Tuesday, May 28, 2019

Karshati,kryshyati, kryshyati

கர்ஷதி இதி கிருஷ்ண.

க்ருஷ்யதி இதி கிருஷ்ண.

குஷ்யதி இதி கிருஷ்ண.

என இவ்வாறு மூன்று 'வ்யுத்பத்தி' (சமஸ்கிருதத்தில் Root Expansion ) அமைந்த அரிய பெரிய பெயர் (மந்திரம்) இதுவாகும். பூர்வாச்சாரியர்கள் இவற்றிற்குக் கூறிய விளக்கங்கள் எவ்வளவு பொருள் பொதிந்தவையாக உள்ளன.

முதலாவதாக, கர்ஷதி என்றால் ஆகர்ஷிப்பது; காந்தம்போல எல்லோரையும் தன்னிடம் இழுப்பவன் எனப் பொருள்கொண்ட காரணப்பெயர். யாரைத்தான் கிருஷ்ணன் காந்தம்போலத் தன்னிடம் கவர்ந்து இழுக்கவில்லை? கோபிகையர், எல்லா மனிதப் பிறவிகள், மாடு, கன்று, மயில், மான் ஆகிய மிருகங்கள், அரசன்முதல் ஆண்டிவரை அவன் இனிய பெயரைக் கேட்டு மயங்காதவர் யார் உளர்?

இரண்டாவதாக, க்ருஷ்யதி: க்ருஷி என்றால், பயிர்களைப் பண்படுத்தி, களை பிடுங்கி வளர்ப்பவன் எனப் பொருள். நமது மனமாகிய வயலில் தகாத எண்ணங்களைக் களைபிடுங்குவதுபோலக் கிள்ளியெறிந்து நம்மைத் தூய்மைபடுத்துபவன் அவன். வெண்ணை எனத் திரண்டுவரும் நமது இருவினைப் பயன்களையும் திருடி எடுத்துக்(பிடுங்கி)கொண்டு நம்மைக் காப்பவன் கிருஷ்ணன். இது இரண்டாவது காரணப்பெயர்.

மூன்றாவதாக, குஷ்யதி: குஷிப்(உற்சாகம்)படுத்துபவன். பேரானந்த முடிவுநிலையைத் தருபவன் அவன். பாலில் தயிர் ஊற்றி உறவு ஊற்றுகிறோம். உறவு ஊற்றுதல் என்பது யாரிடம்? கிருஷ்ணனிடம் தானே? அவ்வாறு அவனிடம் உறவுகொள்ளுதலே முடிவுநிலை. அதுவே பேரானந்தம். தயிர் (ததி) ஆகும் நிலை. தத்யோன்னம் என்பது வைஷ்ணவ சம்பிரதாயத்தில் மிக முக்கியமானது. அதனைப் பெருமாள் கோவிலில் விநியோகிப்பதன் நோக்கமே இந்தப் பேரானந்த முடிவுநிலை பெறுவதை உணர்த்துவதற்காகவேதான்.

No comments:

Post a Comment