உ
சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை.கு. கருப்பசாமி.*
---------------------------------------------------------
*என்னை உனக்குத் தெரியுமா?............*
----------------------------------------------------------
ஜோதிர் லிங்கத் தலங்களுள் ஒன்றுமாய், முக்தித் தரும் தலங்களுள் ஏழனுள் ஒன்றுமான, தம் வாழ்நாளில் ஒவ்வொருவரும் ஒரு முறையேனும் சென்று வழிபட ஏங்கும் புண்ணிய தலம் காசி.
இங்கே ஓடுகின்ற புண்ணிய நதியான கங்கையில் என்பத்து நான்கு படித்துறைகள் இருக்கின்றன.
இவற்றுள்ளும் அசிசங்கம காட், தசாசுவமேத காட், மணிகர்ணிகா காட், பஞ்சகங்கா காட், வருணா சங்கம காட் எனவாகிய ஐந்தும் மிக சிறப்புடையவை.
*'காசியில் இறக்க முத்தி'* என்பதற்கு ஏற்ப *அரிச்சந்திர காட்டில்* பிணங்கள் எப்போதும் எரிந்து கொண்டிருப்பதைக் கண் கூடாகக் காணமுடியும்.
இத்தலத்திற்கு இறந்து போவதற்கென்றே ஏராளமானவர்கள் வருவர்.
நாள்தோறும் இரவு 7.30 மணியளவில் விசுவநாதர் சந்நிதியில் நடைபெறும் சப்தரிஷி பூசை மிகசிறப்பு.
விஸ்வநாதர் என்றால் அகிலத்தினை ஆள்பவர் என்று பொருள்.
காசி விசுவநாதர் கோயில் என்பது மிகவும் புகழ்வாய்ந்த சிவபெருமானின் கோயிலாகும்.
இக்கோயில் உத்தர பிரதேஷ் மாநிலத்தில் உள்ள வாரணாசி என்னும் இடத்தில் அமைந்திருக்கிறது.
வாரணாசி என்று தற்போது அழைக்கப்பெற்றாலும் பழங்காலத்தில் காசி என அழைக்கப்பட்டமையினால் இத்தலம் காசி விசுவநாதர் கோயில் என அழைக்கப்பட்டு வருகின்றது.
தசாஸ்வேமேத் நதிக்கரையிலிருந்து ஒரு குறுகிய தெரு கோயில் பக்கம் செல்கிறது.
இக்கோயிலில் மணி அடிக்கும் சத்தம் கேட்கும்போது மக்கள் அனைவரும் தலையை குனிந்து கொள்கின்றனர்.
சிவனை இலைகளைப் போல் நிறைய நல்ல பாம்புகளுடன் அலங்கரித்த நிழல்கள் இருக்கும்போது அவர் தலையில் கங்கை நீரை ஊற்ற வைத்தும், ஐந்து தடவை செய்யும் ஆரத்தி முக்கியமானது.
பூஜை நடக்கும்போது நூற்றுக்கணக்கான மணி ஓசைகளும், மேள தாளங்களும் வாசிக்கும்போது கோயிலின் உள்ளே நுழைய மிகவும் உற்சாகம் ஏற்படுத்தும்.
இக்கோயிலின் உயரம் 51 அடிகள். கோயிலின் உள்ளே சிவலிங்கம் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்தச் சிவலிங்கம் காசியில் பிரசித்தி பெற்றது.
கோயிலின் உள்ளே நேபாள மன்னரால் கொடுக்கப்பட்ட ஒரு பெரிய மணி தொங்கவிடப்பட்டு இருக்கிறது.
இதன் சத்தம் நீண்ட தூரம் வரை கேட்கிறது. காலையிலும் மாலையிலும் விசுவநாதருக்குப் பூசைகள் நடத்தப்பெறுகின்றன.
காசி விசுவநாதரால் காசி முக்கிய ஸ்தலமாக இருக்கிறது. கோயிலுக்குச் செல்லும் பாதை மிகவும் குறுகியதாக இருக்கும்.
வாரணாசியில் கங்கை ஆற்றின் கரையில் தினமும் கங்கை ஆற்றுக்கு ஆரத்தி வழிபாடு நடத்தப்பெறுவது கண்கொள்ளாக் காட்சியாகும்.
இந்நிகழ்வைக் *கங்கா ஆர்த்தி* என்கின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்கள், கங்கா ஆர்த்தியை ஆர்வத்துடன் தரிசிக்க வருகின்றார்கள்.
தன்னை தரிசிக்க காசி நகருக்குள் வரும் பக்தர்களுக்குள் காசி விஸ்வநாதர் ஒருநாள், வறியவன் வேடம் எடுத்துக் கொண்டு காசிநகர் முழுவதும் வலம் வந்தார்.
செல்வந்தர்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்று, பசிக்கு உணவு கேட்டார். எல்லா வீட்டுக் கதவுகளும் மூடியபடியே இருந்தது.
ஒருவரும் உணவு அளிக்க கதவைத் திறந்து வெளிவரவில்லை.
பின் நடுத்தர மக்கள் வசிக்கும் இடங்களுக்குச் சென்று, வீடு வீடாக ஏறி இறங்கினார்.
அங்கும் யாரும் உணவிட வரவில்லை.
மாலை ஆறு மணிக்கு மேல் ஆகிவிட்டது. உணவு கிடைக்கவில்லை.
காசியின் கழிவு நீர் கங்கையில் கலக்கும் இடத்தின் பக்கமாக வந்து அமர்ந்தார் ஈசன்.
அங்கே தனியாக ஒரு தொழுநோயாளி அமர்ந்திருப்பதை கண்டு அவரருகே வந்தார்.
அவரைச் சுற்றி நான்கு நாய்கள் வாலை ஆட்டிக் கொண்டு அவரை சுற்றி சுற்றி வண்ணம் இருந்தன.
அவர் எடுத்து வந்திருந்த பிச்சையை விரித்து வைத்து ஐந்து பாகாமாக பிரித்தார்.
பங்கு பிரித்த நான்கு பங்கு உணவுகளை நான்கு நாய்களுக்கு உண்ண வைத்தார்.
மிச்சமுள்ள ஒரு பங்கை அவர் சாப்பிட முனைந்தார்.
அப்போது அங்கு வந்த ஈசன் அவரிடம் எனக்கு, பசிக்கிறது என்று கை நீட்டினார்.
தொழுநோயாளியோ அவர் வாடியிருக்கும் முகத்தை கண்டு, தன் பங்கு உணவை தான் புசிக்காமல்
அவருக்கு எடுத்து நீட்டினார்.
ஈசன் அதிர்ந்துவிட்டார்.
நான் யார் தெரியுமா? என்று தொழுநோயாளியிடம் கேட்டார்.
யாராக இருந்தால் என்ன, முதலில் சாப்பிடுங்கள் என்றார்.
மீண்டும் ஈசன் அதட்டலாக கேட்டார். நான் யார் தெரியுமா? என்று.
தொழுநோயாளி அமைதியாக சொன்னார்....
தெரியும்!, நீங்கள் தான் காசி விஸ்வநாதர் என்றார்.
இறைவன் மீண்டும் கேட்டார்.......
என்னை, உணக்கு எப்படித் தெரியும்?......
தொழுநோயாளியான எண்ணிடமிருந்து அசுத்தமான உணவை என் அழுகிப் போன கைகளால் யார் பெற வருவார்கள்.
கொடுப்பதை பெற்றுக் கொள்ள, இந்த காசி விஸ்வநாதரை தவிர
வேறு யாராலும் இருக்க முடியாது! என்றான்.
எல்லா உயிருள்ளும் உயிராக இருக்கும் ஈசனுக்கு, எந்த உயிர்களுக்குள்ளும் வேறுபாடு பார்க்கத் தெரியாது என்பதை அந்த தொழுநோயாளி, தெளிவாக உணர்ந்து இருந்ததினால், ஈசனுக்கு பதிலுரைத்தார்.
ஈசன் மெய்மறந்து நின்றாலும், தொழுநோயாளிக்கு வீடு பேறு அருள, உமாதேவியாருடன் பிரசண்ணமாகும் நிலையெடுக்க மறைந்தருளி காட்சி தந்தார்.
நாம் ஒவ்வொருவரும், ஈசன் மீது பக்தி வைத்திருக்கிறோம் என்று கூறிக் கொள்வோம்.
ஆனால், அந்த பக்தி எல்லையில்லா நிலைகளைக் கடந்த நம்பிக்கையோடு இருக்க வேண்டும்.
அது நம்மில் பெரும்பாலும் அரிது எனலாம்.
பக்திக்கு எல்லையில்லாத அளவை கடந்தவர்களுக்கே ஈசன், அவரெதில் வந்து நிற்பார்.
மற்றபடி ஒருவித வணக்கத்தை மட்டும், நாம் செலுத்தி வருவதினால் ஏதோ ஒரு வகையான நிம்மதி மட்டுமே நம்மிடம் வந்து சேர்கிறது.
எனவே, ஈசனை அளவு கடந்த எல்லைகளைத் தாண்டி அவனை காதலியுங்கள்.
விடாது அவனைத் துரத்துங்கள். தேடுங்கள். உள்ளத்துக்குள் கூட மறைந்திருந்திருப்பான்.
விடாதீர்கள். அவன்மீது பாடித் துதித்து, உங்கள் முன் வர நீங்கள்தான் ஒழுகியழ வேண்டும்.
அவனிடம் அன்பை விதையுங்கள், நம் தேவையை அவன் அறிவான். தேவையை நீங்கள் கேட்காதீர்கள்.
பிணியானவைகளுக்காக விண்ணப்பம் வைப்பதை தவிர, நலம் வேண்டி விண்ணப்பம் ஏதும் செய்யாதீர்கள்.
என்ன வேனும் என்று, அவன் உங்களிடம் கேட்குமளவிற்கு, நீங்கள் உங்கள் பக்தியை அவனிடம் காட்டுங்கள்.
கைதொழுது தரிசனம் செய்யும் ஒன்றினால் மட்டும் அவனை நாம் பற்றிவிட முடியாது.
வேறொரு நிகழ்வுக்களுக்கெல்லாம் நீங்கள், தன்னலம் பாராது பணிவிடை செய்வது, தொண்டு புரிவது, இயலானவர்க்கு உதவியாக இருப்பது, ஆலய உழவாரம் செய்வது, வருமானத்தில் ஒரு கடுகு அளவாவது, பழைய ஆலயங்களில் ஒளிர எண்ணெய் வாங்கி கொடுப்பது, புணரமைப்பாகும் திருக்கோயில்களுக்கு உபயமளிப்பது போன்ற செயல்களால் அது முடியும்.
இப்போது இராஜபதி கைலாசநாதர் திருக்கோயில் ஏழுநிலைத் திருக்கோபுரம் ஈசனருட் கொண்டு உயர்ந்து வருகிறது.
திருக்கோபுரம் உயர இதுவரை உபயம் அனுப்பாதோர், உங்களின் உபயத்தை அனுப்பி,
மறுபிறப்பில்லா நிலை எய்ய அடியேனின் உளமார எண்ணம்.
பிறப்பில்லா நிலை எய்ய, சிலவானவைகளை நாம் கடையொழுகித்தான் ஆகவேண்டும்.
இராஜபதி கைலாசநாதர் திருக்கோயில் திருக்கோபுர திருப்பணியின் மூன்றாவது நிலை தள பணி பூர்த்தியாகிவிட்டது.
நான்காவது நிலை தள பணி ஈசன் திருவருளாலும், உங்களின் உபயத்தாலும் துவங்க உள்ளது.
இதுவரைக்கும் உபயம் அனுப்பி, திருக்கோபுர வளர்ச்சிக்கு உபயஉதவி செய்த அனைவருக்கும் இராஜபதி கைலாசநாதரின் திருவருள் கிடைக்க, நீண்டபெரு விண்ணப்பம் செய்து வேண்டிக் கொண்டோம்.
ஆக, இதுவரையிலும் அனுப்பாதோர் உங்களின் உபயத்தை அனுப்பி, ஈசனின் அருளைப் பெற்று, பிறப்பில்லா நிலை எய்ய, இராஜபதி திருக்கோபுர நிலைக்கு உபயம் செய்யுங்கள்.
லட்சகணக்கில் வாட்சப் குழு உறுப்பினர்களுக்கும் இதையும் தாண்டிய அளவுடன் முகநூல் உறுப்பினர்களுக்கும் பதிவு சென்றடையச் செய்திருந்தோம்.
சிறு எண்ணிக்கை அளவிலேதான் உபயம் அளித்திருக்கிறார்கள்.
ஒருவர் இருநூறு ரூபாய் வீதம் அனுப்பினால்கூட நம் ஈசன் திருக்கோபுரத் தொகை பூர்த்தியாகியிருந்திருக்கும். அப்படி எதுவும் ஆகவில்லை.
கோபுரத் திருப்பணிக்கு மொத்தம் ஒன்றரைக் கோடி நிர்னயம் ஆகிறது.
இதுவரை 94 இலட்சம் உபயமாக வந்துள்ளது.
இன்னும் 56இலட்சம் தேவையாகவுள்ளது.
உபயம் வந்து சேர்வதை துரிதபடுத்தவே, வாட்சப் குழுவிற்கும், முகநூல் குழுவிற்கும் பதிவுகளைத் தொடர்ந்து தந்து உபயம் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
இதுவரை உபயம் அளித்த அத்தனை உள்ளங்களுக்கும் இராஜபதி கைலாசநாதர் அருள் செய்ய விண்ணப்பம் செய்து கொண்டே இருக்கிறோம்.
2019-ல் திருக்கோபுர திருப்பணி வேலைகள் பூரணமாகி கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தயவு செய்து சிவனடியார்கள் அத்தனை பேரின் திருப்பாத கமலங்களை வீழ்ந்தெழுந்து வணங்கிக் கேட்கிறோம்.
ஒவ்வொருத்தரும் தங்களால் முடிந்த உபயத்தை கைலாசநாதர் வங்கி கணக்கிற்கு, உபயம் செய்ய அடியார்கள் துணை செய்யுங்கள் அடியார்களே!.
ஒவ்வொரு வாட்சப் குழுவின் அட்மின்களும் உறுப்பினர்களும், முகநூல் அட்மின்களும், அந்தந்த குழு உறுப்பினர்களும் உபயம் அளியுங்கள் அடியார்களே!, பெருமான்களே!,
ஆன்மிக அன்பர்களே!
தயவுசெய்து உபயம் அனுப்பி புண்ணியத்தை பெருக்குங்கள்.
தயவு செய்து, இனியும் இந்தச் செய்தியை அறிந்து தங்களால் இயன்றதை திருக்கோபுரம் அமைய உபயம் அளிக்குமாறு மீண்டும் அனைவரின் பாதகமலங்களில் அடியேன் சென்னிமோதி பணிந்துதெழுந்து வணங்கிக் கேட்கிறேன்...
உபயம் அளியுங்கள்!
உபயம் அளியுங்கள்!!
உபயம் அளியுங்கள்!!!
நீங்கள் அளிக்கும் உபயம், உங்கள் கர்ம வினைகளை ஒழிக்கும். புண்ணியம் சேமிப்பாகும்.
நீங்கள் அளிக்கும் உபயங்கள், திருக்கோபுரத்தில், செங்கற்களாய், காரைபூச்சுக்காளாய், வர்ணங்களாய் உங்கள் பெயரைக் கூறிக் கொண்டிருக்கும்.
ஏன், ஆலயத் தரிசனத்திற்கு செல்லும்போது திருக்கோபுரத்தைக் கடந்து போவேமே!, அப்போது ஒவ்வொருவர் மீதும், உங்கள் உபயம், கோபுர நிழலாய் அவர்கள் மீது பதியுமே?. இதனால் அவர்களுடைய ஆசி உங்களுடைய விதியை நல்வழிக்கு இழுத்துச் செல்லுமே!.
இப்புண்ணியம் எதிர்காலத்தில் உங்கள் பிள்ளைகளுக்கு தனமாகத் திரும்புமே!.
உங்கள் *மனம் நினைக்க மகேசன் அருளாவான்!*
*உபயம் ஒன்றளிக்க, உமாவும் அபயமாவாள்!*
உபயம் அனுப்பாதவர்கள் கூடிய விரைவில் அனுப்பி ஈசனின் புண்ணியத்தை தனமாக்கிக் கொள்ளுங்கள்.
புண்ணியம் செய்தனமே மனமே புதுப் பூங்குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்
பண்ணி நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே!
திருக்கோபுர செலவுப்
பணிக்கு, உபயம் முழுமையாகும் முன், உங்களின் உபயத்தை ஆலய வங்கிக் கணக்கில் செலுத்த முந்திக் கொள்ளுங்கள்!
மீதி நிலை தளங்களுக்கும், செங்கல், மணல், கம்பி, சிமிண்டு, பணியாளர்கள் ஊதியம் என்று நிதி தேவை அதிகமிருக்கிறது.
மேலும், ஏழுநிலை திருக்கோபுரத்திலும் இருநூற்று ஐம்பது சுதை சிற்பங்கள் செய்து பொருத்தும் பணியும் இருக்கிறது.
சிவனடியார்கள், வணிகர்கள், பக்தகோடிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து உபயங்களை எதிர் நோக்கி இருக்கிறோம்.
ஆலயத்திற்கு உபயம் செய்வதால், என்னவான பலன் என்று, நம் அனைவருக்கும் தெரியும்.
எனவே, ஒவ்வொருவரும் தங்களது பொருளாதார சூழ்நிலைக்குத் தகுந்த உபயத்தை அனுப்பித் தாருங்கள்.
பணத்தை வங்கி கணக்கில் அனுப்ப வேண்டிய முகவரி.
*கைலாஷ் டிரஸ்ட்*
*Kailash Trust*
*இந்தியன் வங்கி.*
*Indian bank*
**கோவில்பட்டி கிளை*
*Kovilpatti branch*
*A/Ç no: 934827371*
*IFSC code: IDIBOOOKO51*
*Branch code no: 256*
__________________________________
*செக்/டி.டி அனுப்ப வேண்டிய முகவரி:*
*கு.கருப்பசாமி.*
69.B, பெரியசாமி லே அவுட், இரண்டாவது வீதி,
இரத்தினபுரி போஸ்ட்,
கோயமுத்தூர். 641 027
தொலைபேசி: 99946 43516
திருக்கோபுர திருப்பணிக்கு உபயம் செய்யுங்கள்!
திரும்ப பிறப்பில்லா பேறு பெற்றுய்யுங்கள்!!
திருச்சிற்றம்பலம்.
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
No comments:
Post a Comment