Thursday, August 1, 2019

Wroship God in any form - HH Bharati theertar

குருவின் வாக்கு குருவாரத்தில்...

கடவுள் சாஸ்வதமானவர். நேற்றும், இன்றும், நாளையும் ஒன்றுபோல் மாற்றமில்லாமல் இருப்பவர். எல்லா இடங்களிலும் இருப்பவர்.

ஈசானோ பூதபவ்யஸ்ய ஸ ஏவாத்ய உ ச்வ: .

ஒவ்வொரு மனிதனும் அவர் மேல் பக்தி வைத்து, கீதை போன்ற சாஸ்த்ரங்களில் அவர் காட்டிய வழியில் வாழ்வதுதான் நல்லது.

அவரைப் பல உருவங்களில் பூஜிக்கலாம். எல்லா உருவங்களும் அவருடையதுதான்.

அவர் பக்தனின் பக்தி விசேஷத்தைப் பொறுத்து அருளுகிறார்.

எல்லா இடங்களிலும் வ்யாபித்திருக்கின்ற கடவுளை கோயிலில் மட்டுமே எதற்காக பூஜிக்கவேண்டும்?

அவர் கோயிலில் மட்டுந்தான் தோன்றுவாரா? என்று சிலருக்கு ஸந்தேஹமுண்டாகலாம்.

கடவுள் எல்லா இடங்களிலும் நிறைந்திருந்தாலும் அவருடைய ப்ரபாவம், ஸான்னித்யம் ஆகியவை கோயிலிலுள்ள விக்ரஹத்திற்கு விசேஷமாக உள்ளது.

கும்பாபிஷேகத்திற்குப் பிறகு பக்தனின் பக்தியை ஏற்றுக்கொள்ளும் சக்தி அந்த விக்ரஹத்திற்கு வந்துவிடுகிறது, அதனால் அவர் மகிழ்ச்சியடைந்து பக்தனுக்கு அருள்பாலிக்கிறார். என்பதே இதற்கான பதில்.

இதைத்தான் ஸ்ரீஆதிசங்கரபகவத்பாதர் தமது பாஷ்யத்தில்

ஸர்வகதோ(அ)பீச்வரஸ்தத்ரோபாஸ்யமான: ப்ரஸீததி. ஸர்வகதஸ்யாபி ப்ரஹ்மண உபாஸநார்த:ப்ரதேசவிசேஷபரிக்ரஹோ ந விருத்யதே!

என்று பல இடங்களில் விவரித்துள்ளார்.

ஆகையால் எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கும் கடவுளை கோயிலில் வழிபடுவதில் தவறேதுமில்லை. மேலும்,

அர்சாதாவர்சயேத்தாவதீச்வரம் மாம் ஸ்வகர்மக்ருத்.
யாவன்னவேத ஸ்வஹ்ருதி ஸர்வபூதேஷ்வவஸ்திதம்.

என்று பகவானே பாகவதத்தில் கூறியுள்ளார்.

அதாவது, எல்லா ப்ராணிகளிலும் இருக்கும் என்னை எதுவரை ஒருவன் தனது ஹ்ருதயத்தில் உணரவில்லையோ அதுவரை தனது கர்மாக்களை அனுஷ்டித்துக்கொண்டு ஈச்வரனான என்னை விக்ரஹம் போன்றவற்றில் அவகாசத்திற்கேற்றபடி பூஜிக்கவேண்டும் என்று பகவான் கூறியுள்ளார்.

இதை நன்றாகப் புரிந்துகொண்டு உருவமற்ற ஈச்வரனை உருவ வடிவத்தில் பூஜை செய்து அவரது அனுக்ரஹத்திற்கு பாத்திரர்களாகவேண்டும் என்று ஆசீர்வதிக்கிறோம்.

தட்சிணாம்னாய சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதிபதி ஜகத்குரு
ஸ்ரீஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள்...

ஸ்ரீ குருப்யோ நமஹ!!

No comments:

Post a Comment