Wednesday, November 14, 2018

Narada bhakti sutram part10 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

நாரத பக்தி சூத்ரம் -10

சூத்ரம் 10
அன்யாஸ்ரயாணாம் த்யாக: அனந்யதா
முன் சூத்ரத்தில்,சொல்லப்பட்ட அனந்யதா என்பதன் விளக்கம். 
அனந்யதா என்பது பக்தி ஒன்றே முக்கியமாகக் கொண்டு இறைவன் ஒருவன் மீதே நம்பிக்கை வைத்து இருப்பது. 
விபீஷணன் சொல்கிறான், 'த்யக்த்வா புத்ராம்ஸ்ச தாராம்ஸ் ச ராகவம் சரணம் கத: அதாவது பந்துஜனங்களை எல்லாம் விட்டு ராமனை சரணம் அடைகிறேன் என்று. இதுதான் அனந்யத்வம் என்பதற்கு உதாரணம்.

சங்கரர் ஹரிசரணாஷ்டகம் என்ற ஸ்தோத்ரத்தில் சொல்கிறார்,
ந ஸோதரோ ஜனகோ ஜனனீ ந ஜாயா
நைவாத்மஜோ ந குலம் விபுலம் பலம் வா
சம்த்ருச்யதே ந கில கோபி ஸஹாயகோ மே 
தஸ்மாத் தவம் ஏவ சரணம் மம சங்கபாணே
இதன் பொருள் :
சகோதரனோ, தந்தையோ, தாயோ , மனைவியோ, மகனோ , பிறந்த குலமோ, மற்ற எதுவும் எனக்கு சகாயமாக இல்லை. அதனால் உன்னையே சரணம் அடைகிறேன் சங்க பாணியே.

பகவானை அடைவதற்கு பந்து மித்ரர்களோ அல்லது மற்ற எதுவோ உதவுவதில்லை. ஏநின்றால் இவை அனைத்தும் நம் பற்றை நீக்குவதற்கு பதிலாக அதிகரிககச் செய்கின்றன. அதனால் அவன் திருவடிகளில் சரணம் அடைவதன் மூலம்தான் அவனை அடையமுடியும். இதுதான் அனன்ய பக்தி என்பது.

எப்படி ஒரு பூனைக்குட்டி தாய்ப்பூனையையே நம்பி இருக்குமோ , எப்படி கூட்டில் உள்ள குஞ்சு தாய்ப்பறவை தனக்கு உணவு கொண்டுவந்து ஊட்டும் என்று நம்பி இருக்குமோ அது போல பந்துக்களையும் பிறரையும் இதர உலக வ்யவகாரங்களையும் நாடி இருப்பதை விட்டு இறைவனையே நம்பி அவன் விட்ட வழி என்று இருத்தல் என்பது இதன் பொருள். 
அப்படி என்றால் உற்றார் பெற்றார் எல்லோரையும் துறந்துவிட வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. அதற்கு அடுத்த சூத்ரம் பதிலளிக்கிறது.


No comments:

Post a Comment