நீ ஜீவிப்பதற்கு எது அத்யாவச்யமோ அதற்கு அதிகமாக ஒரு துரும்புகூடச் சேர்த்துக் கொள்ளாதே' என்பதுதான் அபரிக்ரஹ தர்மம். இதை யோக சாஸ்திரத்தில் ஸாதகன் அடிப்படையாகக் கொள்ள வேண்டிய ஐந்து 'யம'ங்களிலேயே ஒன்றாகப் பதஞ்ஜலி (யோக ஸூத்ரத்தில்) சொல்லியிருக்கிறார். 'யமம்' என்றால் அடங்கி வைப்பது. மஹா பாபிகளையும் அடக்கி வைத்துத் தண்டிப்பதால் யமனுக்கு அப்படிப் பெயர். மனஸை அடக்குகிறதற்குப் பதஞ்ஜலி யோக ஸூத்ரம் எழுதினார். அதிலே ஐந்து யமங்களாக அஹிம்ஸை, ஸத்யம், அஸ்தேயம் (திருடாமை), பிரம்மசர்யம் ஆகியவற்றோடு அபரிக்ரஹத்தையும் சொல்லியிருக்கிறது. 'அது வேணும், இது வேணும்' என்று பொருளைச் சேர்த்துக் கொள்கிற ஆசை அடங்கணும் என்றே இதைச் சொல்லியிருக்கிறார். இந்த ஆசை அடங்கினால், பணத்தாசை, அதற்காக எந்த தேசத்துக்கு வேண்டுமானாலும் போய் என்ன தொழில் வேண்டுமானாலும் செய்யலாம் என்ற பறப்பு, எந்தப் பொய் புரளி வேண்டுமானாலும் பண்ணிப் பணம் பண்ணலாம் என்ற அரிப்பு எல்லாமே போய்விடும்.
No comments:
Post a Comment