ஸ்ரீமத் பாகவதம் - ஸ்கந்தம் 6-அத்தியாயம் 11/12
அத்தியாயம் 1௦
தேவர்கள் அவ்வாறே ததீசி முனிவரிடம் சென்று அவர் உடலை யாசித்தனர், அவர் முதலில் அவர்களை பரிகசிப்பதுபோல் விஷ்ணுவே கூறினாலும் யார் தன்னுடலை விடுவார் என்று கூறினாலும் பிறகு அவர்களிடம், " என் உடலே என்னை விட்டுவிட இருக்கிறது. அதை நானே விடுகிறேன் " என்று கூறி பரப்ரம்மத்தினிடம் லயித்துத் தன் உடலை விட்டார்.
பிறகு இந்திரன் விச்வகர்மாவினால் செய்து கொடுக்கப்பட்ட வஜ்ராயுதத்தை கையில் கொண்டவனாய் அசுரர்களுடன் போரிட்டான். அசுரர்கள் எதிர்த்து நிற்க முடியாமல் தோல்வியுற்றனர்.
அத்தியாயம் 11
அதைக்கண்ட வ்ருத்ராசுரன் கோபம் கொண்டு இந்திரனிடம் கூறினான்.
" பிரம்மஹத்தியும், ப்ராத்ருஹத்தியும் , குருஹத்தியும் செய்த உமது மார்பை என் சூலத்தால் பிளந்து என் கடனைத் தீர்த்துக் கொள்வேன்.
பகவான் பக்தர்களுக்கு சம்பத்தைக் கொடுக்க மாட்டார். பகவானுடைய அருள் எதுமர்ரவர்களால் அடையக்கூடியது. அறம் பொருள் இன்பம் இவற்றை விரும்புவர்க்கு அரியது."
பிறகு வ்ருத்திரன் ஹரியை துதிக்க ஆரம்பித்தான். அவன் கூறியதாவது,
"ஹரியே உன் திருவடியிலேயே நாட்டம் கொண்ட அடியவனாக் நான் திரும்ப ஆகவேண்டும். இன்னை விட்டு நான் எவ்வுலக ஆட்சியையும், சித்ததிகளையும் வேண்டேன்."
"இறக்கை முளைக்காத பறவைகள் தாயைக் காண விரும்புவது போலவும்,, பசியினால் வருந்தும் இளம் கன்றுகள் பால் குடிக்க விரும்புவது போலவும், தூர தேசம் சென்ற கணவனை நோக்கி மனைவி ஏங்குவது போலவும், என் மனம் உன்னைக் காண ஏங்குகிறது. "
"பிரபுவே, கர்மவசத்தால் பிறவிச்சுழலில் அகப்பட்ட எனக்கு உத்தமமான உன் புகழைப் பேசும் பக்தர்களுடைய நட்பு ஏற்படவேண்டும். மர்ரபர்ருகள் அற வேண்டும்."
இதைக்கேட்ட இந்திரன் அதிசயித்ததும் பிறகு அவனுடன் போர் புரிந்த்தும் அடுத்து கூறப்படுகிறது
No comments:
Post a Comment