விஷ்ணு ஸஹஸ்ரநாமம்
603 அநிவர்த்தீ-நிவர்த்த என்றால் திரும்புவது. பகவான் பிரவ்ருத்தி மார்கத்தில் அதாவது லௌகிக மார்கத்தில் ஈடுபட்டவரிடம் இருந்து திரும்புவதில்லை . அவர்களை அவர்கள் மார்கத்திலே விட்டுத் திருப்புகிறார்.
கீதையில் கண்ணன சொல்கிறான் , 'தான் அக்ருத்ஸ்னவித: மந்தான் க்ருத்ஸ்னவித் ந விசாலயேத்.'- (ப. கீ – 3.29) இதன் பொருள் என்னவென்றால் , முற்றிலும் அறிந்திராத அஞ்ஞானிகளை, முழுமையான அறிவு பெற்ற ஞானி தடுமாறச்செய்யலாகாது.
இதன் இன்னொரு பொருள், தருமத்தில் இருந்து வழுவாதவர் என்பது,
604. நிவ்ருத்தாத்மா – உலகத்தில் இருந்து திரும்பி மோக்ஷ மார்கத்தில் ஈடுபட்டவர்களின் ஆத்மாவாக இருப்பவர்.
605. ஸம்க்ஷேப்தா –விஸ்தாரமான உலகத்தை பிரளய காலத்தில் சுருக்குபவர். (ஸம்க்ஷேபம் என்றால் சுருக்கமான என்று பொருள்)
பிரவ்ருத்தி மார்கத்தில் உள்ளவர்களுக்கு தன்னை முழுமையாக வெளிப்படுத்தாமல் குறுக்கியவர்.
'நாஹம் பிரகாச: சர்வஸ்ய,' " நான் எல்லோராலும் அறியப்படுவதில்லை."
606. க்ஷேமக்ருத்- தன் அடியவர்களுக்கு க்ஷேமத்தை செய்பவர்.
அனன்யா: சிந்தயந்தோ மாம் யே ஜனா: பர்யுபாஸதே
தேஷாம் நித்யபியுக்தானம் யோகக்ஷேமம் வஹாம்யஹம்( ப. கீ.)
" என்னை எப்போதும் இடைவிடாது நினைப்பவரின் க்ஷேமத்தை நான் பார்த்துக் கொள்கிறேன்.,'
607. சிவ: - சிவ சிவானாம் அசிவோ அசிவானம் – (ம.ஹாபாரதம்) நல்லவர்களுக் நனமையும் தீயோருக்குத் தீமையும் செய்பவர்.
608.ஸ்ரீவத்ஸவக்ஷா: -ஸ்ரீவத்ஸம் என்ற மறுவை மார்பில் உடையவர். ஸ்ரீவத்ஸம் என்பது பிரம்மத்தில் ஒடுங்கும் சுத்த ஆத்மாவைக் குறிக்கும்- விஷ்ணு புராணம்.
கௌஸ்துப வ்யபதேசேன ஸ்வாத்மஜ்யோதி: பிபர்த்தி அஜ:
தத் பிரபாவ்யாபிநீ ஸாக்ஷாத் ஸ்ரீவத்ஸம் உரஸா பிரபு: - பாகவதம்
பகவானின் பிரபாவமேகௌஸ்துபம் அதன் ஒளியின் பிரதிபலிப்பு ஸ்ரீவத்ஸம்.
ஸ்ரீ: ச வத்ஸா: ச வக்ஷஸி யஸ்ய ஸ:என்று எடுத்துக்கொண்டால் ஸ்ரீ அதாவது மஹாலக்ஷ்மியும் வத்ஸா:, பக்தர்களும் வக்ஷsi யஸ்ய , எவருடைய ஹ்ருதயத்தில் இருக்கிறாளோ அவர் என்று பொருள் கொள்ளலாம்.
609. ஸ்ரீவாஸ- - லக்ஷ்மியின் உறைவிடம்.:
610. ஸ்ரீபதி- லக்ஷ்மீபதி
611. ஸ்ரீமதாம் வர:-லக்ஷ்மிகடாக்ஷம் பெற்ற பிரம்மாதிதேவர்களிலும் சிறந்தவர்.
612. ஸ்ரீத:- ஐஸ்வர்யத்தை அளிப்பவர்.
613. ஸ்ரீச" ஸ்ரீதேவியின் நாயகர்.
614. ஸ்ரீனிவாச:-ஸ்ரீதேவியின் வாசஸ்தலமாக இருப்பவர் .
615. ஸ்ரீநிதி: - எல்லாவிதமான செல்வங்களுக்கும் மகிமைகளுக்கும் உறைவிடமாக இருப்பவர்.
616.ஸ்ரீவிபாவன:-எல்லாபிராநிகளிக்கும் அவரவர் வினைக்குத் தக்கவாறு வெவ்வேறான செல்வங்களை அளிப்பவர். ( தனம் மட்டும் செல்வம் அல்ல , மக்கட்செல்வம் , நற்பண்பு, பக்தி எல்லாமே அவன் அளிக்கும் செல்வம்தான்.
617.ஸ்ரீதர: -எப்போதும் லக்ஷ்மியை சார்ந்திருப்பவர்.
618. ஸ்ரீகர: - பக்தர்களுக்கு மேன்மையைச் செய்பவர்
619. ச்ரேய: ஸ்ரீமான்- மேன்மையுடைய செல்வநாயகர்
620.லோகத்ரயாஸ்ரய: - மூவுலகங்களுக்கும் ஆதாரமானவர்.
621. ஸ்வக்ஷ: - அழகிய கண்களை உடையவர்.
622. ஸ்வங்க: - அழகிய அங்கங்களை உடையவர்.
623.சதானந்த: -சத என்றால் நூறு ஆனால் சாதாரணமாக நூறு ஆயிரம் இந்த சொற்கள் கணக்கில்லாத என்ற பொருளில் உபயோகப்படுத்தப் படுகின்றன, ஆதலால் இங்கு ஆரிமிதமான ஆனந்தத்தை உடையவர் என்று பொருள் கொள்ளலாம்.
624.நந்தி: - பரமானந்த வடிவானவர். நந்ததி இதி நந்தி:
625. ஜ்யோதிர்கணேச்வர: - ஜ்யோதிர்கணானாம் ஈஸ்வர: ஒளிவடிவங்களுக்கேல்லாம் அதிபதி. 'தமேவ பாந்தம் அனுபாதி ஸர்வம், தஸ்ய பாஸா ஸர்வம் இதம் விபாதி.' –உபநிஷத். சூரியன் முதலான ஒளி வடிவங்கள் பகவானுடைய ஒளியால் பிரகாசிக்கின்றன.
626.விஜிதாத்மா-பக்தி: விஜித; ஆத்மா யஸ்ய ஸ: - பக்தியால் வெல்லப்பட்டவர்.
627. விதேயாத்மா – பக்தியினால் கட்டப்பட்டவர்.
அவிதேயாத்மா – எவருக்கும் கட்டுப்படாதவர் ( சங்கர பாஷ்யம்.)
628. ஸத்கீர்த்தி: - மேலானன கீர்த்தியை உடையவர்.
629. சின்ன ஸம்சய: -பக்தர்களின் ஸம்சயங்களை எல்லாம் ஒழித்து உண்மை ஞானத்தைத் தருபவர்.
No comments:
Post a Comment