நாரத சூத்ரம்
சூத்ரம் 27
ஈஸ்வரஸ்யாபி அபிமானத்வேஷித்வாத் தைன்ய்ப்ரியத்வாத் ச
பராபக்தி ஏன் சிறந்தது என்று இந்த சூத்திரம் கூறுகிறது.
பகவானுக்கு அகம்பாவம் வெறுப்பையும் பணிவு ப்ரியத்தையும் தருவதால்.
மற்ற வழிகளை விட பராபக்திதான் சிறந்தது எனபதற்கு சான்று என்னவென்றால் ஞானம், யோகம், தான் என்ற மனோபாவம் போகாத பக்தி இவை எல்லாம் அகம்பாவத்தைக் கொடுக்கலாம். ஆனால் பராபக்தி பணிவை உண்டாக்கும்.
பராபக்திக்கும் சரணாகதிக்கும் அதிக வித்தியாசம் இல்லை. இரண்டிலும் பணிவு, எல்லாம் அவனே என்னும் மனப்பாங்கு, இவை காணப்படுகின்றன.
. 'த்யக்த்வா புத்ராம்ஸ்ச தாராம்ஸ்ச ராகவம் சரணம் கத: ' என்று உற்றார் உறவினர் எல்லாவற்றையும் விட்டு ராகவனை சரணடைந்த விபீஷணனை காப்பது ராமனின் கடமை ஆகிறது. இதுதான் தைன்யம் என்று நாரதரால் குறிப்பிடப்படுகிறது தீனஸ்ய பாவ: தைன்யம் , நான் தீனன், எனக்கு நீதான் கதி என்ற நிலைதான் தைன்யம்.
அகம்பாவத்தினால் பகவான் வெறுப்புறுகிறான் என்பது சரியா?
'ஸமோ அஹம் சர்வ பூதேஷு ந மே த்வேஷ்யோ அஸ்தி ந பிரிய:, "எனக்கு எல்லோரும் ஸமம். வேண்டுபவர் வேண்டாதவர் என்ற பாகுபாடு இன்றி " என்று கீதையில் சொன்னவன் அல்லவா?
இதை எப்படி எடுத்துக்கொள்ளவேண்டும் என்றால் அவன் அகம்பாவத்தை வெறுக்கிறான் அகம்பாவியை அல்ல. அப்படிப்பட்டவரிடம் இருந்து விலகுகிறான்.
பக்தி மார்கத்திலும் கர்வம் வரலாம். மகாபலியைப்போல. அவனுக்கு பராபக்தியைப் புகட்டவே எடுத்தது வாமனாவதாரம்.
உண்மையான பக்தி என்பது பகவானிடத்தில் மட்டும் அல்ல , பிற பக்தர்களிடத்திலும் பணிவுடன், எல்லா உயிர்களிடத்தும் அவனையே காண்பது., மகான்கள் அவ்வாறுதான் வாழ்ந்தார்கள்.
No comments:
Post a Comment