Friday, July 26, 2019

Godha

கோதைத் துதி-29
(ஸ்ரீரங்கம் முரளீ பட்டர் 27.06.2019)

திருவரங்கநாதனையும், பெரிய பிராட்டியாரையும் சேவித்தப் பலன் "கோதா ஸ்துதி"யினை
சேவிப்பதனால் கிடைக்கும்..!

ஆண்டாளே ஸ்ரீரங்கநாயகியாய் பலவிடங்களில் சேவை சாதித்துள்ளாள்..!

இதனை ஸ்வாமி தேசிகனும் "கோதாஸ்துதி"யினில் கூறியுள்ளார்..!

கோதைக்கு அவரது தந்தையார் பெரியாழ்வார் செய்த அஷ்டோத்திர அர்ச்சனை ஒன்று உள்ளது..!
இது தவிர, சுமார் ஒரு நுாற்றாண்டுக்கு முன் அவரது வம்சாவழியில் வந்த வேதபிரான் பட்டர் மூலமாக ஒரு அஷ்டோத்திரம் கேட்க விழைகின்றாள் ..!

பெரியாழ்வார் பண்ணியது பிரதானமாகயிருக்க,  மற்றொரு அஷ்டோத்திரம் செய்ய மனமில்லை பட்டருக்கு..!  அன்றிரவு அவரது கனவில் ஸ்ரீரங்கநாயகியாய் சேவை சாதிக்கின்றாள் கோதை..! 

கோதை என்றால் தம்முடைய குழந்தைதானே என்ற உரிமையில் மறுத்து விடலாம்..!  ஆனால் ஸ்ரீரங்கநாயகியாய் சேவை சாதிக்கும் போது மறுக்கமுடியுமா.. என்ன..? விதிர்த்து எழுகின்றார் பட்டர்பிரான்..!  அற்புதமான அஷ்டோத்திரம் ஒன்றினை நவில்கின்றார்..!  

அதில் "ஸ்ரீரங்கநாயக்யை நம" என்றொரு பதமும் வருகின்றது..!
-------------------------------------------------------------------

மார்கழித் திருநாள் முடிந்து தைமாதம் 1ம் தேதி ஸ்ரீரங்கத்தில் திருப்பாவைச் சாற்றுமுறை "சங்கராந்தி மண்டபத்தில்" நடைபெறும்..!  இந்த சங்கராந்தி மண்டபம் தாயார் ஸந்நிதியின் நேர் எதிரே அமைநதுள்ளது.  இந்த சங்கராந்தி மண்டபமும்,  தாயார் ஸந்நிதி மூலஸ்தானமும், ஏற்றத் தாழ்வில்லாமல் ஒரே உயரத்தில் அமைந்திருக்கும்..!  இந்தத் திருப்பாவைச் சாற்றுமுறையினை ஸ்ரீரங்கநாயகித் தாயாரும் அங்கிருந்தபடியே கடாக்ஷித்து மகிழ்கின்றாள்..!
---------------------------------------------------------------------

ஆண்டாளுக்கு ஒரு த்யான சுலோகமிது

"கர்க்கடே பூர்வ பல்குண்யாம்
துளசிகாந நோத்பவாம்
பாண்ட்யே விச்வம்பராம் கோதாம் 
வந்தே ஸ்ரீ ரங்கநாயகீம்"

பாண்டிய நாட்டிலுள்ள ஸ்ரீவில்லிபுத்துாரிலே, ஸ்ரீவிஷ்ணுசித்தர் எனும் பெரியாழ்வாருடைய, துளசித் தோட்டத்திலேத் தோன்றியவளாய், திருவாடிப்பூரத்தில் அவதரித்த கோதா என்கிற ஸ்ரீரங்கநாதனின் பத்னியான ஸ்ரீரங்கநாயகியை நமஸ்கரிக்கின்றேன்.

ஸ்ரீரங்கத்திலுள்ளவர்களுக்கு ஸ்ரீரங்கநாயகி என்றால் பெரியபிராட்டியார்..!  

ஸ்ரீவில்லிபுத்துாரில் வாழ்பவர்களுக்கு ஆண்டாள்தான் ஸ்ரீரங்கநாயகி..!

ஸ்ரீரங்கத்தில் வருடத்தில் ஒரு நாள்தான் சேர்த்தி..!  

இங்கோ,.. வருடம் 365 நாளும் சேர்த்திதான்..! 

"அகலகில்லேன்" என்று சதா சர்வகாலமும் உறைந்திருக்கின்றான்..!

ஒருநாள் மட்டிலும் இருந்துவிட்டு, ஊரெல்லாம் சுற்றித் திரிகின்றாயா..என்று, பெரியபிராட்டியாரே, இன்னொரு முறை ஆண்டாளாக அவதரித்து,  தன்னுடனேயே கட்டிப்போட்டிருப்பதாகவேத் தோன்றும் அடியேனுக்கு..!

இரண்டு சம்பவங்கள் -- ஒன்று யசோதை கண்ணனை உரலில் கட்டிய போது ஏற்பட்ட வடு..!  அது இன்றும் பெரியபெருமாளிடத்தில் காணப்படும்..!

இரண்டு, ஆண்டாள் என்னும் அன்புபெருக்கிற்கு அடிமையாகி, அவன் அவளிட்ட வழக்காயிருந்து, கடாக்ஷிப்பது..!

ஸ்ரீரங்கநாதனை சேவித்தால் கூட கடாக்ஷம் கிடைக்குமோ.. கிடைக்காதோ..!  

ஆண்டாளுடன் அவனிருக்கும் ஸ்ரீவில்லிபுது்துாரிலே நமக்குக் கடாக்ஷம் நிச்சயம்..!  நம் நலம் காக்க, வில்லிபுத்துார் கோதையுள்ளாள்..! 

"....ஸாக்ஷாத் க்ஷமாம் கமலாமி வாந்யாம்.." என்கிறார் ஸ்வாமி தேசிகன்..!  "கருணையே உருவான பெரிய பிராட்டியார.." என்கிறார்..!

 ஆக அற்புதமான இந்த கோதாஸ்துதி, "ஸ்ரீரங்கதிவ்யதம்பதி"களின் பரிபூர்ண அருளை அளிக்கும் என்பது சத்தியம்..! 

29.
இதி விகஸித  பக்தே ருத்திதாம்  வேங்கடேசாத் 
பஹூ குண ரமணீயாம் வக்தி கோதாஸ் துதிம்  ய : |
ஸ  பவதி  பஹூ மாந்ய :  ஸ்ரீமதோ ரங்க பர்த்து :
சரண கமல  ஸேவாம் சாச்வதீ  மப்யுபைஷ்யந் ||

பக்தியின் பெருக்காக, வேங்கடேச கவியிடமிருந்து, பற்பல காவ்யங்களின் குணங்களை உடைய
இந்த கோதா ஸ்துதியைப்  பாராயணம் செய்பவன், ஸ்ரீ ரங்கநாதனின் திருவடியில், அவ்வுலகில் நீண்ட காலம் ,  கைங்கர்யம் செய்வதோடு மட்டுமல்லாமல், இவ்வுலகிலும்  அவனுடைய க்ருபைக்குப் பாத்ரமாவான் ..!

ஆசார்ய ஸார்வபௌமன்  ஸ்வாமி  தேசிகன் அருளியுள்ள ஒவ்வொரு ஸ்துதியும் ,ஆச்சர்யமான ,நுட்பமான பற்பல விஷயங்களை உள்ளடக்கியது."

 பூ ஸ்துதி "என்பதாக, பூமிப் பிராட்டியை ஸ்தோத்ரம் செய்தவர், பூமிப் பிராட்டியின் அவதாரமான  கோதையை  இங்கு  28 சுலோகங்களால் ஸ்தோத்ரம் செய்கிறார்..!

இது கோதா பரிணயம் என்பர்,ஆன்றோர் ..!

இவள் ஸ்ரீ ஆண்டாள் ; ரங்கநாதனையே மலர்மாலை சூடிக் கொடுத்து ஆண்டவள்;  ஆடி மாதம் பூர      ( பூர்வ பல்குனி ) நக்ஷத்ரத்தில் அவதரித்தவள்.  

பூமிப் பிராட்டியே ,கோதாப்பிராட்டி. 

பூமிப் பிராட்டியை ஸ்தோத்தரித்தால், இந்த ஸ்தோத்ர மணிகளில், பெரிய பிராட்டி ரங்கநாயகியையும், ஸ்ரீரங்கச்செல்வனாகிய ரங்கநாதனையும்  ஸ்தோத்ரம் செய்ததற்கு ஒப்பாகும். 
He, who  utters this " Goda Stuti"  which is very beautiful by possessing various qualities , and given by Sri Venkatesa Kavi, becomes permanently a kainkaryaparan  at the lotus feet  of  Sri Ranganatha ever associated withMahalakshmi  at Paramapatham and also gets krupa  of Sri Ranganatha  here in this world 
(உருபட்டூர் ஸ்ரீ சௌந்திரராஜய்யங்கார் அவர்களின் தமிழாக்கம்..)

கவி தார்க்கிக  ஸிம்ஹாய  கல்யாண குணசாலிநே  |
ஸ்ரீமதே வேங்கடேசாய  வேதாந்த குருவே நம :  ||
                        ஸூபம்

தாஸன் - முரளீ பட்டர்-
#கோதைத்துதி#

No comments:

Post a Comment