உ
சிவாயநம.
திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை.கு.கருப்பசாமி.*
___________________________________
*கூத்தனின் மகளுக்கு அருளிய கூத்தன்:*
____________________________________
முற்காலத்தில் திருச்சி சத்திரத்திற்கு அருகாமையிலுள்ள பெருமுடி என்னும் இவ்வூரில் கூத்தன் என்பவர் வசித்து வந்தார்.
இவர், ஈசன் அகத்தீஸ்வரரிடம் ஆழ்ந்த பக்தி கொண்டிருந்தவர் ஆவார்.
பக்தர்களைச் சோதித்து ஆட்கொள்வது பரமனின் இயல்பானது என்பது ஒல்லோருக்கும் தெரியுந்தானே!
அதுபோல, கூத்தனுக்கும் ஒரு சோதனையை ஏற்பட்டது.
ஒருநாள் எதிர்பாராத விதமாக அவருடைய மகள் நல்ல மங்கைக்கு கண்பார்வை பறிபோனது.
அவளுக்கு கண்பார்வை திரும்ப கிடைக்க வேண்டும் என்பதற்காகப் பல வைத்தியர் களிடம் அழைத்துச் சென்று வைத்தியம் செய்து பார்த்தார் கூத்தன்.
இதனாலும் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
பல வருடங்கள் கடந்தும் போயின. அப்போது, 1268-ல் ஹொய்சாள மன்னர் இராமநாதனின் ஆட்சி நடந்து கொண்டிருந்த கால வேளை.
அந்தசமயத்தில், அகத்தீஸ்வரமுடையாரின் திருக்கோயிலில் திருப்பணி வேலைகள் நடந்து கொண்டிருந்தன.
நிதி பறாறாக்குறையின் காரணமாய், ஆலயத் திருப்பணி வேலைகள் பாக்கியாக நின்றன.
இந்தச் சூழ்நிலையில், கூத்தன் தன் மகளின் சிகிச்சைக்காக வைத் திருந்த மூன்று கழஞ்சு பொன்னை ஆலயத் திருப்பணிக்கு கொடுத்து வழங்கினார்.
திருப்பணிகள் பூர்த்தியாகி கும்பாபிஷேகமும் நடைபெற்றது.
தொடர்ந்து, ஈசன் அகத்தீஸ் வரரின் கருணையால், நல்ல மங்கைக்கு கண் பார்வையும் கிடைத்தது.
இதனால் நெகிழ்ந்துபோன கூத்தன், மறுபடியும் மூன்று கழஞ்சு பொன்னால் பட்டம் செய்து, அகத்தீஸ்வரருக்குச்
சார்த்தி வழிபட்டார்.
இதுபற்றிய விவரத்தை கல்வெட்டிலும் அப்போது பொறித்து வைத்துள்ளனர்.
*கண் நோய் தீர்ந்தது பற்றிய கல்வெட்டில் குறித்திருக்கும் தகவல்:*
இந்தியக் கல்வெட்டறிக்கை எண் : 394 (1939 – 1940)
*சக் கூலிக்கு இவன் இட்ட பொன் கழஞ்சு முக்கழஞ்சு இப்*
*பொன் முக்கழஞ்சும் திருப்பணிக்கு கூ(த்)தன் இட்*
*டான் இதுவும் 19 வது மகரநாயற்று நாள் இந்த கூத்தன்*
*மகள் நல்லமங்கை சிறு வயசிலே கண் ம(றை)ந்த அளவுக்கு இவன் மகள் பின்பு*
*கண் விளங்கி ஐந்நாயனாருக்கு இவன் கழஞ்சு*
*பொன்னிட்டு பட்டம் பண்ணிச் சாத்தினான்.* என உள்ளன.
அகத்திய முனிவர் வழிபட்ட தால் *அகத்தீஸ்வரர்* எனும் திருப் பெயர் ஏற்று ஈசன் அருள்பாலிக்கும் எண்ணற்ற சிவத்தலங்கள் தென்னகத்தில் இருக்கின்றன.
அவற்றில் இந்த பெருங்குடியும் ஒன்றாகும்.
கல்வெட்டுகளில் இத்தலத்தின் பெயரை, *'பெருமுடி'* என்று காணப் படுகிறது.
இறைவனின் திருநாமம் *'அகத்தீஸ்வரமுடையார்'* என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த இறைவனைத் தரிசித்து வழிபட்டால், பார்வை குறைபாடுகள் நீங்குவதாக நம்பிக்கை இருந்து வருகிறது.
இக்கோயிலில், ஸ்ரீதட்சிணா மூர்த்தி சந்நிதிக்கு அருகிலுள்ள கல்வெட்டில், மேலே குறிப்பிடப்பட்ட சம்பவம் இந்த நம்பிக்கையை மெய்யென்று நிரூபித்து உரைக்கிறது!
நமது வினைகள் அறுபட வேண்டுமானால்,.... கூத்தன் எப்படி ஆலயத் தொண்டிற்கு உதவினாரோ, அதுபோல நாம் நம் உழைப்பிலிருந்து கிடைக்கும் ஒரு சிறு உபயத்தை ஆலய புணரமைப்புக்கு அளிக்க முன் வருவோமாக!.
ஈசனுக்கு செய்யும் உபயம் எதுவும், அது பிரதிபலனாக நமக்கே திரும்ப வரும். மேலும் ஈசன் மீது முழூ நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும்.
இது ஆகுமா? ஆகாதா! எனும் மனக்கோணல்கள்கூட நம் மனதில் இருக்கக் கூடாது.
கூத்தனின் மகளுக்கு நீங்கப் பெறாதிருந்த கண்மறைப்புத் தன்மை எப்படி நீங்கிப் போனதோ அதுபோல,.....
பிரதிபலன் பாராது, ஈசனுக்கு உபயம் செய்தோமானால், ஏதோவொரு நம் வினை ஒன்று விலக்கப்படும்.
இதுவே, தொடர்ச்சியாக அவன் மீது பற்றிச் செலுத்தி வரும்போது, பின்னாளில் நம் மனம் ஆணவமலம் இல்லாது சுத்தமாகி இருக்கும்.
*அகத்தியரும், உரோமசமுனிவரும்:*
அகத்தீசரின் சீடன் உரோமசமுனிவர் முக்திபேறு அருளாவதற்கு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்ட ஆதி கைலாசநாதரே இங்கு அருள்பாலித்து வருகிறார்.
இந்த ஆதிகைலாசநாதரிடம் ஏராளமான சக்திகள் பொதிந்து கிடக்கிறது.
ஆலய வணக்கத்திற்கு வருவோர்களையும், ஆலய திருக்கோபுரத்திற்கு உபயம் அளித்து வருவோர்களையும்,
தெய்வீக ரகசியங்களாக அருட் காட்சியை வழங்கிக் கொண்டிருக்கிறார்.
ஆதி அந்தமில்லா அற்புத வரலாறு உடையவன் இக்கயிலைநாதன்.
இங்கிருக்கும் ஆதிகயிலாசநாதரிடம் புண்ணிய சக்திகளும், தெய்வீக சக்திகளும் பெரும்பெரும் பொதிகளாக அருளிய வண்ணமுள்ளதை ஏனையோர் அனுபவித்துக் கூறினர்.
உபயம் அளித்த நிறைய பக்தர்கள், இங்கு வந்து வணங்கிச் சென்று வந்து அருள்மழையை வாசித்தனர்.
அருட்பெருஞ் சோலை போலான இவ்விடத்தில் திகழும் ஈசனின் தனிப் பெருங்கருணையை இன்னவென்றே முழுமையாக கூறிவிட முடியாது.
அவர் கருணையை நினைத்து வணங்கிக் கொள்ள வாருங்கள், உபயம் அளித்து, அவரருளுட்பேறு பெற்று நிம்மதியை சுமந்து செல்லுங்கள்.
*எட்ட எட்ட எட்டாதது!*
*கிட்ட கிட்ட கிட்டாதது!*
*நிட்ட நிட்ட நிட்டாதது!*
*அண்ணாக்கு சுவை சொட்ட சொட்ட சுட்டாதது!*
என்று அகத்திய கிரந்தங்கள் ஈசன் எழுந்தருளியுள்ள கருணையைப் பற்றி வியந்து உரைக்கின்றன.
அகத்தியர் உரைத்த அந்த லிங்கமே உரோமசமுனிவரால் வணங்கப்பட்டவையாகும்.
*🌊தாமிரபரணியின் ஆசை:*
தாமிரபரணி நதிக்கும் வெகுநாளாய், ஒரு ஆசை இருந்து வந்தது.
ஆமாம்,.... தினமும் சிவாச்சாரியாரே கயிலாசநாதனை அபிஷேகிக்கிறாரே, நாமும் ஒருநாளாவது அபிஷேகிக்கலாம் என்று முடிவெடுத்த தாமிரபரணியானவள், வெள்ளமாக பொங்கிவந்து கயிலாசநாதனைஅள்ளி அபிஷேகித்து, கயிலாசநாநனையும் தன் வழித்தடத்திற்கு அழைத்துப் போனாள்.
உரோமசமுனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கதிருவுருதான், நானூறு வருடங்களுக்கு முன்பு தாமிரபரணி வெள்ளத்தில் நீங்கிப் போயிருந்தது.
பின்பு வெள்ள வடிதலுக்குப் பின், லிங்கத்திருமேனி ஊர்க்காரர்களின் கண்களிக்கு காட்சிதந்து அருளானார்.
பழைய இருப்பிடத்திற்கு திரும்பிய கைலாசநாதர், பல வருடங்களாக கீற்று நிழலில் அருள்பாலித்து வந்தார்.
No comments:
Post a Comment