Friday, August 30, 2019

Sri Appanna Swamigal & parishecanam

Courtesy:Sri.Manian

ஸ்ரீ அப்பண்ண சுவாமிகள்.


காஞ்சி மகா சுவாமிகள், ஒரு முறை ஆத்தூரில் முகாமிட்டிருந்தார்கள், ஆத்தூரிலிருந்து  வெங்கலூர் என்ற ஊருக்கு மேனாவில் போய்க்கொண்டிருந்த போது, ஓரிடத்தில், மேனாவை நிறுத்த்ச் சொல்லி, அருகில் இருந்தவர்களிடம் " இங்கு ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தைச் சார்ந்த ஒரு அதிவர்ணாச்ரமி ஒருவர் இருக்கிறாரே அவரை அழைத்து வாருங்கள், பார்க்க வேண்டும்  என்றாராம்..


ஸ்ரீ அப்பண்ண சுவாமிகளை காஞ்சி முனிவரிடம் அழைத்து வந்தார்களாம். சிறிது நேரம் இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்களாம்.  காஞ்சி முனிவர் தம் கழுத்திலிருந்த மலர் மாலையை எடுத்து அப்பண்ண சுவாமிகளுக்கு அணிவித்தாராம்.

"  நல்ல அனுபூதிமான்" என்று அருகில் இருந்தவர்களிடம் சொன்னாராம்.


இப்படி மகா சுவாமிகளால், பாராட்டப்பட்ட ஸ்ரீ அப்பண்ண சுவாமிகள்,

சென்னை மந்தவெளியில் உள்ள, கிவாஜவின் இல்லம் " காந்தமலை"க்கு

வருவார்கள். கிவாஜ அவர்களுக்கும் ஸ்ரீ அப்பண்ண சுவாமிகளுக்கும் நெருங்கிய பழக்கம் பலகாலமாய் உண்டு. அவர் வந்துவிட்டாரானால், வீட்டில்  ஆன்மீக ஒளி பல்கிப் பெருகும்.  ஸ்ரீ அப்பண்ண சுவாமிகளைப் பார்ப்பதற்கு, அவருக்கு அணுக்கமானவர்கள் வருவார்கள். இல்லையென்றால் இவர்கள் இருவரும் யாரையாவது பார்க்கக் கிளம்பி விடுவார்கள்.  கிவாஜ பேசும் கூட்டங்களுக்கும் வருவார். கூட்டத்தொடு கூட்டமாய் அமர்ந்து பேச்சைக் கேட்பார். சில சமயம் உட்கார்ந்த படியே தியான நிலைக்குப் போய்விடுவார். நினைத்த மாத்திரத்தில் அவருக்கு சமாதி நிலை கைகூடும்.

செளந்திரா கைலாசம் அம்மையார் அவர்களுக்கும் ஸ்ரீ அப்பண்ண சுவாமிகளிடத்து நிறைய ஈடுபாடு உண்டு.


ஒரு நாலுமுழ வேஷ்டியும், கதர் ஜிப்பாவும் அணிந்திருப்பார். வீட்டுக்குள் வந்தவுடன், ஜிப்பாவைக் கழட்டிப் போட்டுவிட்டு ஒரு துண்டை எடுத்து மார்பின் குறுக்காகப் போட்டுக் கொண்டு விடுவார்.  ராமகிருஷ்ண பரமஹம்சர் போட்டுக் கொண்டிருப்பாரே அது போல, அசப்பில் பார்ப்பதற்கும் ராமகிருஷ்ண பரமஹம்சரைப் போலத்தான் இருப்பார், அவர் கண்களில் ஒரு ஒளி தெரியும். தீக்‌ஷண்யப் பார்வை. பார்த்தவுடன் வணங்கத் தோன்றும். அப்படி ஒரு உருவம்.


ஸ்ரீ அப்பண்ண சுவாமிகள், ஸ்ரீ வைஷ்ணவர்கள் மரபிலே, கொங்குப்பிராட்டியார் என்னும் வகையில் திருவவதாரம் செய்தார். தந்தை கொரக்கவாடி ராமசாமி ஐயங்கார் வடமொழிப் புலவர். சிறு வய்திலேயே வீட்டை விட்டு வெளியேறிவிட்டார் அவர். பித்துப் பிடித்தவர் போல் திரிவாராம்.  . அன்ன தானம் நிகழும் இடங்களில் தொண்டு செய்வாராம்.


ஒரு  நாள், வட குமரையில், பிரக்ஞை அற்று அவர் கிடந்த போது, வேளாண் தம்பதிகளான அருணாசலமும், அகிலாண்ட அம்மாளும், அவரை மகனாகவே கருதிப் பெரும் பாசத்துடன் இருந்தார்களாம்.  அதிலிருந்து ஸ்ரீ அப்பண்ண சுவாமிகளுக்கு, வடகுமரை இருப்பிடம் ஆயிற்று.


ஒரு காலத்தில் இவரை வெறி அப்பண்ணா என்று அழைப்பார்களாம். ஒரு முறை

அவரிடமே அதைப் பற்றிக் கேட்க நேர்ந்த போது அவர் சொன்னாராம்.


" தென்னை மரம் ஏறத் தெரியாதவன், ரொம்ப சிரமப்பட்டு மார்பு தேயக்

கைகளால் மரத்தை அணைத்துக் கொண்டு மேலே ஏறிவிட்டான்.  இற்ங்க வேண்டுமே என்ன செய்வான்?, உச்சியில் எத்தனை நேரம் உட்கார முடியும்? அவனுடைய கைகால்கள் வெடவெட என்று நடுங்கும். ' செத்தே போய்ட்டேன்' என்று  அலறுவான். என் நிலையும் அப்படித்தான். முருகன் என்னை எங்கோ சுற்றவிட்டான். யாரோ கல்லெறியப்போக, நானே எதிர்பார்க்காத நேரத்தில் என் கைக்கு வந்தான்.  பல ச்மயம் மண்டை எல்லாம் கொதிக்கும். செய்வதறியாமல், ஓடுவேன், நினைவற்று வீழ்ந்து விடுவேன். ஏதோ ஒரு சத்தம் என் காதில் கேட்டுக் கொண்டே இருக்கும். பிறர் சொல்லுவது என் காதில் விழாது..  யார் எதைக் கொடுத்தாலும் தூக்கி எறிவேனாம். சோற்றைத் தலையிலும், உட்ம்பிலும் பூசிக் கொள்வேனாம். குடிக்கத் தண்ணீர் கொடுத்தால் தலையில் கொட்டிக் கொள்வேனாம். யாரும் என் அருகில் வர முடியாதாம். அத்னால் தான் வெறி அப்பண்ணா என்ரு பெயர் வந்தது என்று சொன்னாராம்.


வடகுமரையில் தைப்பூச விழாவை சிறப்பாக நடத்துவார். அங்கு அருட்பெருஞ்சோதி வள்ளலார் மடம் ஒன்று இருக்கிறது,  சின்ன வடலூர் என்ற ஊரும் அருகில் இருக்கிறது.


ஸ்ரீ அப்பண்ண சுவாமிகள்  1962ல் தம் உடற்சிதையிலிருந்து விடுபட்டார். அப்போது அவருக்கு வயது 50 தான். அவருடைய அதிஷ்டானம் வடகுமரையில் இருக்கிறது. மஹாளய அமாவசை அன்று அவருடைய குரு பூஜை நாள்.


வடகுமரை என்ற ஊர், சேலம் ஜில்லாவில், ஆத்தூருக்கும் சின்ன  சேலத்திற்கும் இடையில் இருக்கிறது.


ஒரு முறை காலையில் கி வா ஜ அவர்கள் தோட்டத்தி இருக்கும் பவழமல்லி செடியின் கீழே கொட்டியிருக்கும் பூக்களைப் பொறுக்கிக் கொண்டிருக்கிறார். அப்போது வாசலில் சைக்கிள் ரிக்‌ஷாவிலிருந்து ஸ்ரீ அப்பண்ண சுவாமிகள் இறங்கி உள்ளே வரும் போது இந்த்க் காட்சியைப் பார்த்துவிட்டார். உடனே

என்ன?  மரமே பூமா தேவிக்கு பூக்களைக் கொண்டு அர்ச்சனை செய்திருக்கிறது. இதைக் கொண்டு போய், உள்ளே சாமி இருக்கிறதா நினைத்துக் கொண்டு அங்கு போய்க் கொட்ட்ப் போறேளா! என்று கேட்டிருக்கிறார்.


அன்று மாலை, திருவல்லிக்கேணியில் ஒரு கூட்டம். தாயுமான சுவாமிகள் விழா.

கி.வா ஜ பேசுகிறார். ஸ்ரீ அப்பண்ண சுவாமிகளும் கூட்டத்திற்கு வந்திருக்கிறார்.

காலையில் நடந்த நிக்ழ்வைச் சொல்லி, தாயுமானவர். பாடல் ஒன்றோடு பேச்சைத் துவக்கினார்.


பண்ணேன் உனக்கான பூசை ஒரு வடிவிலே

              பாவித்திறைஞ்ச ஆங்கே

   பார்க்கின்ற மலரூடு  நீயே இருத்தியப்

              பனி மலர் எடுக்க மனமும்

நண்ணேன்  அலாமல் இரு கைதான் குவிக்க எனில்

            நாணும் என் உளம் நிற்றி நீ

   நான் கும்பிடும் போது அரைக்கும்பிடு ஆதலால்

          நான் பூசை செய்தல் முறையோ!


என்ற பாடலை எடுத்துக் கொண்டு சுமார் ஒரு மணி நேரம் பேசினார்.

அனறைக்குப் பேசின பேச்சு அற்புதமாக இருந்தது. மலரும் இறைவன் என்று எண்ணி அதற்குக் கும்பிடு போடலாம் என்று எண்ணி, கையைக் குவித்தால்.உள்ளத்துக்குள்ளும் அந்தக் கடவுள் தானே இருக்கிறான், அதனால் அரைக் கும்பிடு ஆகிவிடுமே என்று எண்ணிக் கையை கீழே போட்டு விட்டேன் என்று தாயுமானவர் பூவைக் கும்பிட்ட காட்சியை நாடகம் போல சொற் சித்திரமாகக் காட்டி விட்டார்.


பின்னும் ஒரு முறை ஸ்ரீ அப்பண்ண சுவாமிகள் வந்திருந்த போது எல்லோரும் சாப்பிட உட்கார்ந்தோம்.  இலையில் எல்லாம் பரிமாறியாகி விட்டது. கையில் நீர் எடுத்துக் கொண்டு இலையைச் சுற்றி பரிசேஷ்ணம் செய்து விட்டார்கள்.

கிவாஜ மனைவி கையில் பஞ்சபாத்திரத்தோடு நீர் வார்க்கத் தயாராக இருக்கிறார்கள்.  திடீரென்று ஸ்ரீ அப்பண்ண சுவாமிகள், இந்தப் பரிசேஷ்ணம் ஏன் எதற்க்காக செய்கிறோம்? யாராவது உண்மையான காரணத்தைச் சொல்ல முடியுமா என்று அங்கிருந்த ஒவ்வொருவரையும் கேட்டார்கள். யாரும் முன்வரவில்லை.  ஏனென்றால் யாருக்கும் தெரியாது. கிவாஜ வின் மகன் சுவாமினாதன் மட்டும், இலையில் எறும்பு ஏறாதிருக்க இலையைச் சுற்றி நீர் விடுகிறோம் என்று சொன்னான். அவனைப் புறந்தள்ளிவிட்டி ஸ்ரீ அப்பண்ண சுவாமிகள் கிவாஜ அவர்களைப் பார்த்து நீங்க்ளே சொல்லுங்கள் என்று சொன்னார்.  கிவாஜ பேசுகிறார்.


மேலை நாடுகளில், ஒரு பழக்கம் உண்டு. முக்கியமாக ஏதாவ்து பேச வேண்டுமானால்,  over the cup of tea, over the lunch, or over the dinner என்று தான் பேசுவார்கள். இப்போது கூடப் பார்க்கலாம். வெளி  நாட்டிலிருந்து ஒரு முக்கியமான தூதர் வந்து ஆட்சி சம்பந்தமாகப் பேசினால், நம்து பிரதமர் அவருடன் லன்ச் மீட்டிங்கில் பேசுகிறார். காரணம். சாப்பிடும் போது எந்த விஷயம்பேசினாலும், அது உணவுடன் உள்ளே இறங்கும். அது உணர்வோடு இருக்கும். மறந்து போகாது.


" ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. Many a slip between the cup and the lip,என்று.

அதாவது, கையிலிருக்கும் கோப்பைக்கும் உதட்டுக்கும் இடையே

 நீண்ட இடைவெளி, அந்த இடை வெளிக்குள்ளே என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். கோப்பையில் இருக்கும் பொருள், உடலுக்குள்ளே போகாமல் போனாலும் போகலாம். நிச்சியம் இல்லை.  வாழ்க்கை என்பது அத்தனை

லேசான் நூலிழையில் ஓடிக் கொண்டிருக்கிறது. "ஓடுகின்ற மூச்சு, வெளியே போனால் போச்சு" என்றும் சொல்லுவார்கள்.


நம்முடைய உயிரோட்ட்ம், பத்து வாயுக்களால் நடக்கிறது. அவைகளில் முக்கியமான் ஐந்து வாயுக்கள்.


பிராணன்

அபானன்

உதானன்

வியானன்

சமானன்


ஆகியவை ஆகும்


மற்ற ஐந்து வாயுக்களும் அவசியமானாலும், அவைகளுக்கு

நம் மரபில், பெரிய முக்கியத்துவம் அளிப்பது இல்லை.

அவை

நாகன்

கூர்மன்

கிருகரன்

தேவதத்தன்

தனஞ்செயன்.

எனப்படும்.


உடலில் இருந்து கடைசீயாக வல்து கால் கட்டை விரல் வழியாக வெளியேறும் வாயு தனஞ்செயன்.


உயிருக்குப் பெயர் பிராணன் என்று சொல்லுவார்கள்.  இறந்து போவதைச் சொல்லும் போது "பிராணன் போய்விட்டது" என்று சொல்லுவதை நாம் அறிவோம். பிராணன் அதி தேவதா வாயு.


அபானன்  கழிவுப் பொருட்களை வெளியே தள்ளும் வேலையைச் செய்வது.

அதற்கு இரண்டாவது இடத்தைக் கொடுத்திருக்கிறார்கள். சாக்கடை அடைத்துக் கொண்டால் என்ன ஆகும்.? அது போல, உட்லில் உள்ள கழிவுப் பொருள்கள் அவ்வப்போது வெளியேற்றப்பட வேண்டும். அதை இந்த அபானன் வாயு செய்கிறது.


உதானன் என்பது உடல் முழுவதும் வெப்பத்தை அளித்து இரத்த ஓட்டத்தை சீராக இயங்கச் செய்யும்


வியானன் என்ற வாயு, குடல், கணையம், பித்தப்பை, பெருங்குடல் ஆகியவைகளுக்குப் பொறுப்பேர்றுக் கொண்டு, உண்ணும் உணவு ஜீரணிக்க ஏதுவாக, பல அமிலங்களை உற்பத்தி செய்து தருகிறது.


சமானன் என்கிற வாயு.  வாயு, பித்த சிலேஷ்மங்களை சரியான விகிதத்தில்

வைத்துக் கொள்ள உதவுகிறது. வாயு, பித்த  சிலேஷ்மங்களில், ஒன்று குறையினும். ஏறினும் உடல் நலம் கெட்டுப் போகும்.  ஆயுர் வேத வைத்தியத்தில் வாயு பித்த சிலேஷ்மங்களை நாடி பிடித்து அறியும் வழக்கம் இன்றும் இருக்கிறது.


இந்த ஐந்து வாயுக்களும் நமக்கு பெரும் நன்மை செய்யும் காரணத்தால், உயிர் உடலோடு ஒட்டி இருக்க இவை ஐந்தும் பேருதவி செய்கிற காரணத்தினால் அவைகளுக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறோம். அன்றாடம் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறோம்.


உன்னும் அளவில்  உணரும் ஒருவனை

பன்னும் மறைகள் பயிலும் பரமனை

என்னுளே இலங்கும் எளிய ஜோதியை

அன்ன மயம் என்று அறிந்து கொண்டேனே!


என்று சாப்பிடுகிற அன்னத்தையே இறைவனாக பாவித்துப் பாடி இருக்கிறார், திருமூலர். நினைத்த மாத்திரத்திலே, நம்மால் உணரக்கூடிய ஒருவன்., சொல்லிக்கொண்டே இருக்கும் வேதங்கள், இன்னும் தேடிக் கொண்டிருக்கும் ஒருவன்,  , இப்படித் தேடிக் கொண்டிருந்தாலும், உணர்ந்து கொண்டவர்களுக்கு அவர்கள் உள்ளத்துக்குள் உட்கார்ந்து கொண்டு, இதயஸ்தானத்தில், ஒளி மயமாக ஒளிர்ந்து கொண்டிருக்கும் ஒருவன், இதோ என் முன்னால் இருக்கிறதே, அந்த அன்னமாகவும் இருக்கிறான் என்று உணர்ந்து கொண்டு விட்டேன் என்று பறை சாற்றுகிறார்.


அன்னத்தை இறைவனாக, ஒரு புனிதப் பொருளாக, மேன்மை உள்ளதாக, விரும்பத்தக்கதாக பார்க்கும் போது அதற்கு உரிய மதிப்பையும் மரியாதையையும் தருவது தானே சிறந்தது.


நமக்கு அரிதாக ஒரு பொருள் கிடைக்கிறது. நமக்கு அன்புடையவர்களிடம் அதைக் கொடுத்து விடுகிறோம். தனக்கென்று வைத்துக் கொள்பவன் கடை நிலை. உயர்ந்த உள்ளமுடையவர்கள், அன்புடையவர்க்கு அளித்து மகிழ்வார்கள். .


முன் சொன்ன பிரதான ஐந்து வாயுக்களும்  நம்மை உயிர் வாழ வைப்பன.

நாம் நன்றி சொல்ல வேண்டிய அவசியத்திற்கு, நம்மோடு உடன் இருப்பவை.

நாம் அன்பு செலுத்தக்கூடியவை அவை.  நமக்கு எதிரே, மிக்க மதிப்பான

அரும் பொருளான, அன்ன வ்டிவிலே இருக்கும் இறைவனாக ,  அன்னம் இருக்கிறது. அதை என்ன செய்ய வேண்டும்? நாம் அன்பு செலுத்த வேண்டிய நன்றி சொல்ல வேண்டிய ஐந்து வாயுக்களுக்கு முதலில் கொடுத்துவிட வேண்டும்.  இறைவனாகிய அன்னம் , நம் வயிர்றுக்குள், போய், உயிர் வளர்க்கும் முன், ஐந்து வாயுக்களுக்கு அர்ப்பணம் செய்து விட வேண்டும்.


இதைத் தான், பிராமண குலத்தைச் சார்ந்தவர்கள், ( இன்று சிலர்) வழிவழியாகப் பின்பற்றி வருகிறார்கள்.  இது பிராமண குலத்தவர் மட்டும் செய்ய வேண்டிய ஒரு நன்றிக் கடன் அல்ல. மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் , ஒவ்வொரு முறை உண்ணும் போதும், அவசியம் செய்ய வேண்டிய ஒரு நன்றிக் கடன். இதில் சாதிக்கோ, குலத்துக்கோ இடம் கிடையாது.

இது ஒரு வாழ் நெறி, ஒரு மரபு.


இலையில் இருக்கும் அன்னத்தை, உணவை, நிவேதனம் செய்யும் பாங்கில், நீரால் சுற்றி,


பிராணாய ஸ்வாஹா

அபானாய ஸ்வாஹா

உதானாய ஸ்வாஹா

வியானாய ஸ்வாஹா

சமானாய ஸ்வாஹா


என்று ஐந்து வாயுக்களுக்கும், அர்ப்பணம் செய்துவிட்டு, கடைசீயில்

இந்த ஐந்து வாயுக்களுக்கும் தலைவ்னாக இருந்து, பிரம்மமாக

ஒளிர்ந்து கொண்டிருக்கும், ஈஸ்வரனுக்கு


பிரம்மணே ஸ்வாஹா


என்று அர்ப்பணம் செய்கிறோம்.  இப்படி செய்யும் போது, ஒவ்வொரு பருக்கையாக எடுத்து உள்ளிருக்கும் உத்தமர்களுக்கு, பல் பட்டு சேதப்படாமல், முழுதாக விழுங்கி அர்ப்பணம் செய்ய வேண்டும்.


என்று சுமார் நாற்பது நிமிடம் பேசினார். அதற்குள், இலையில் போட்ட அன்னம்

காய்கறி எல்லாம் ஆறிப் போய், கை காய்ந்து போய், மறுபடி எல்லாவற்றையும் சுடப்பண்ணி பரிமாறி அன்றைய  மதிய சாப்பாடு இப்படி முடிந்த்து


ஸ்ரீ அப்பண்ண சுவாமிகளுக்கு பெரிய திருப்தி. . ஒரு மந்திரத்தின் உண்மையான பொருளும், காரணமும், தெரிய வந்ததற்கு, இந்த மதிய சாப்பாடு காரணமாக இருந்ததே என்று.


சாப்பிட்ட அனைவரும், நான் உட்பட, மகிழ்ச்சியுற்றோம். இனி பரிசேஷணம் செய்யும் போது, நல்ல உணர்வோடும், பக்தியோடும், வாயுக்களுக்கும், அவைகளில் தலைவனான பிரம்மத்துக்கும், உளமாற நன்றி சொல்லி

உணவு அருந்துவோம்.

No comments:

Post a Comment