Tuesday, August 14, 2018

Srimad bhagavatam skandam1 adhyaya 7 in tamil

Courtesy: Smt.Dr.Saroja Ramanujam

ஸ்ரீமத்பாகவதம் - ஸ்கந்தம் 1 அத்தியாயம் 7

அத்தியாயம் 7
பாகவதம் சொல்ல ஆரம்பிக்கும் முன்னர் சூதர் மகாபாரத யுத்தத்தின் முடிவில் நடந்த சம்பவங்கள், பரீக்ஷித்தின் பிறப்பு இவற்றைப் பற்றி சொல்ல ஆரம்பிக்கிறார்.

துரியோதனன் பீமனால் துடையில் அடிபட்டு விழுந்தவுடன் அஸ்வத்தாமன் துரியோதனனை திருப்திப்படுத்துவதாக எண்ணி தூங்கிக்கொண்டிருந்த திரௌபதியின் புத்திரர்களைக் கொன்றுவிட்டான். இது துரியோதனனுக்கே ஏற்புடையதாக இல்லை.

அர்ஜுனன் அவனைப் பழிவாங்க கிருஷ்ணனை தேரோட்டியாகக் கொண்டு அச்வத்தாமனை ஜெயித்து அவனைப் பிடித்துக் கட்டி பாண்டவர் பாசறைக்கு கொண்டு வந்தான். கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு எந்த அளவு தர்மத்த்தில் நாட்டம் என்றறிய அவனிடம் அச்வத்தாமனைக் கொன்றுவிடும்படி கூறினார்.

அவர் கூறியதாவது, 
மத்தம் பிரமத்தம் உன்மத்தம் ஸுப்தம் பாலம் ஸ்த்ரியம் ஜடம்
ப்ரபன்னம் விரதம் பீதம் ந ரிபும் ஹந்தி தர்மவித்
மதுவால் மயங்கினவன் , அஜாக்ரதையாய் உள்ளவன் , பைத்தியம் பிடித்தவன் , தூங்குபவன், ஸ்திரீ, பிரக்ஞை அற்றவன், சரணம் அடைந்தவன், தேரிழந்தவன்,பயந்தவன் இவர்களை தர்மம் அறிந்தவன் விரோதியாயிருப்பினும் கொல்ல மாட்டான். இவன் தூங்குபவர்களைக் கொன்றதால் பெரும் பாபியாகிறான். இவனைக்கொல்வதில் தவறில்லை.

ஆனால் அர்ஜூனன் குரு புத்திரன் ஆகையால் அச்வத்தாமனை கொல்ல விரும்பவில்லை. அவனைக்கட்டி திரௌபதியின் முன் இழுத்துச்சென்றான். ஆனால் திரௌபதி அவனைக் கண்டதும் அர்ஜுனனிடம் குருபுத்திரனான அவனை விட்டுவிடும்படி கூறினாள். அவள் கூறியதாவது,

மாரோதீத் அஸ்ய ஜனனீ கௌத்தமீ பதிதேவதா 
யதா அஹம் ம்ருதவத் சாரதா ரோதிமி அஸ்ருமுகீ முஹு: 
"இவனுடைய அன்னை பதிவ்ரதையான கௌதமி நான் என் புத்திரர்களை இழந்து அழுவதுபோல அழ வேண்டாம்."

தர்மரும் அவளுடைய தர்மமானதும் நியாயமானதும் கருணை உள்ளதுமான வார்த்தையை புகழ அப்போது கோபம் கொண்ட பீமன் தனக்கோ தன் யஜமானனான துரியோதனனுக்கோ ஒரு பயனும் இல்லாத அந்த இழிசெயலை செய்தவனை கொல்லவேண்டும் என்றான். அப்போது கிருஷ்ணர் அர்ஜுனனிடம் கூறினார்.

ப்ரம்ம பந்து: ந ஹந்தவ்ய: ஆததாயீ வதார்ஹண: 
மயைவ உபயம் ஆம்னாதம் பரிபாஹி அனுசாசனம்

" பிராம்மணன் இழிந்தவனாயினும் கொல்லத்தகாதவன், ஆனால் ஆததாயியாக இருந்தால் கொல்லலாம் என்பது ( பிரம்ம ஸ்வரூபமாகிய) என்னாலேயே சாஸ்த்ரத்தில் விதிக்கப்பட்டுள்ளது. ஆகையால் இரண்டையும் அனுசரித்து செய்ய வேண்டியதை செய்வாயாக." \

(AthathAyee is the one who sets fire,,gives poison,,kills one who is without defence, ,confiscates property and appropriates another man's wife.)

கிருஷ்ணனின் குறிப்பறிந்து அர்ஜுனன் கத்தியால் அச்வத்தாமனின் தலயில் இருந்த ரத்தினத்தை குடுமியுடன் அறுத்தெறிந்தான் . சிசு ஹத்தியினால் களையிழந்தவ்னான அஸ்வத்தாமன் ரத்தினத்தையும் இழந்ததால் பிரம்மதேஜஸ்சையும் இழந்தான். ( இது மகாபாரதத்தில் சிறிது மாறுபடுகின்றது.)

தர்ம சாஸ்திரத்தில் குடுமியை அறுத்தல், பொருளைப் பிடுங்கிக் கொள்ளுதல்,இடத்தை விட்டு விரட்டுதல் இவையே பிராம்மணனுக்கு வதமாகும். சரீரவதம் கூடாது. பிரம்ம ஹத்தி தோஷம் வரும்.

அர்ஜுனன் எதிர்த்து வருவதைக் கண்டு அஸ்வத்தாமன் விட்ட பிரம்மாஸ்திரம் உத்தரையின் கர்பத்தில் இருக்கும் சிசுவைத்தாக்க அதை கிருஷ்ணன் காப்பாற்றினார் . அதுதான் பரீக்ஷித். இந்த விவரம் அடுத்த அத்தியாயத்தில் கூறப்படுகிறது.






No comments:

Post a Comment