Monday, March 18, 2019

Vishnu Sahasranama 65 to 73 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

விஷ்ணு ஸஹஸ்ர நாமம் -10

65. ஈசான: -சர்வபூதநியந்த்ருத்வாத் – எல்லா உயிர்களுக்கும் உள்ள இருந்து அவற்றை நடத்துவதால் ஈசான: என்று சொல்லப்படுகிறான்.
66. ப்ராணத ப்ராணம் ததாதி இதி ப்ராணத:. உயிர் கொடுப்பவன். ப்ராணான் தயதி. கால ரூபத்தில் உயிரை முடிப்பவன்.
67.ப்ராண: - ஜீவஸ்வரூபமாக இருப்பவன். 'ப்ராணஸ்ய ப்ராண:,' (கேனோபநிஷத்)
68. ஜ்யேஷ்ட:-முதன்மையானவன் ஆதிமூலம் .
69. ச்ரேஷ்ட: -மிகச்சிறந்தவன் 
ஜ்யேஷ்ட: ச்ரேஷ்ட: இரண்டும் சேர்ந்து ச்ரேஷ்டானாம் ஜ்யேஷ்ட: சிறந்தவற்றுள் முதன்மையானவன் என்ற பொருள் கிடைக்கிறது. உயர்வற உயர் நலம் உடையவன்.
70.ப்ரஜாபதி: பாதி ரக்ஷதி இதி பதி: காப்பவன். ப்ரஜாநாம் பதி: ப்ரஜாபதி: மக்களைக் காப்பவன். ப்ரஜா என்ற சொல் ப்ரக்ருஷ்டாய ஜாயந்தே , அதாவது விசேஷப் பிறவிகள் என்றும் பொருள் கூறப்படுகிறது. கருடன், விஸ்வக்சேனர் முதைய நித்ய சூரிகள் இதில் அடங்குவர். அவர்களின் தலைவன் என்பது பிரஜாபதி என்பதன் பொருள்.

71.ஹிரண்யகர்ப:- பொன்னிற்கு ஹிரண்யம் என்று பெயர் வந்த காரணம் என்னவென்றால் ஹர்யதி (திரவதாம் ப்ராப்ய) இதி ஹிரண்ய: , நெருப்பிலிட்டால் உருகி த்ரவமாகுவதால். இன்னொரு விளக்கம். ஹர்யதே (காம்யதே) ஜனை: , மக்களால் விரும்பப்படுவதால்.

ஹிரண்யம் கர்பே யஸ்ய ஸ: ஹிரண்யகர்ப:. எல்லா செல்வங்களுக்கும் காரணமானது மட்டும் அன்றி பொன்னைப்போல் நிர்தோஷ , அதாவது மாசில்லாதவன். ஹிரண்யம் எனப்படும் பிரபஞ்ச அண்டத்தினுள் இருப்பவன் ஹிரண்ய கர்பன்.

எல்லோராலும் விரும்பப்படும் அழகிய நன்மை தரக்கூடிய நிரந்தரமான இடம் வைகுண்டம். அதுவே ஹிரண்யம் எனப்படுகிறது. அதனுள் இருப்பவன் ஹிரண்ய கர்பன்.

72. பூகர்ப:-உலகை தன்னுள் அடக்கியவன்.ஒரு தாய் தன் கர்ப்பத்தைக் காப்பது போல நம்மைக் காப்பவன்.

73. மாதவ: - மா என்றால் ஸ்ரீ தேவி. தவ என்றால் பதி.மாதவ : என்றால் :ச்ரிய:பதியான நாராயணன்.
மகாபாரதம் சொல்கிறது. 'மௌனாத் த்யானாத் ச யோகாத் ச வித்தி பாரத மாதவம்.' இதிலிருந்து மௌனம் த்யானம் இதன் மூலம் அறியப்படுபவன் மாதவன் என்ற பொருள் தோன்றுகிறது.

74. மதுசூதன: - மது என்ற அசுரனைக் கொன்றவன் என்று இதற்குப் பொருள். 
மது கைடபன் என்ற இரு அரக்கர்கள விஷ்ணுவின் கர்ணமலம் அதாவது காதிள் உள்ள மெழுகு போல் தோன்றி பிரம்மாவை விழுங்க முற்பட்ட போதுது விஷ்ணுவினால் கொல்லப்பட்டார்கள்.

இதன் உள் அர்த்தம் என்ன என்று பார்த்தால் பகவானின் கர்ணம் அல்லது காது என்பது சுருதி என்று சொல்லப்படும் வேதத்தைக் குறிக்கும். கர்ண மலம் என்பது வேதநிந்தையைக் குறிக்கும். அது ஏன் பகவானிடம் இருந்தே வந்தது என்றால் எல்லாமே அவன் ஸ்ருஷ்டிதானே!

மது என்பவன் வேதத்தை விளக்கி இந்த்ரிய சுகங்களில் திளைப்பதைக் குறிக்கிறான். பகவான் இந்த இந்த்ரிய சுகத்தில் இச்சையை ஒழித்து வேத மார்கத்தில் செலுத்துவதால் மதுசூதனன் எனப்படுகிறான். அதாவது இந்த்ரிய நிக்ரஹம் ஈஸ்வரனின் திருவுள்ளம் இருந்தால் தான் சாத்தியம் என்பதை இது தெரிவிக்கிறது.



No comments:

Post a Comment