Friday, March 15, 2019

Ashtaka, anvashtaka & Shannavati sradhham

அஷ்டகை மற்றும்அன்வஷ்டகை

ஒரு வருடத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள் மொத்தம் தொன்னூற்று ஆறு நாட்கள். இவைகளில் 14 மன்வாதிநாட்கள், யுகாதி நாட்கள் 4, மாதப்பிறப்பு நாட்கள் 12, அமாவாசை 12, மஹாளய பட்சம் 16, வ்யதீபாதம் 12, வைத்ருதி 12, அஷ்டகா 4,அன்வஷ்டகா 4, பூர்வேத்யு 4 நாட்கள். இந்த நாட்களில் செய்யப்படும் தர்ப்பணத்தால் பித்ருக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

மார்கழி ,தை, மாசி ,பங்குனி மாதங்களின் க்ருஷ்ண பக்ஷ ஸப்தமி, அஷ்டமி, நவமி திதிகளில் பித்ருக்களுக்கு சிராத்தம் அல்லது தர்பணம் செய்ய வேன்டும்.

அஷ்டமி அன்று செய்யப்படும் அஷ்டகைய ப்ரதானமாக க்கொண்டு முதல் நாள் சப்தமிக்கு பூர்வேத்யு; என்று பெயர். மறு நாள் நவமிக்கு அநு+அஷ்டகா
==அந்வஷ்டகா என்று பெயர். 

மேற்கூறிய நான்கு மாதங்களிலும் ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் வீதம் 12 தர்பணங்கள் ஷண்ணவதி தர்பணம் செய்பவர்கள் செய்ய வேண்டும்.
இது முதல் பக்ஷம்.

ஷண்ணவதி தர்பணம் செய்ய இயலாதவர்கள் தை மாதம் மட்டும் (மாக மாதம்) ஸப்தமி, அஷ்டமி, நவமி அன்று தர்பணம் செய்யலாம். அல்லது அஷ்டமி ஒரு நாளாவது பித்ருக்களுக்கு தர்பணம் செய்ய வேண்டும்.

தை அமவாசையை அடுத்து வரும் க்ருஷ்ன பக்ஷ அஷ்டமி ஏகாஷ்டகை எனப்படும். அந்த தேவதையை குறித்து ஹோமமும் பித்ரு, பிதாமஹர், ப்ரபிதாமஹர். மாத்ரு, பிதாமஹி, ப்ரபிதாமஹி, விஸ்வேதேவர் இருவர் ஆக எட்டு ப்ராஹ்மனர்களை வரித்து செய்வதால் அஷ்டகா என்று பெயர். 

அஷ்டகா தேவதை பித்ருக்களுக்கு நாம் அளிக்கும் ஹவிஸை அமோகமாக அளவற்றதாக ஆக்கி காமதேனு பால் சுரப்பது போல் சுரப்பதாக கூற பட்டுள்ளது. ஸம்வத்ஸர தேவதையின் பத்நியாகவும் ஏகாஷ்டகை கூறப்பட்டுள்ளது.

மனிதர்களுக்கு விழிப்பை ஏற்படுத்தி அறிவை தரும் உஷஹ் கால தேவதையும் ஏகாஷ்டகையே. இவளே யாகங்களை செய்விப்பவள் என்றெல்லாம் மிக உயர்வாக கூறப்பட்டுள்ளது.

உரல் அம்மி முதலியவையும் இந்த அஷ்டகா சிராத்தம் செய்வதில் உத்ஸாகத்துடன் ஈடுபடுவதாக வேதம் கூறுகிறது.

இதை செய்பவனுக்கு , ஸந்ததி, சாரீர பல விருத்தி, மற்றும் வைதீக கர்மாக்களில் சிரத்தை செய்யக்கூடிய பாக்யம் ஏற்படுகிறது. என்று கூறுகிறது.

இந்த இரண்டு ஸ்ராத்தங்களும் மஹாளய பக்க்ஷத்தை விட மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

No comments:

Post a Comment