Wednesday, July 31, 2019

Tamil poem on Krishna

Courtesy:Smt.Padma Gopal

(மீள் பதிவு..)

(தேன் சிந்துதே வானம்...)

மானொன்று, தனைமறந்து,
தேன்பருகுதிங்கே!
வீண்துளியும் ஆகாதே−
வான்பொழியுதங்கே!

இன்னம், இன்னம், வேண்டுமென−
ஏந்திழையும் கேட்க,
மன்னவனும், மறுக்காதே−
மதுரமழை பெய்வான்!

அன்னமது, அணுவெல்லாம்−
அவனமுதம் ஏற்க,
அண்ணலவன், அகமகிழ்ந்து−
அக்கணமே, தோற்பான்!

வெல்வதுயார், கொள்வதுயார்−
விடைசொல்வது ஆரோ?
மெல்லுணர்வில், விதிகளுமே−
மேதினியில் உண்டோ?

பேடையிடம் தோற்குமயில்−
பரவசமேஆகும்!
கோடைமழை கண்டதுபோல்−
குளிர்ந்து, சுகம்காணும்!

இவரிருவர் இப்படியே−
இன்பமதுகாண−
இடைவரவும், தடைவரவும்,
இங்கொருவர்ஏது?

பொங்கியெழும் உணர்வலையை, இவர்−
பக்குவமாய்ஆள,
இங்கிதமாய் அகல்வோமே−
தம்பதியர் வாழ்த்த!

No photo description available.

No comments:

Post a Comment