உ
சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை.கு.கருப்பசாமி.*
--------------------------------------------------------
*நானும் ஆடுகிறேன், பார்க்கலாம்.!*
--------------------------------------------------------
நடராஜர் ஆடிய நடனங்கள் யாவும், இயல்பான களிப்புக்கும், கணத்த செயலுக்கு விடையாகவும் ஆடியவை உண்டு.
பதஞ்சலிக்கு ஆடிக்காட்டியவை இனிமையுடன் கூடிய நடனமாடியதாகும்.
நடராஜப் பெருமான் தன் திருநடனத்தால் ஆடி ஆடவல்லான் என பெயரெடுத்திருப்பதை நினைத்த பார்வதியான காளியானவள், அதை ஒவ்வொரு நேரமும் நினைத்து நினைத்துப் பார்த்தாள்.
ஒரு நாள், ஆடவல்லான் நடராஜரின் கால் சலங்கை ஒலி சப்தம் கேட்டு பார்வதி தேவியான காளி தேவி அவரருகே நெருங்கி வந்தாள்.
*சுவாமி* என கனிவுடன் அழைத்தாள் காளி.
என்ன தேவி? என்றார் நடராஜர்.
ஆடல் என்பது பெண்களுக்கே உரியதான கலை. அதைத் தாங்கள் ஆடி, *ஆடவல்லான்* என்று பெயர் பெறுவது சரியா? என்றாள்.
மேலும், நீர் ஆடி எண்ணையும் வெல்ல முடியுமா? என்றாள் தேவி.
போட்டிக்கு அழைக்கிறாயா? கேட்டார் நடராஜர்.
ஆமாம். முடிந்தால் என்னுடன் ஆடிக் காட்டுங்கள் என்று காளி சவால் விட்டாள்.
சிவபெருமான் சவாலை ஏற்றார்.
ஒருபுறத்தில் காளி நடனமாடத் தயாரான கோலத்துடன் நின்றாள்.
மறுபுறத்தில் நடராஜரும் ஆடத் தயாராக நின்றார்.
ஆட்டம் தொடங்கிட......
சரஸ்வதி வீணையெடுத்து மீட்டினார். நயங்கள் வியாபித்தெழுந்து தவழ்ந்து வந்தன.
நாரதர் யாழைக் கொண்டு இசைத்தார். யாழின் ஒலி எல்லோரையும் கிரகிங்கச் செய்தது.
மத்தளத்தை எடுத்துக் கொண்ட மகாவிஷ்ணு, அதைக் கொட்ட கொட்ட மத்தள இசை கணத்தது.
விடுவாரா? நந்தியெம்பெருமான்!, இவர் தாளமிசைக்கவும் நடன ஆட்டம் தொடங்கியது.
சிவ தாண்டவம் கனிந்து விழைந்தது.
இதை எதிர்த்த, காளி ஆட்டம் கணத்து எதிர்த்தது.
ஈசன், காளி இருவர் ஆட்டத்தையும் கண்டு அங்கிருந்தோர் அனைவரும் கண்டு களித்தனர்.
குனிந்த புருவமும், குமிழ் சிரிப்பும், பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண்ணீரும் உடையவராய் ஆனந்த நடனமாடிய நடராஜ பெருமானின் நடனத்தை தேவர்கள், சித்தர்கள், முனிவர்கள் என அனைவரும் கண்டு மகிழ்ந்திருந்தனர்.
நடனத்தில் இறுதிப் பகுதி நடன வடிவமைப்பை வியாபித்துக் காட்டிய, பெருமானுடைய திருவடிச் சிலம்பிலிருந்து மரகதப்பச்சை ஒன்று தெறித்தது.
அம்மரகதப் பச்சை தென் மேற்குத் திசையின் ஓரிடத்தில் போய் விழுந்தது.
அப்படி அங்கே விழுந்த மரகதப்பச்சை லிங்க உருவமாக மாறியது.
இவ்விதமாக அமைந்ததை தேவர்கள் அசரீரி மூலம் அறிந்து கொண்டனர்.
உடனே அவர்கள் அனைவரும் அந்த இடம் தேடி விரைந்தனர்.
லிங்க உருவினைக் கண்டு களித்து வணங்கினார்கள்.
மரகத மயமான அந்த லிங்க உருவத்தை தேவர்கள் தரிசிக்கும் போது அது பஞ்சவர்ணங்களோடு காட்சி அளித்தது.
பிரமாதி தேவர்கள் அந்த சிவலிங்கத்தை வணங்கி, *பஞ்சவர்ணேஸ்வரர்* எனப் போற்றித் துதித்தனர்.
இத்தலமே இன்று மணிக்குடி என்று வழங்கப்படுகிறது.
இங்குள்ள பஞ்சவர்ணேஸ்வரர் ஆலயத்தின் இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர். இறைவி அருள்மிகு பிருகந்நாயகி.
*பொன் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்திலங்கும், மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை வெள்ளிக் குன்றம்* எனச் சேரமான் பெருமாளும் அருளிச் செய்துள்ளார்.
எனவே, சிவபெருமானுக்கு ஐந்து நிறங்கள் உண்டு என்பது தெளிவு.
ஆட்டத்தில் வெற்றி கண்ட ஆடவல்லானின் மரகத பச்சையில் உருவான இங்குள்ள பஞ்சவர்ணேசுவரர், தன்னை நாடிவரும் பக்தர்களின் முன்னேற்றத்திற்கு துணை நிற்கிறார்.
மன்னர்கள் ஆண்ட காலங்களில், ஈசன் ஒவ்வொரு இடத்திலும் தன்னை வெளிப்படுத்திக் காட்ட, அங்கே ஈசனுக்கு ஆலயங்களை எழுப்பிவித்தனர்.
நம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மகானின் பரம்பரையார்கள், இராமேஸ்வரம், திருப்புல்லாணி போன்ற ஆலயங்களை எழுப்பிவித்தனர்.
ஒருசமயம், மகாபெரியவா சங்கராச்சாரியார் அழைப்பின் பேரில், பசும்பொன் தேவர்மகான், சங்கராச்சாரியாரைச் சந்திக்கச் சென்றார்.
அப்போது மகாபெரியவா பசும்பொன் முத்துராமலிங்க தேவரிடம்,..........
ராமேஸ்வரத்தில் மடம் கட்ட எண்ணியுள்ளோம். அதன் பூமி பூஜைக்கு தாங்கள் செங்கல் எடுத்துத் தர வேண்டும் என்றார்.
அதுபோலவே பூஜைக்கு துணையிருந்தார். மடம் எழ உதவி செய்தார்.
No comments:
Post a Comment