Tuesday, November 20, 2018

Free schooling for brahmin kids

Shared as received:

A msg I received. You can publicise it if you feel it worth. Thank you.

*ஆங்கில வழிக்கல்வி - தங்குமிடம் - உணவு - உடை* இலவசம் ....  

பெரிய தொழிலதிபரின் பெரும் முயற்சியினால் காஞ்சி மாவட்டம் - கல்பாக்கம் அருகில்  தமிழக அரசின் அங்கீகாரத்துடன் (ஆங்கில வழி ) ஸ்வாமி தயாநந்தா மெட்ரிகுலேஷன் மேல் நிலைப்பள்ளி ( Higher secondary school ) பெரிய அளவில் தற்போது நடைபெற்று வருகிறது . 

அப்பள்ளியின் கௌரவ ஆலோசகர் மற்றும் முழு  மேற்பார்வையாளராக  கடந்த சில ஆண்டுகளாக அடியேன் கைங்கர்யம் பண்ணி வருகிறேன் . 

அப்பள்ளியில்  உணவும் - உடையும் ,  படிக்கவும் , தங்கவும் இலவசமாக  (  school fees and food  will be  free  )  அளித்து   அதிக பட்சமாக 25  பிராம்மண ( வசதி குறைந்த)  ஆண் மாணவர்களை *ஜூன் 2019* முதல்  சேர்க்க விரும்புகிறேன் .  அதற்கான  பூர்வாங்க வசதியும் நிர்வாகத்தின் மூலமாக ஏற்படுத்தப்பட உள்ளது . இந்த வசதி + 2 வரை கிடைக்கும் .   இதன் முழு பொறுப்பும் அடியேனின் மேற்பார்வையில் நடைபெறும் . 

நமது பிராம்மண சமுதாயத்தைச் சார்ந்த வசதி குறைந்தவர்கள் இதை முழுவதுமாக பயன்படுத்திக்கொள்ள கேட்டுக் கொள்கிறேன் . 

மேலும்  இளையோர் / ஓய்வு பெற்றோர் ஆசிரியராக பணியாற்ற விரும்புபவர்களும் அடியேனை தொடர்பு கொள்ளவும் . 

 *எதிர்கால திட்டம்* விரைவில் அங்கு வேத பாடசாலையும் ஏற்படுத்தப்பட்டு நமது கலாச்சாரப்படி  காலை 6 - 8 மணி வரை  வேத வகுப்புகள் .  

காலை 9 -  00 முதல் மாலை 4 மணிவரை பிற மாணவர்களைப்போல உடையணிந்து சீருடையில்  ரெகுலராக பள்ளிக்குச் சென்று  ஆங்கில வழி அரசுக் கல்வி படிப்பு .

 மீண்டும் மாலை 6.00 முதல் 8.00 மணி வரை வேத வகுப்பு . 

ஒரே நேரத்தில் வேதமும் -  ஸம்ஸ்க்ருத மொழியுடன்  இக்காலத்திற்குத் தேவையான நவீன ஆங்கிலவழி கல்வியையும் நமது ப்ராம்மண குழந்தைகள் சிறு வயதிலேயே  பெறுவார்கள் .

  இது அவர்களின் எதிர்கால வாழ்விற்கு  பேருதவியாக இருக்கும் என நம்புகிறேன் . 

தங்களது உறவினர் / தெரிந்தவர் குழந்தைகள்  யாராவது இருந்தால் அடையாலம் கண்டு உடன் என்னை தொடர்பு கொள்ளச் சொல்லவும் . 

 மேற்கண்ட நமது ப்ராம்மண  சமுதாய நலன் சார்ந்த கௌரவ -   Honorary கைங்கர்யத்தில் இணைய விரும்புபவர்களும் என்னை தொடர்பு கொள்ளவும் . இதில் இணைபவர்கள் யாரும் தங்களது கைப்பணம் செலவழிக்க தேவையில்லை . 

தாஸன் தெய்யார் ராம்ராஜ் . 7010268732.

No comments:

Post a Comment