Friday, July 27, 2018

Sambandar thevaram sung by M.S

திருஞானசம்பந்தர் தேவாரம் 

சிறையாரு மடக்கிளியே யிங்கேவா தேனொடுபால்
முறையாலே யுணத்தருவன் மொய்பவளத் தொடுதரளந்
துறையாருங் கடற்றோணி புரத்தீசன் றுளங்குமிளம்
பிறையாளன் திருநாமம் எனக்கொருகாற் பேசாயே.

பொழிப்புரை : 

அழகிய சிறகுகளை உடைய இளங்கிளியே! என் பால் வருவாயாக. நான் உனக்குத் தேனையும் பாலையும் மாறி மாறி உண்ணத்தருவேன். நீ செறிந்த பவளங்களையும் முத்துக்களையும் கரைகளில் சேர்ப்பிக்கும் கடல் அருகில் உள்ள திருத்தோணிபுரத்தில் உறையும் இளம்பிறை சூடிய பெருமானின் திருநாமத்தை `ஒரு முறை` என் செவி குளிரப் பேசுவாயாக.


பதிகத்தினிலிருந்து ஒரு பாடலே இங்கு பாடப் பெற்றது 

அனைத்து பாடல்களை முழுமையாக படிக்க கீழே கொடுத்துள்ள உரலியை சொடுக்கவும் 

thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=1&Song_idField=1060


M.S.சுப்புலக்ஷ்மி அம்மாவின் குரலில் 

No comments:

Post a Comment