Wednesday, July 17, 2019

Sanskrit subhashitam

Subhashita

प्रियप्राया वृत्तिः विनयमधुरो वाचि नियमः
प्रकृत्या कल्याणी मतिरनवगीतः परिचयः।

पुरो वा पश्चाद्वा तदिदमविपर्यासित रसं
रहस्यं साधूनामनुपदि विशुद्धं विजयते॥

priyapraayaa vruttih vinayamadhuro vaachi niyamah

prakrutyaa kalyaaNee matiranavageetah parichayah

puro vaa pashchaadvaa tadidamaviparyaasita rasam

rahasyam saadhoonaamanupadhi vishuddham vijayate

Loving, polite and pleasing interaction with others,  controlled speech, a heart which only thinks of the good of others, introduction which is not boastful, uniform behaviour before and after (when face to face or behind one's back) – these are the secrets of pure, simple and saintly souls.

criticism of someone may be valid, but mouthing it to someone other than the person whom you're criticizing is never to help that person improve, and therefore has great power to harm. Wield that power responsibly. Harm dealt to another person's reputation is a grievous harm indeed.

"Slander or calumny" means to damage the good name of another person by lying.

 "Respect for the reputation of persons forbids every attitude and word likely to cause them unjust injury. ... "Detraction and calumny destroy the reputation and honor of one's neighbor.

Honor is the social witness given to human dignity, and everyone enjoys a natural right to the honor of his name and reputation and to respect. Thus, detraction and calumny offend against the virtues of justice and charity."

Be Calm:
Answering is the oil which feeds the lamp of calumny, silence is the water which extinguishes it."

A vigorous defense could make us appear to be guilty or it could add fuel to the fire stoked by the calumniator. Many times it is best to let the calumniator's fire burn itself out. Furthermore, if our reputation is good then it will speak for us and launching a vigorous defense may not even be necessary.

Translation and Commentary by Vaadhulan
*************************************
சான்றோர் எனப்படுவர் மற்றவர் முகத்திற்கு முன்னும், பின்னும்  அன்பாகவும், பண்புடனும், பாசத்துடனும், இனிமையான மற்றும் கனிவான சொற்களில் பேசி இன்புறுவர். மேலும் மற்றவர்களின் நலனில் அக்கறை கொண்டு இருப்பர். 

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்.
-இராமலிங்க அடிகளார்.

வாயொன்று சொல்லும், மனம் ஒன்று நினைக்கும் மனிதர்கள் தான் இங்கு அதிகம்.  உள்ளும் புறமும் வேறாய் இருக்கும் வஞ்சகர்கள் அவர்களாக வந்து நம்மோடு கலந்து விடுவார்கள். நாம் அவர்களை தேடி போவது இல்லை. நாம் அறியாமல் நடப்பது. எனவே, வள்ளலார், அது போன்ற மனிதர்களின் உறவு கலவாமை வேண்டும் என்று வேண்டுகிறார். 

திருக்குறள்:183

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூறும் ஆக்கம் தரும்.

புறங்கூறிப் பொய்யாக நடந்து உயிர் வாழ்தலை விட, அவ்வாறு செய்யாமல் வறுமையுற்று இறந்து விடுதல், அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைத் தரும்.

ஐயமற்று உறுதியோடு நம்பியவர் வீட்டில் தீமை புரிந்து ஒழுகுபவர், இறந்தவரன்றி வேறு அல்லர்.

துளியும் சந்தேகம் கொள்ளாது, உறுதியோடு நம்பி, நட்புடன் சகஜமாகப் பழக அனுமதித்த பின்,
உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்தாற்போல், அவர்களை புறம் கூறி ஏமாற்றித் துரோகம் இழைத்தவனை என்ன செய்வது? நம்பிக்கைத் துரோகங்களுக்கு மன்னிப்பே இல்லை. பிறகு எப்படிப் பழி தீர்ப்பது? இங்கேதான் வள்ளுவரின் அருமையான பாணி கை கொடுக்கிறது. இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் என்பது போல், இந்த நம்பிக்கைக் துரோகியைச் செத்தாருள் வைத்துவிடச் சொல்லுகின்றார். அதற்கான பொருள் அவரைத் தீர்த்துக் கட்டுவது அல்ல. அவரை வாழ்வில் இனிச் செத்தவராய் நினைந்து தோழமையோ, பகைமையோ பாராட்டாது இருந்து விடச் சொல்லுகின்றார். இதுவே இங்கு மறை பொருள்.

நம்பிக்கைத் துரோகம் இழைத்த இழியவரைச் செத்தவராய்க் கொண்டு தொடர்பைத் துண்டித்து விட்டால், இனிமேலாவது துரோகங்கள் தொடராது, நிகழ்ந்த இன்னல் விரிவடையாது, சாத்வீகமான, அமைதியான முறையில் உணர்ச்சிகளுக்கு அடிமையாகாது, பொறுப்போடு செய்யும் காரியம், கொடுக்கும் தண்டனை என்பது இது தான். கோபத்தை மௌனத்தால் வெல்லுவது போலும், தவறினை நிறுத்துவதோடு, தவறிழைத்தவரையும் தண்டிக்கும் ஒரே விதம்.

துரோகங்களுக்கு மன்னிப்புக் கிடையாது. எனவே மறக்காது அவரை உயிரோடு இருந்தும் இறந்தவராய்க் கொண்டு வாழ்வைத் தொடருங்கள். அவர் செய்த தவறிற்குத் தண்டனை இந்த வாழ்வில் மீண்டும் உங்களது நட்பு, அண்மை கிட்டாது இருக்கட்டும்.

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் உறவுகள் கலக்காது இருப்போமாக.

No comments:

Post a Comment