Thursday, August 22, 2019

Vishnu Sahasranama 551to 562 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

விஷ்ணு ஸஹஸ்ர நாமம்

551.வேதா: - விததாதி இதி வேதா: அளவற்ற வைபவங்களை பக்தர்களுக்கு அளிப்பவர். வேதா: என்றால் சிருஷ்டிகர்த்தா என்றும் பொருள். பிரம்மாவுக்கு வேதா: என்று ஒரு பெயர்.

552.ஸ்வாங்க:-தனக்குத்தானே அங்கமாக இருப்பவர். பூரணப்ரம்மமான போதிலும் எல்லாம் அவரே என்ற கருத்தின்படி பிரபஞ்சமே அவருடைய சரீரம் .

553, அஜித: - வெல்ல முடியாதவர். 
554. கிருஷ்ண:- தேவகீ புத்திரன் என்ற பொருளுடன் இந்த பதத்திற்கு வேறு பொருளும் உண்டு.

மகாபாரதத்தில் அர்ஜுனனிடம் தன் பெயருக்குப் பொருள் கூறுகிறார். 
க்ருஷாமி மேதினீம் பார்த்த பூத்வா க்ருஷ்ணாயசோ மஹான்
க்ருஷ்ணவர்ணஸ்ச மே யஸ்மாத் தேன க்ருஷ்ண: அஹம் அர்ஜுன. 
( மஹாபாரதம்- சாந்தி பர்வம்) 
"மிகப்பெரிய கலப்பையைப்போல் பூமியை உழுகிறேன். எனது நிறம் கருமையானபடியாலும் என்னை கிருஷ்ணன் என்கிறார்கள். "

இந்த உலகத்திலுள்ள எல்லா ஜீவராசிகளும் அவன் ஸ்ருஷ்டியானபடியால் ஒரு உழவன் பூமியை உழுது பயிரிடுவதைப்போல இந்த உலகத்தை விளைவிக்கிறான்.
இன்னொரு விளக்கம்.
க்ருஷி பூவாசக: சப்த: ணஸ்ச நிவ்ருத்திவாசக: 
விஷ்ணு: தத்பாவயோகாத் ச க்ருஷ்ண: பவதி சாஸ்வத:
(மஹாபாரதம் –உத்தியோக பர்வம் )

555. த்ருட:- ஸ்வரூபம் சாமர்த்தியம் இவைகளால் என்றும் மாறாதிருப்பவர்.
556. ஸங்கர்ஷண:-ஸம்+ கர்ஷண:-சித் அசித் இரண்டையும் சமமாக தன்னிடம் இழுத்துக்கொள்பவர்.

557. அச்யுத:-'சாஸ்வதம் சிவம் அச்யுதம்' என்று பிரம்மத்தைக் கூறுகிறது உபனிஷத். சாஸ்வதம் என்றால் எப்போதும் உள்ளது, , சிவம் என்றால் தூய்மை , அச்யுதம் என்றால் என்றும் மாறாதது (.321, 1௦1 நாமங்களில் இதன் விரிவான விளக்கம் காணலாம்.)

558. வருண:- வ்ருணோதி ஸர்வம் – எங்கும் வ்யாபித்தவர். ஆவ்ருணோதி-மாயையால் தன்னை மறைப்பவர்.
559. வாருண:-வ்ருண் என்றால் தேடுவது அல்லது நாடுவது. வாருண என்றால் அவனை நாடுபவர்களுடன் ஒன்றாக இருப்பவன். 
'வருணோ யாதஸாம் அஹம்', நீர் வாழ்பவைகளுக்கும் நீர்நிலஎங்களுக்கும் அதிபனான் வருணன் நானே .' கீதை

560. வ்ருக்ஷ: -வ்ருக்ஷத இதி வ்ருக்ஷ:. எல்லோருக்கும் சரணாலயம் . ஒரு மரம் தன்னை நாடிவருவோர்க்கு நிழல் கனிவகைகள் பட்சிகளுக்கு இருப்பிடம் இவை தருவது போல பகவானும் அண்டினோற்கு கல்பவ்ருக்ஷமாக இருக்கிறான்.

561. புஷ்கராக்ஷ: -தேஷாம் பிரசாத வர்ஷேண போஷகெ அக்ஷிணீ யஸ்ய ஸ:- அவ்விதம் நாடுவோரை காக்கும் அருள்பார்வையை உடையவர். 
புஷ்கரம் என்றால் தாமரை. அதனால் தாமரைக்கண் உடையவர் என்பது சாதாரண அர்த்தம். அக்ஷ என்ற சொல் வ்யாபிப்பதையும் குறிக்கும். அதனால் புஷ்கராக்ஷ: என்றால் இதயத்தாமரையில் வ்யாபித்துள்ளவர் என்றும் கொள்ளலாம் .

சூரியனையும் சந்திரனையும் புஷ்கரௌ என்று சொல்வதுண்டு . அதனால் சூரியசந்திரர்களை கண்களாக உடையவர் என்று பொருள் கூறலாம். 'சூர்ய சந்த்ரௌ ச நேத்ரே,'- புருஷ சூக்தம்.

562. மஹாமனா:- பக்தரிடத்தில் உதார மனமுடையவர். அல்லது சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரத்தை நினைத்த் மாத்திரத்திலேயே செய்து முடிக்கும் வல்லமை உடையவர்.

  

No comments:

Post a Comment