Wednesday, August 28, 2019

The dance of chidambaram natarajar

விரித்த செஞ்சடையாட வதனசந்திரநாட விரிகமலநயனமாட 
வெண்புருவ நிலவாட நல்ல டமருகமாட வீசுமொறு கங்கையாட 
தரித்த புலி அதலாட அபயகரமாட இரு சங்கு தோல் ஊசலாட 
விரித்த கரியுரி ஆட உரக கங்கணம் ஆட உபய பரிபுரமுமாட 
ஒரு பதம் மிதித்தாட சங்கநூலாட மேலோங்கு நீராட 
ஒளிறு பவளமேனி ஆட ஒரு பதம் எடுத்தாட உளமகிழ்ந்து 
சற்றே சிரித்து மண மங்கை கொண்டாட நின்றாடும் உன் திரு நடனம் 
என்று காண்பேன் ஜகம் பணி திகம்பர சிதம்பர நடேசனே சித்ஸ்வரூபானந்தனே
  

No comments:

Post a Comment