Friday, July 26, 2019

Vishnu Sahasranama 489 to 506 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

விஷ்ணு ஸஹஸ்ர நாமம்

489. கபஸ்திநேமி: -ஆயிரம் ஆரங்களுடைய பிரகாசமான சக்கரத்தை தரித்தவர். சூர்ய மண்டலத்தின் நடுவில் பிரகாசிப்பவர். அந்தராதித்யே ஹிரண்மய: புருஷ:: த்ருச்யதே – உபநிஷத்

490. ஸத்வசஸ்த்த: -சத்வ குணத்தில் நிலை பெறுகிறவர். எல்லா உயிர்களிடமும் உறைபவர்.

491. ஸிம்ஹ: சிஞ்சதி மேகை: ப்ருதிவீ கர்மபலை: வா- பூமியில் மழை பொழியச்செய்பவர் அல்லது கர்மபலனைக் கொடுப்பவர். ஸிம்ஹ என்ற சொல் சாதாரணமாக நரசிம்ஹாவதாரத்தைக் குறிக்கும் . ஆயினும் இது ஒன்றுக்கு மேற்பட்ட இடத்தில் கூறியுள்ளதால் பீஷ்மர் ஒரே நாமத்தைத் திரும்பச் சொல்லி இருக்க மாட்டார் என்ற எண்ணத்தில் இது இவ்விதம் விவரிக்கப்படுகிறது.

.சிம்ஹம் போல் காம்பீர்யம் உடையவர் என்றும் கொள்ளலாம் கோளரி மாதவன் என்று ஆண்டாள் வர்ணித்தபடி.

492.பூதமஹேச்வர:- எல்லாப்ராணிகளுக்கும் எல்லாதேவர்களுக்கும் ஈஸ்வரர்.,.

493. ஆதிதேவ: - எல்லாதேவர்களுக்கும் முதலானவர் பூர்வோ யோ தேவேப்யோ ஜாத: - புருஷசூக்தம்.

494. – மஹாதேவ:- தேவர்களுக்கு மேலானவர்.
495. தேவேச:- தேவர்களின் தலைவன்

496. தேவப்ருத்குரு: -தேவர்களை ரட்சிப்பவர். அவர்களின் குருவானவர். ஹயக்ரீவராய் பிரம்மாவுக்கு வேதத்தை உபதேசித்ததால்.

498. உத்தர: -உத் தரதி இதி உத்தர: - தேவர்களை அசுரர் ஆதிக்கத்திலிருந்தும் ஜீவர்களை சம்சார சாகரத்தில் இருந்தும் தூக்கிவிடுபவர். எல்லாவற்றிலும் சிறந்தவர் என்றும் பொருள் கொள்ளலாம்

499. கோபதி:- கோ என்ற சொல் வேதம், வாக்கு, பசு, இந்த்ரியம் , பூமி என்று பல பொருள்கள் கொண்டது. (ref. govindha naama 190)அதனால் கோபதி என்றால் வேதங்கள் வாக்கு இவற்றின் அதிபதி. இந்த்ரியங்கள், பசுக்கள் , தேவர்கள் இவர்களின் ரக்ஷகர்.

500. கோப்தா- குப் என்ற வினைச்சொல் ரக்ஷித்தலையும் மறைத்தலையும் குறிக்கிறது. உலகங்களின் ரக்ஷகர் அல்லது தன்னைப்பற்றிய உண்மையை மறைப்பவர். 'நாஹம் பிரகாச: ஸர்வஸ்ய,, நான் எல்லோராலும் அறியப்படுபவதில்லை. ' கீதை .' ஏகோ தேவ: ஸர்வபூதேஷு கூட: '- பிரம்மம் எல்லாவற்றிலும் மறைந்துள்ளது. – உபநிஷத்

501. ஞான கம்ய: - ஞானத்தினால் மட்டுமே அறியக்கூடியவர்.

502. புராதன: -காலவரையில்லாமல் எப்போதும் இருப்பவர்.

503.சரீரபூதப்ருத் – சரீரங்களுக்குக் காரணமான பஞ்ச பூதங்களை பிராண ரூபியாகத் தாங்குகிறவர்.

503- போக்தா-எல்லாவற்றையும் அந்ததந்த வடிவில் அனுபவிப்பவர். 'உபத்ரஷ்டா அனுமந்தா ச பர்த்தா போக்தா மஹேஸ்வர: ,' எல்லாவறிற்கும் மேற்பார்வையாளராகவும், அனுமதி தருபவராகவும், தாங்குபவராகவும், அனுபவிப்பராகவும் இருப்பவரான மஹேசவரன். – கீதை

505. கபீந்திர:- கபி என்றால் சலனம் , குரங்கு, காட்டுப்பன்றி. இங்கு கபீந்திர: என்றால் எல்லாவற்றிற்கும் செயலாற்றும் சக்தியை கொடுப்பவர். அல்லது கை என்றால் வராஹம் என்று எடுத்துக் கொண்டால் வராஹாவதாரத்தையும் , குரங்கு என்று எடுத்துக் கொண்டால் ராமாவதாரத்தையும் குறிப்பிடுவதாகக் கொள்ளலாம்.

506. பூரி தக்ஷிண:- பூரி என்றால் அதிகமான என்று பொருள் தக்ஷிண என்பது பொருளாகவோ வஸ்துவாகவோ யாகயக்ஞங்களில் தரப்படும் தட்சிணை. ராமாவதாரத்தில் பட்டபிஷேகத்தின் பின் ராமர் ஏராளமாக தக்ஷிணை கொடுத்தார். கிருஷ்ணாவதாரத்திலும் குருவுக்கு அவருடைய இறந்த மகனை திரும்பக் கொண்டுவந்து தக்ஷிணையாக அளித்தார். பரசுராமாவதாரத்தில் காச்யபருக்கு பூமியை தட்சிணையாக அளித்தார். 
தக்ஷ என்ற சொல் திறமையையும் குறிப்பிடுவதால் பகவானின் அளவிலா திறமையைக் குறிக்கிறது.

  

No comments:

Post a Comment