Friday, September 13, 2019

Vishnu Sahasranama 630to 656 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam
விஷ்ணு ஸஹஸ்ரநாமம் 
630.உதீர்ண: -எல்லோரும் காணும்படி வெளிப்படியாக அவதரிப்பவர். 
631. ஸர்வத: சக்ஷு: - எங்கும் எல்லாவற்றையும் காண்பவர். 
632.அனீச:- தமக்கு மேல் ஒருவரும் இல்லாதவர் . 'ந த்வத் ஸமோ அஸ்தி அப்யதிக: குதோ அன்ய: ' ப. கீ. 'உனக்கு சமமானவர் எவரும் இல்லை . அப்படி இருக்க உனக்கு மேலானவர் யார்?;'
ஆயினும் தன் அடியாரக்கு வசமானவன். கிருஷ்ணாவதாரத்தில் தூதனாகவும் தேரோட்டியாகவும் பணி புரிந்தான். பாண்டுரங்கனாக அவன் பக்தர்களுக்கு செய்யாத பணிவிடைகள் எதுவும் இல்லை..
633. சாஸ்வத: ஸ்திர:-எப்போதும் மாறாமல் ஸ்திரமாக இருப்பவர்.. 
635. பூசய: - பக்தர்க்கு அருள வேண்டி பூமியில் அர்ச்சாவதாரமாக இருப்பவர். ராமாவதாரத்தில் வனத்திற்கு வந்து பூமியில் சயனிக்கவில்லையா? 
பூ அஸ்மின் சேதே என்று பொருள் கொண்டால் உலகம் அவரிடம் பிரளயத்தில் சயனிக்கிறது. 
636. பூஷண:- -பல அவதாரங்களினால் பூமியை அலங்கரிப்பவர் . சௌலப்யம் முதலிய குணங்களை பூஷ்ணமாகக் கொண்டவர்.
விஷ்ணு: அலங்காரப்ரிய:என்று சொல்வதைப்போல பல வித பூஷணங்களால் அலங்க்கரிக்கப்பட்டவர். 
637. பூதி:- பூதி என்றால் ஐஸ்வர்யம். அவருடைய விபூதியே (வெளிப்பாடுகள்) அவர் ஐஸ்வர்யம். 
637. விசோக: - அவரை அடைந்தவர்க்கு சோகமே இல்லாததால் விசோக; எனப்படுகிறார்
638 . சோக நாசன: - நினைத்த மாத்திரத்தில் சோகத்தை அகற்றுபவர்.
ஆர்த்தா விஷண்ணா சிதிலா; ச பீதா: கோரேஷு வ்யாதிஷு ச வர்த்தமானா:
சங்கீர்த்ய நாராயண சப்தமாத்ரம் விமுக்த துக்கா: ஸுகினோ பவந்து
கஷ்டங்களினால் துக்கமடைந்து தளர்ந்து பயமடைந்தவர்களும், கொடுமையான வியாதியினால் பீடிக்கப்பட்டவரும் நாராயண நாமத்தை உச்சரித்த மாத்திரத்தில் துக்கம் தீர்ந்து சுகம் அடைவார்கள்.
639. அர்சிஷ்மான் – ஒளிகளுக்கெல்லாம் ஒளியானவர். ஜ்யோதிஷாம் ஜ்யோதி:
640. அர்ச்சித: - எல்லாரும் எப்போதும் கண்டு பூஜிக்க எளிதான அர்ச்சாவதாரமாக இருப்பவர். 
641.கும்ப;-- காம்யத இதி கும்ப: - எல்லோராலும் விரும்பப்படுபவர். 
கௌ பாதி இதி கும்ப: - கௌ, பூமியில் அர்ச்சாவதாரமாக பிரகாசிப்பவர்., 
642. விசுத்தாத்மா- முக்குணங்களையும் கடந்த பரிசுத்த ஸ்வபாவமுள்ளவர்
643. விசோதன: - நினைத்தவுடன் நம்மை பரிசுத்த்மாக்குகிறவர்.
644. அநிருத்த: -யாராலும் தடுக்க இயலாதவர். நாலாவது வ்யூஹ ரூபமான அநிருத்தர்.
645. அப்ரதிரத;- உவமையில்லாதவர் . பிரதிரத என்றால் ரதத்தில் எதிர்க்கும் விரோதியைக் குறிக்கும். அவரை எதிர்ப்பவர் எவரும் இல்லாததால் அப்ரதிரத; என்று கூறப்படுகிறார். 
646. பிரத்யும்ன;-த்யுமன் என்றால் செல்வம் , ஒளி. பிரத்யுமனன் என்பது நான்கு வ்யூஹ ரூபங்களில் மூன்றாவதாகும்.,
647. அமிதவிக்ரம: - அளவில்லாத பராக்ரமததை உடையவர். 
648. காலநேமிநிஹா- காலநேமி என்ற அசுரனைக் கொன்றவர். காலநேமி என்பது. காலச்சக்கிரத்தின் அச்சாகிய அஞ்ஞானத்தை அழிப்பவர். 
649. வீர: - பராக்ரமமுடையவர். 
650. செளரி: - சூரன் குலத்தில் பிறந்தவர் . அதாவது கிருஷ்ணர். 
651. சூரஜனேச்வர: -சூரர்களின் ஈஸ்வரன். 
652. த்ருலோகாத்மா- மூன்றுலகங்களுக்கும் அந்தர்யாமியாக இருப்பவர்.
653. த்ருலோகேச்வர:-மூன்று உலகங்களின் ஈஸ்வரன். 
654. கேசவ: - க அ: ஈச: எனப்படும் மும்மூர்த்திகளுக்கும் மூலமானவர். 
கேச என்றால் கிரணம் என்றும் பொருள். 
கேச சம்ஞித: சூராதி சங்க்ராந்தா: அம்சவ; தத்வத்த்யா கேசவ: 
சூரியன் முதலான சஞ்சரிக்கும் ஒளி வடிவங்களின் கிரணமானவர். 
655. கேசிஹா- கேசி என்ற அசுரனைக் கொன்றவர் 
656.ஹரி: -ஸஹேதுக ஸம்ஸாரம் ஹரதி-.பிறப்பு இறப்பு என்னும் சம்சார சக்கரத்தை அதன் காரணமான அஞ்ஞானத்துடன் சேர்த்து அழிப்பவர். 
ஹரி என்றால் பச்சை வர்ணத்தையும் குறிக்கும். பச்சை மாமலைபோல மேனியன்  

No comments:

Post a Comment