Tuesday, November 20, 2018

Seshadri swamigal - Mechanic...???

ஒரு அற்புத ஞானி J.K. SIVAN 
ஸ்ரீ சேஷாத்திரி ஸ்வாமிகள்

விசித்திர மெக்கானிக்

அந்த காலத்தில் ஒரு விதமான காந்த விளக்கு என்று டைனமோ வைத்து ஒளிரும். மின்சாரம் இன்னும் அதை விழுங்காத காலம். டைனமோ மோட்டார் சக்தி பெற்று டப டப என்று சத்தம் போடும். விளக்கொளி இருளைப் போக்கும். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் முழுதும் இந்தமாதிரி காந்த விளக்கை ஒரு பக்தர் மெய்யப்ப செட்டியார் என்பவர் போட்டு வைத்தார்.

ஒரு நாள் மாலை நாலு மணிக்கு செட்டியார் அன்ன சத்திரத்திலிருந்து அருணாசலேஸ்வரர் கோவிலுக்குள் ஒரு அறையில் இருந்த தான் நிறுவிய காந்த விளக்கு நிலையத்தை பார்வையிடச் சென்றார். போகும் வழியில் ஸ்வாமிகள் நின்று கொண்டு இருந்ததை கவனிக்கவில்லை.

'' போ போ சக்ரம் எங்கே ஓடும் ?'' என்கிறார் ஸ்வாமிகள். செட்டியார் அதை காதில் வாங்கவில்லை. அறைக்குள் சென்றார். உள்ளே காந்த மின் சக்தி உண்டாக்கும் இயந்திரம் ஓட்டும் மெக்கானிக் இருந்தார். செட்டியார் மெக்கானிக்கை மோட்டாரை ஒட்டு என்று சொன்னதும் வழக்கம்போல் மெக்கானிக் மோட்டார் ஸ்விட்ச்சை போட்டார். என்ன பண்ணியும் மோட்டார் அசையவில்லை. சக்கரம் ஓடவில்லை. என்னென்னவோ முயற்சிகள் நடந்தும் மோட்டார் உயிர்பெறவில்லை. இருள் நெருங்கியது. ஆலயம் இருண்டுவிடுமே .

யாரோ ''ஸ்வாமிகளை போய்ப் பாருங்கள்'' என்று சொல்ல செட்டியார் வெளியே வந்து ஸ்வாமிகளைத் தேடினார். நல்ல வேளை ஸ்வாமிகள் குழுமணி நாராயணஸ்வாமி சாஸ்திரியோடு ஆலய பிரஹாரத்தில் நின்று கொண்டு இருந்தார். அவரை அழைதார்கள்

ஸ்வாமிகள் சாஸ்திரியின் தோளில் கையைப் போட்டுக்கொண்டு இயந்திர அறைக்குள் சென்றார். உள்ளே ஒரு பெரிய இயந்திரத்தின் சக்கரம் இருந்தது. அதைக் கையால் தொட்டு தடவினார். வெளியே வந்து அந்த இயந்திரத்தைப் பார்த்து ''சிவலிங்கம் சிவோஹம் '' என்று சொல்லி சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணினார். அவ்வளவு தான். கையை ஜாடை காட்டி மோட்டாரை ஒட்டு என்கிறார். மெக்கானிக் இப்போது ஸ்விட்ச்சை முடுக்கினான். மோட்டார் சக்கரம் தட தட என்று வேகமாக வழக்கம்போல சுழல ஆரம்பித்து விட்டது. டைனமோ இயங்கியது. என்ன ஆச்சரியம்! . சுவாமிகளது அபார சக்தியை அனைவரும் வியக்கும்போது அவர் தான் அங்கே இல்லையே.

No comments:

Post a Comment