள்
                         - பத்ரி
     2. அரிமேயவிண்ணகரம் - குடமாடு கூத்தர்
                         - கோவர்த்தனகிரி
     3. வைகுந்தவிண்ணகரம் - ஸ்ரீவைகுண்டம் (பரமபதம்)
     4. வெண்புருடோத்தமம் - அயோத்தி
     5. செம்பொன்செய் கோயில் - அழகிய மணவாளன்
                            - உறையூர்
     6. திருவெள்ளக்குளம் - அண்ணன்கோயில்
                       - திருப்பதி
     7. திருதெற்றியம்பலம் - பள்ளிகொண்ட பெருமாள்
                       - ஸ்ரீரங்கம்
     8. திருத்தேவனார்த் தொலை - கீழச்சாலை - திருவடந்தை
     9. திருக்காவளம்பாடி - கோபாலகிருஷ்ணன்
                        ருக்மணியுடன் - துவாரகை
     10. திருமணிக்கூடம் - வரதராஜப்பெருமாள் - கச்சி
     11. பார்த்தன்பள்ளி - பார்த்தசாரதி - குருசேஷ்த்திரம்
 

     சிவன் பதினொரு வடிவம் கொண்டதை
          ஸ்வமயம் பூதஸத் யானே
     த்வாதச விபத்வானே
          ஏகாதசனாம் ருத்தரனாம்
     பூதஸ் ஸண்யானே. - என்று வடமொழி கூறும்.
     இந்த பதினொரு திருநாங்கூர் திருப்பதிகளிலும் உள்ள பெருமாள்கள்
தான். ஒவ்வொரு வருடமும் தை அமாவாசைக்கு மறுநாள் திருநாங்கூருக்கு
எழுந்தருளுவர். மணிமாடக்கோயில் என்று அழைக்கப்படும் நாராயண
பெருமாள் சன்னதியில் இந்த கருடசேவை திருவிழா ஆண்டுதோறும்
நடைபெறுகிறது. இந்த 11  பெருமாள்களை கருடசேவையில் சேவிப்பது 11 திவ்ய தேசங்களுக்கு சென்று
வந்ததற்கு ஒப்பாகும்.

     ஆண்டுதோறும் இந்த பெருமாள்களை மங்களாசாசனம் செய்ய,
திருமங்கையாழ்வார் இங்கு வருவதாக பக்தர்களின் நம்பிக்கை. திருநாங்கூர்
சுற்றி உள்ள வயல் வெளிகளில் கருடசேவைக்கு (முதல்நாள் நள்ளிரவில்)
காற்றினால் நெற்பயிர்கள் சலசல என்று இரிய அந்த சத்தத்தை கேட்ட உடன்
திருமங்கையாழ்வார் பிரேவேசித்துவிட்டதாக பக்தர்கள் கூத்தாடுவதும்
திருமங்கையால் மிதிக்கப்பட்ட வயல்வெளிகளில் மிகுந்த நெல் விளையும்
என்று மக்கள் நம்புவதும் இப்பகுதியில் நிலவும் ஒரு திவ்யமான பக்தி
நம்பிக்கையாகும். 11 ஸ்தலங்களின் வரலாற்றை இனி தனித்தனியாக
காண்போம்.

ஆழ்வார் எம்பெருமான் ஜீயர் திருவடிகளே சரணம்🙏🙏🙏

வானமாமலை  ராமானுஜ ஜீயர் திருவடிகளே சரணம் 🙏🙏🙏

நாளைமுதல்  திருக்காவளம்பாடி  திவ்யதேசம் பற்றி காணலாம் ....

🙏 சர்வம் கிருஷ்ணார்ப்பனம்🙏

No comments:

Post a Comment