விஷ்ணு ஸஹஸ்ர நாமம்
684. ஸ்தவ்ய::-ஸ்தோதும் அர்ஹதி இதி. ஸ்துதிக்குப் பாத்திரமானவர்.
685. ஸ்தவப்ரிய:- பக்தர்கள் செய்யும் ஸ்துதியை அன்புடன் ஏற்றுக்கொள்பவர்.
686.ஸ்தோத்ரம் –அவரே அவரைக் குறித்து செய்யப்படும் ஸ்துதிக்கு காரணமாக இருப்பவர். அவன் அருளால் அவன் தாள் வணங்கி என்பது போல.
ஸ்தூயதே அனேன இதி ஸ்தோத்ரம் . துதிப்பது என்பது ஸ்தோத்ரம் பகவானை துதிப்பது வேதம் வேதத்தால் துதிக்க படுபவன்.
687.ஸ்துதி:- துதி என்பது அவன் செயலே. அதனால் துதியும் அவனே துதிக்கப்படுபவனும் அவனே
.
688. ஸ்தோதா- அவனே துதிப்பவன் . ஸர்வம் விஷ்ணுமயம். அல்லது தன் பக்தர்களை கொண்டாடுபவன் என்றும் பொருள் கொள்ளலாம்.
689. ரணப்ரிய:-ரண என்றால் போர் என்பது சாதாரணமான பொருள். அதனால் நல்லோரைக் காக்க துஷ்டர்களுடன் பொர புரிவதில் விருப்பமுள்ளவன் என்று கொள்ளலாம்.
ஆயினும் ரண என்ற சொல் சப்தத்தையும் குறிக்கும் . கோவில்களில் கேட்கப்படும் சங்கு முழக்கம் , மணியோசை இவைகளின் ஓசையை அல்லது பக்தர்களின் நாம சந்கீர்த்தனத்தை விரும்புபவன் என்று பொருள் கொள்ளலாம்.
690.பூர்ண: -பூர்ணமத: பூர்ணம் இதம் பூர்ணாத் பூர்ணம் உதச்யதே பூர்ணாத் பூர்ணம் ஆதாய பூர்ணமேவ அவசிஷ்யதே – உப நிஷத்.
அத: -அது (பிரம்மம்) பூர்ணம் – முழுமையானது. இதம்- இதுவும் ( பிரபஞ்சம்) பூர்ணம் – முழுமையானது. பூர்ணாத்- முழுமையிலிருந்து (பிரம்மத்திடம் இருந்து) பூர்ணம் ஆதாய – முழுமையான பிரபஞ்சத்தை எடுத்தால் , பூர்ணமேவ – முழுமையே அவசிஷ்யதே - எஞ்சி நிற்கிறது. பிரபஞ்சம் என்பது பிரம்மத்தைதவிர வேறு அல்ல. என்று பொருள்.
691.பூரயிதா—இந்த பிரபஞ்சத்தை முழுதும் வியாபித்து நிற்கிறான். அல்லது பக்தர்களின் இச்சைகளை பூர்த்தி செய்கிறான்.
692.புண்ய:- அவனி நினைத்த மாத்திரத்தில் எல்லா பாவங்களையும் போக்கி புனிதமாக்குகிறவர்.
'பவித்ராணாம் பவித்ரம் யோ மங்களானாம் ச மங்களம்
பீஷ்மர் ஸஹஸ்ர நாம ஆரம்பத்தில் கூறியது
.
693.புண்ய கீர்த்தி: -பாவங்களைப் போக்கும் புகழுடையவர்.
' வாயினால் பாடி மனதினால் சிந்திக்க போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் –திருப்பாவை.
694.அநாமய: -ஆமய என்பது பிறவிப்பிணி. பகவான் அதற்கு எதிரானவர்.
No comments:
Post a Comment