உ
சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை.கு. கருப்பசாமி.*
____________________________________
01.07.2018
*தினமும் ஒரு வைப்புத் தல தரிசனம்:*
(எல்லோரும் தரிசிக்கச் செல்வதற்காக..................)
___________________________________
*தேவார வைப்புத் தல தரிசன எண்: 29*
*வைப்புத் தல அருமைகள் பெருமைகள்:*
*🏜கந்தநாதசுவாமி திருக்கோயில், ஏரகரம் (ஏர்):*
____________________________________
*🌙இறைவன்:* கந்தநாதசுவாமி, சங்கரநாதர்.
*🔅இறைவி:* சங்கரநாயகி.
*🌴தல விருட்சம்:* நெல்லி.
*🌊தல தீர்த்தம்:* சரவணப் பொய்கை.
*🍃ஆலயப் பூஜை காலம்:*
தினமும், காலை 8.00 மணி முதல், பகல் 12.00 வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 7.00 மணி வரையிலும் ஆலயம் திறந்துள்ளது.
*📖வைப்புத் தல பதிகம் உரைத்தவர்:*
அப்பர்.
ஆறாம் திருமுறையில், ஐம்பத்தொன்றாவது பதிகத்தில், ஆறாவது பாடலில் இத்தலத்தைப் பற்றிய குறிப்புளது.
மேலும், ஆறாம் திருமுறையில், எழுபதாவது பதிகத்தில், மூன்றாவது பாடலிலும், இத்தலத்தைப் பற்றின குறிப்பு உளது.
*🛣இருப்பிடம்:*
கும்பகோணம் - திருவையாறு சாலையில் மேலக்காவேரியை அடுத்து, *யானையடி* என்னுடத்தில் திரும்பும் சாலையில் ஏரகரம் மூன்று கி.மீ. என்ற பெயர்ப் பலகையுடன் அடையாளம் காணப்படும்.
இச்சாலையில் சென்றால் ஏரகரம் கோயிலை அடையலாம்.
கும்பகோணத்திலிருந்து சுமார் ஐந்து கி.மி. தொலைவில் அமைந்துள்ளது.
தேவாரப் பாடல் பெற்ற தலமான இன்னம்பரில் இருந்து திருப்புறம்பியம் செல்லும் சாலை வழியில் வலதுபுறம் ஏரகரம் செல்லும் சாலை பிரிகிறது.
அவ்வழியாகச் சென்றும் ஏரகரம் அடையலாம்.
இன்னம்பர் மற்றும் திருப்புறம்பியம் தலங்களிலிருந்து சுமார் மூன்று கி.மி தொலைவில் அமைந்துள்ளது.
*📮ஆலய அஞ்சல் முகவரி:*
அருள்மிகு கந்தநாதசுவாமி திருக்கோயில்
ஏரகரம் அஞ்சல்,
கும்பகோணம் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம்,
PIN - 612 303
கோவில் அர்ச்சகர் வீடு அருகிலேயே இருப்பதால் எந்நேரமும் அவரை அழைத்து வந்து தரிசனம் செய்யலாம்.
கோவில் அருகில் விசாரித்தால் அவர் இருக்கும் வீட்டை அடையாளம் காட்டுவர்.
இந்த வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகப் பாடல்களில் கூறப்பட்டுள்ள இரும்புதல், இடவை, ஏமப்பேறூர், சடைமுடி, சாலைக்குடி, தக்களூர், கோத்திட்டை, கோட்டுக்காடு ஆகியவையும் தேவார வைப்புத் தலங்களாகும்.
இந்தப் பதிகம் திருவீழிமிழலை தலத்திற்குரிய பதிகமாகும்
06_,51_,06.
🔔பெரும்புலியூர் விரும்பினார் பெரும்பாழிய்யார்
பெரும்பற்றப்புலியூர் மூலட்டானத்தார்
இரும்புதலார் இரும்பூளை உள்ளார் ஏர் ஆர்
இன்னம்பர் ஆர் ஈங்கோய் மலையார் இன்சொல்
கரும்பனையாள் உமையோடும் கருகாவூர் ஆர் கருப்பறியலூர் ஆர் கரவீரத்தார் விரும்பும் அமரர் இரவுபகல் பரவி யேத்த வீழிமிழலையே மேவினாரே.
🙏🏻கரும்பு போன்று இனிய உமாதேவியோடு பெரும்புலியூரை விரும்பிய பெருமான்,
அவ்வூர் மூலத்தானம், அரதைப்பெரும்பாழி, இரும்புதல், இரும்பூளை, இன்னம்பர்,
ஈங்கோய்மலை, கருகாவூர், கருப்பறியலூர், கரவீரம் என்ற இடங்களில் தங்கித்
தம்மை விரும்பும் தேவர்கள் இரவும் பகலும் முன்னின்று புகழ்ந்து துதிக்குமாறு
வீழிமிழலையையே விரும்பி அடைந்தார் .
இந்தப் பதிகம் திருப்புகலூர் தலத்தில் அப்பர் பெருமான் தங்கி இருந்த போது அருளிய ஷேத்திரக்கோவைத் திருத்தாண்டகம் என்ற பதிகமாகும்.
06_,70-,03.
🔔இடைமருது ஈங்கோய் இராமேச்சரம்
இன்னம்பர் ஏர் இடவை ஏமப்பேறூர்
சடைமுடி சாலைக்குடி தக்களூர்
தலையாலங்காடு தலைச்சங்காடு
கொடுமுடி குற்றாலம் கொள்ளம்பூதூர்
கோத்திட்டை கோட்டாறு கோட்டுக்காடு
கடைமுடி கானூர் கடம்பந்துறை
கயிலாய நாதனையே காணலாமே.
🙏🏻இடைமருது, ஈங்கோய், இராமேச்சரம், இன்னம்பர், ஏர், இடவை, ஏமப்பேறூர், சடைமுடி, சாலைக்குடி, தக்களூர், தலையாலங்காடு, தலைச்சங்காடு, கொடுமுடி, குற்றாலம், கொள்ளம்பூதூர், கோத்திட்டை, கோட்டாறு, கோட்டுக்காடு, கடைமுடி, கானூர், கடம்பந்துறை ஆகிய இவற்றில் கயிலாய நாதனைக் காணலாம்.
*சிறப்பு:*
1120 முதல் 1136 வரை சோழ நாட்டை ஆட்சிபுரிந்த விக்கிரம சோழன் காலத்திய இத்தலத்து கல்வெட்டின் படி *ஏரகரம்* என்ற இத்தலம் *இன்னம்பர்* நாட்டு ஏராகிய *மும்முடி சோழமங்கலம்* என்று அந்நாளில் அழைக்கப்பட்டு வந்ததது.
இதற்கேற்ப இத்தலத்தைக் குறிப்பிடும் வைப்புத்தல பாடல்களில் இன்னம்பர் என்ற சொற்றொடரை அடுத்து இத்தலத்தின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதைக் காணலாம்.
*🏜கோயில் அமைப்பு:*
நான்கு புறமும் மதிற்சுவருடனும் ஒரு முகப்பு வாயிலைக் கொண்டும், ஒரு பிராகாரத்தைக் கொண்டும் இவ்வாலயம் அமைந்துள்ளது.
முகப்பு வாயிலைக் கடந்தால் ஒரு நீண்ட மண்டபம் நேரே இறைவன் சந்நிதிக்குச் செல்கிறது.
நீண்ட மண்டபத்தின் முகப்பிலேயே வலதுபுறம் தெற்கு நோக்கியவாறு அம்பாள் சங்கரநாயகியின் சந்நிதி அமைந்துள்ளது.
மண்டப முகப்பில் இடதுபுறம் நர்த்தன விநாயகர் காட்சி தருகிறார்.
கருவறைக் கோஷ்டத்தில் அமைந்துள்ள தட்சிணாமூர்த்தி கண்டு தரிசிக்க வேண்டிய அமைப்பு.
*தல அருமை:*
இக்கோயிலுக்கு 1982-க்கு பிறகு 2000- ம் வருடத்தில் கும்பாபிஷேகம் நடத்திவிக்கப் பட்டது.
இராஜகோபுர நிர்மாண கும்பாபிஷேத்தை வரும்2012-ஆம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடத்திவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இங்கு அமைந்து அருளும் குமரன் வடிவுடான முருகன், பாலமுருகனாகத் தரிசனம் தருகிறார்.
சூரனை அழிப்பதற்கு முன், அகத்தியர் இத்தலத்திற்கு முருகனை அழைத்து வந்து, அம்மையப்பனைக் காட்டியதாக தகவல் உளது.
முன்பு, இத்தலத்தில் பிராமணர்கள் அதிகமாக வாழ்ந்து வந்த நேரத்தில், எந்நேரமும் வேதமந்திரங்கள் முழங்கிய வண்ணமே இருந்து வந்ததாம்.
முற்காலத்தில், இத்தல அம்பாளிடமிருந்து வேலைப் பெற்றுக் கொண்டு, சுவாமி மலையில் சேர்க்கப்பட்டு வந்திருக்கிறதாம்.
தற்போது, இத்தல அம்பாளிடம் வேல் வாங்கி முருகனுக்குச் சார்த்தப்படும் உற்சவம், சஷ்டியின்போது ஆறுநாட்களாக நடைபெறுகிறது.
சுவாமி புறப்பாடு இல்லை.
அம்பாள் சங்கரநாயகிக்கு, ஆடிப்பூரத்தின்போது, வளையலிட்டு உற்சவம் நடத்தி வைக்கிறார்கள்.
லக்ஷார்ச்சனையும் நடத்திவிக்கின்றனர்.
தர்மகர்த்தாவின் கீழ் இருந்து வந்த இத்திருக்கோயில், தற்போது சுவாமி மலையுடன் இணைக்கப்பட்டு பராமரிப்பில் இருந்து வருகிறது.
*தல பெருமை:*
இக்கோயிலுக்கு 1982-க்கு பிறகு 2000- ம் வருடத்தில் கும்பாபிஷேகம் நடத்திவிக்கப் பட்டது.
இராஜகோபுர நிர்மாண கும்பாபிஷேத்தை வரும்2012-ஆம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடத்திவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இங்கு அமைந்து அருளும் குமரன் வடிவுடான முருகன், பாலமுருகனாகத் தரிசனம் தருகிறார்.
சூரனை அழிப்பதற்கு முன், அகத்தியர் இத்தலத்திற்கு முருகனை அழைத்து வந்து, அம்மையப்பனைக் காட்டியதாக தகவல் உளது.
முன்பு, இத்தலத்தில் பிராமணர்கள் அதிகமாக வாழ்ந்து வந்த நேரத்தில், எந்நேரமும் வேதமந்திரங்கள் முழங்கிய வண்ணமே இருந்து வந்ததாம்.
முற்காலத்தில், இத்தல அம்பாளிடமிருந்து வேலைப் பெற்றுக் கொண்டு, சுவாமி மலையில் சேர்க்கப்பட்டு வந்திருக்கிறதாம்.
தற்போது, இத்தல அம்பாளிடம் வேல் வாங்கி முருகனுக்குச் சார்த்தப்படும் உற்சவம், சஷ்டியின்போது ஆறுநாட்களாக நடைபெறுகிறது.
சுவாமி புறப்பாடு இல்லை.
அம்பாள் சங்கரநாயகிக்கு, ஆடிப்பூரத்தின்போது, வளையலிட்டு உற்சவம் நடத்தி வைக்கிறார்கள்.
லக்ஷார்ச்சனையும் நடத்திவிக்கின்றனர்.
தர்மகர்த்தாவின் கீழ் இருந்து வந்த இத்திருக்கோயில், தற்போது சுவாமி மலையுடன் இணைக்கப்பட்டு பராமரிப்பில் இருந்து வருகிறது.
திருச்சிற்றம்பலம்.
வைப்புத் தலங்களில் நாளைய தலப்பதிவு *கைலாசநாதர் திருக்கோயில், ஏழூர்.*
நீங்கள் ஈசனை நினைந்து நினைந்து உருகுங்கள், அவனாலயச் செலவிற்கு கொஞ்சம் மெனக்கெடுங்கள். இதனால் இக்கட்டான நேரத்தில், ஈசன் அருளுவானாவன்.
உரோமகரிஷி வணங்கி வழிபட்ட நவகயிலாயத் தலங்களில், கேது தலமான தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள இராஜபதி கைலாசநாதர் திருக்கோயில் திருக்கோபுர திருப்பணி வேலைகள் துரித நிலையில் நடந்த வண்ணம் உள்ளது.
மொத்தம் ஏழு நிலைகள் கொண்ட திருக்கோபுரத்தின் திருப்பணி, இரண்டாவது நிலை தளம் முடிந்து விட்டது.
மூன்றாவது நிலை தளம் துவங்க கிரேன் கோவையிலிருந்து கொண்டு செல்லப்படாடு விட்டது.
மீதி நிலை தளங்களுக்கும், செங்கல், மணல், கம்பி, சிமிண்டு, பணியாளர்கள் ஊதியம் என்று நிதி தேவை அதிகமிருக்கிறது.
மேலும், ஏழுநிலை திருக்கோபுரத்திலும் இருநூற்று ஐம்பது சுதை சிற்பங்கள் செய்து பொருத்தும் பணியும் இருக்கிறது.
சிவனடியார்கள், வணிகர்கள், பக்தகோடிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து உபயங்களை எதிர் நோக்கி இருக்கிறோம்.
ஆலயத்திற்கு உபயம் செய்வதால், என்னவான பலன் என்று அனைவருக்கும் தெரியும்.
எனவே, ஒவ்வொருவரும் தங்களது பொருளாதார சூழ்நிலைக்குத் தகுந்த உபயத்தை அனுப்பித் தாருங்கள்.
பணத்தை வங்கி கணக்கில் அனுப்ப வேண்டிய முகவரி.
*கைலாஷ் டிரஸ்ட்*
*Kailash Trust*
*இந்தியன் வங்கி.*
*Indian bank*
**கோவில்பட்டி கிளை*
*Kovilpatti branch*
*A/Ç no: 934827371*
*IFSC code: IDIBOOOKO51*
*Branch code no: 256*
__________________________________
*செக்/டி.டி அனுப்ப வேண்டிய முகவரி:*
*கு.கருப்பசாமி.*
69.B, பெரியசாமி லே அவுட், இரண்டாவது வீதி,
இரத்தினபுரி போஸ்ட்,
கோயமுத்தூர். 641 027
தொலைபேசி: 99946 43516
திருக்கோபுர திருப்பணிக்கு உபயம் செய்யுங்கள்!
திரும்ப பிறப்பில்லா பேறு பெற்றுய்யுங்கள்!!
திருச்சிற்றம்பலம்.
___________________________________
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
No comments:
Post a Comment