Friday, July 6, 2018

Story of Nanganallur anjaneyar prasadam -Periyavaa

நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலைக் கட்டிய ஸ்ரீ ரமணி அண்ணா பெரியவாளை தரிசனம் பண்ணப் போனார்.

"க்ஷேமமா இரு. இப்போவே நெறைய கூட்டம் வரதாமே? பெரிய ஆஞ்சநேயரோன்னோ.....அதான் அப்படி ஒரு ஆகர்ஷணம். ஆமா, பெரிய ஸ்வாமியாச்சே! அவர் சாப்பிடறதுக்கு நெறைய நைவேத்யம் வேணுமே? என்ன பண்ணறே?" என்றார்.

"தெனமும் ஒரு மூட்டை அரிசி வடிச்சு நிவேதிக்கறோம்"

"சுத்த அன்னமாவா?"

"இல்லே பெரியவா. சித்ரான்னங்களா தயார் பண்ணறோம்."

"என்னென்ன பண்ணறேள்?"

"காலேலேர்ந்து வெண்பொங்கல், சக்கரைப்பொங்கல், புளியோதரை, மிளஹோரை, தயிர்சாதம்னு மாத்தி மாத்தி பண்ணறோம் பெரியவா"

"அவ்வளவையும் வாங்கிக்க நெறைய பக்த ஜனங்கள் வராளோ?"

"அபரிமிதமா கூட்டம் வரது பெரியவா. அத்தனை ப்ரஸாதமும் செலவாயிடறது" என்றார் பெருமையுடன்.

சற்று மெளனமாக இருந்துவிட்டு "ப்ரஸாதத்தை எப்டி குடுக்கறேள்? துளி போறவா? இல்லே, நெறையவா?"

"கையிலே வாழை இலையை குடுத்து வாரிக் குடுக்கறோம் பெரியவா" என்றார் பெருமை பொங்க.

"அதை நானும் இங்க வரவா மூலம் கேள்விப்பட்டேன். அதிருக்கட்டும். ஒன்னை ஒண்ணு கேக்கறேன். ஸ்வாமி ப்ரஸாதத்தை துளியூண்டு ப்ரஸாதமா குடுக்கறது சரியா? இல்லே, சாப்பாடு மாதிரி நெறைய குடுக்கறது சரியா?"

பதில் சொல்ல முடியவில்லை.

"என்ன இப்பிடி ஸ்தம்பிச்சு நின்னுட்டியே? ஒன் மூல்யமா நானும் தெரிஞ்சுக்கலாமேன்னுதான் இதை கேக்கறேன்"

"இல்லை பெரியவா. வரவாள்ளாம் ரொம்ப தூரத்துலேர்ந்துகூட வரா.....பசியா இருப்பா....அதான்......"

"நீ நெனைக்கறது புரியறது. ப்ரஸாதத்தை கொஞ்சமா குடுத்துட்டு, பசியா வரவாளுக்கு ஒக்கார வெச்சு சாப்பாடு போட்டா சரியா இருக்குமோன்னு பட்டுது........நம்ம பண்டிதாளும், ஸாஸ்த்ரங்களும் இப்பிடி பண்ணு. அப்படி பண்ணாதே....ன்னு சொன்னாலும், சில விஷயங்கள் அனுபவ ரீதியா பார்த்தாத்தான் தெரிஞ்சுக்க முடியறது"

"நீங்க என்ன சொல்லறேளோ, அதை பண்ணறேன்"

'நீயே ஒருநாள் தெரிஞ்சுப்பே" முடிவை சொல்லாமலே உத்தரவு குடுத்துவிட்டார்.

சில வருஷங்கள் கழித்து, ஒருநாள் பாண்டிச்சேரி ஆஞ்சநேயருக்கு இதே மாதிரி இலையில் கதம்ப சாதம், தயிர் சாதம் குடுத்துக் கொண்டிருந்தார் ரமணி அண்ணா.

நாலைந்து பேர் அவரிடம் வந்து படுஸீரியஸாக, " ஸாம்பார், தயிர் சாதமெல்லாம் நெறையவே தர்றீங்க.......வாய்க்கும் ரொம்ப நல்லாவே இருக்கு. இருந்தாலும் ஒண்ணு சொல்லறோம். ஸாம்பார் சாதத்துக்கு தொட்டுக்க ஒரு பொரியலும், தயிர் சாதத்துக்கு கொஞ்சம் ஒறைப்பா ஊறுகாயும் வெச்சீங்கன்னா ரொம்பவே நல்லா இருக்கும்" என்றார்கள்.

ரமணி அண்ணாவுக்கு தூக்கி வாரிப் போட்டது! பல வருஷங்களுக்கு முன் பெரியவா சொன்னது உடனே நினைவுக்கு வந்தது. 

"ப்ரஸாதத்தை ப்ரஸாதமா கொஞ்சமாத்தான் குடுக்கணும். அனுபவத்ல புரிஞ்சுப்பே" என்று சொன்ன பாடம் இன்று புத்தி புகட்டியது

No comments:

Post a Comment