Monday, July 23, 2018

Muruga -story

சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை. கு. கருப்பசாமி.*
_____________________________________
🌸 *முருகா நீ குறுகு!....*🌸
_____________________________________
கிருத்திகை திருநாளன்று கந்தப்ப ஆசாரியும், மாரிசெட்டியாரும், சென்னை திருப்போரூருக்கு வந்தனர்.

ஒவ்வொரு கிருத்திகையன்றும், சென்னையிலிருந்து நடந்தே சென்று, திருப்போரூர் முருகனை தரிசிப்பது இவர்களது வழக்கம்.

நீண்ட தூரம் நடந்த வந்த களைப்பில், மலையடிவாரத்தில், வேப்ப மர நிழலில், துண்டை விரித்து படுத்து தூங்கி விட்டனர்.

அப்போது, இருவருக்கும் கனவு வந்தது.

அருகிலிருந்த புற்றிலிருந்து பாம்பின் வடிவாக முருகப்பெருமான் வெளிப்பட்டு, மாரி செட்டியாரின் மார்பு மேலேறி, உடலெங்கும் தன் வடிவத்தைக் காட்டி, புற்றுக்குள் தான் வந்த விவரத்தை தெரிவித்தது.

பக்தனே!… அருகில் இருக்கும் புற்றில் நான் இருக்கிறேன். என்னை எடுத்து, சென்னைக்கு கொண்டு போ…என்றார்.

அதே கனவு, கந்தப்பருக்கும் வந்திருந்தனால். இருவரும் கனவைப் பரிமாறிக் கொண்டனர்.

அருகில் இருக்கும் பாம்புப் புற்றை அகழ்த்திப் பார்த்தனர். அதில், அழகு திருமுகத்துடன் முருகப் பெருமான் விக்ரகம் காணப்பட்டது.

இருவருமாக சேர்ந்து முருகனை தூக்க முயன்றனர். அசைக்கக் கூட முடியவில்லை.

*முருகா!, நீ!, குறுகு!* எங்களால் உன்னைத் தூக்க முடியவில்லை.

பிறந்த குழந்தை போலான எடையுடன் காட்சியளித்தால், உன்னைச் சுமந்து செல்ல வசதியாக இருக்கும் எனவே அருள் செய்… என வேண்டினர்.

அடியவர் வேண்டுகோளுக்கு செவி சாய்த்தார் ஆறுமுக கடவுள்.

பெரிய வடிவில் இருந்து, பத்து நாள் குழந்தையைப் போல சிறிய வடிவத்திற்கு மாறிக் காட்சி கொடுத்தார்.

இதனைக் கண்டு, இருவர் கண்களிலும் ஆனந்தக்கண்ணீர் வழிந்தொழுகியது. *அரோஹரா* என்று  கூவி பரவசமடைந்தனர்.

பின், இருவரும் முருகனை சுமந்தபடி, சென்னைக்குச் சென்றனர்.

வழியில், பக்கிம்ஹாம் கால்வாய் குறுக்கிட்டது.

அந்த நேரத்தில், இடியும், மின்னலுமாக மழை கணத்து பிடித்தது.

கால்வாயில் வெள்ளம் இருகரையிலும் கரைபுரண்டு ஓடியது.

என்ன செய்வது என்று புரியாமல் இருவரும் திகைத்த நின்ற போது..........

*கால்வாயில் தைரியமாக இறங்குங்கள்*  என அசரீரி ஒலித்தது.

இதனால், மாரி செட்டியார், விக்ரகத்தை முதுகில் கட்டிக் கொண்டார்.

ஒருவர் கையை, மற்றவர் பிடித்தபடி கால்வாய் வெள்ளத்தில் இறங்கினார்கள்.

சற்று நேரத்தில் இருவரும் கால்வாயில் மூழ்கும் நிலைக்கு வந்தனர்.

அப்போது, இவர்களின் பின்னால் பெருத்த கடலலைபோல வெள்ளம் பொங்கி உயர்ந்து வந்த வெள்ளம், இவர்கள் இருவர் மீது மோதியது........

என்னவென்று  உணர்வதற்குள், இருவரும் எதிர்க்கரையில் பத்திரமாக இருந்தனர்.

பின்பு, இங்கிருந்து முருகனுடன் திருவான்மியூர் வழியாக மயிலாப்பூரை அடைந்த போது நள்ளிரவு ஆகிவிட்டது!.

இதனால், மயிலை குளக்கரையில் இருந்த தென்னஞ் சோலையில்,  இருவரும் கண்ணயர்ந்தனர்.

அப்போது, விபூதி, ருத்ராட்சம், காதுகளில் குண்டலங்கள், சடை, கையில் பொற்பிரம்பு ஆகிய கோலங் கொண்டு, அந்தணர் ஒருவர் பிரம்பால் இவர்களை தட்டி எழுப்பினார்.

என்ன இது!, இப்படித் தூங்குகிறீர்கள்!, ம்... எழுந்திருங்கள், விடிவதற்குள் உங்கள் இடத்திற்கு போய்ச் சேர வேண்டுமே! என எச்சரித்தார்.

இருவரும் கண்விழித்துப் பார்த்தனர். யாரையும் காணவில்லை. தாங்கள் கண்டது கனவே என்று நினைவு வந்தும், அதையும் அலட்சியப்படுத்தாமல், உடனே தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு விரைந்தனர்.

அங்கு, முருகப் பெருமானை பிரதிஷ்டை செய்தனர்.

பதினாறாம் நூற்றாண்டில் நடந்த நிகழ்வு இது!

இந்த முருகப் பெருமான் மீது, பாம்பன் சுவாமிகள், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், வள்ளலார் எனும் ராமலிங்க சுவாமிகள் ஆகியோர் தரிசித்துள்ளனர்.

தருமமிகு சென்னையில் கந்தக்கோட்டத்தில் எழுந்தருளியிருக்கும் முத்துக்குமாரசுவாமி எனும் திருநாமத்துடன் இருக்கிறார்.

புற்றில் வெளிப்பட்ட அதே முருகப் பெருமானை, இன்றும் அங்கே சென்றால், முருகன் அருள் புரிவதை கண்டு வணங்கி வரலாம்.

இப்படித்தான் அவன் வெளிப்பட்டு, நம்மை மேன்மையடைய ஒவ்வொருமுறையும் உணர்த்துவான். அதில் நாமொழுதல் முனைப்பு கொளல் வேண்டும்.

அவன் இருப்பதை, அவன் நமக்கு உணர்த்தினாலே போதும்!, ஆனால், அவன் வெளிப்படும் விதத்தையும் அவனே அருளச் செய்து வெளி வருவான்.

இப்படித்தான், நம் கலி வாழ்வைக் கடந்து செல்லும்போது, ஒவ்வொன்றாய் வெளிப்பட்டு, ஈசன் துணை செய்கிறான்.

என்னைக் காப்பாற்று!, என்பதை விட, என்னை ஒழி!, என்று வேண்டி விரும்பி வணங்க வேண்டும்.

ஏனெனில், நாம் காப்பாற்றப்பட்டால், வெகுவான ஆசைகளே மனதில் புகைந்தெழும்.

ஒழிய நினைந்தால், இக்கலிவாழ் வாழ்க்கையை விட்டுவிட்டு, பிறவாநிலையுடனான முக்திபேறு பெறும் எண்ணமே வளமாக மனதில் தங்கும்.

அந்த சமயத்தில், நம் ஆணவமலம் அழிந்து போய்விடும்.

ஆணவமலம் அழிந்தாலே, மீதியானவை எல்லாமே நல்வனவே ஆகும்.

ஆகையால், நம் வினைப்பயன் அழிய, ஈசன் தன்னை ஒவ்வொரு முறையும் வெளிப்படுத்திக் காட்டிக் கொண்டே இருப்பான்.

அவன் வெளிப்படுவதை உணர்ந்து உருகி, அவனைப் பற்றிக் கொள்ள வேண்டும்.

அவன், எங்கும் விரிய உயர நினைக்கும், சேதி எங்கு கிடைக்கிறதோ, அங்கு நம் பங்கிற்கென்று சிறு தொண்டு, சிறு உபயம் செய்ய வேண்டும்.

இந்த தொண்டும் உபயமும்தான் நம் வினைப்பயனை அறுக்கும்.

இப்படித்தான் பட்டினத்தார் துறவு கொண்டு வெளியே அலைந்து திரிந்த சமயம்.
பட்டினத்தார் முதலில் பெருஞ் செல்வந்தராக இருந்தது எல்லோருக்கும் தெரியும்.

அவர் மகன், கடல்கடந்து சென்று திரும்பிய பிறகுதான், அவருக்கு ஒவ்வொரு செயலின் ஆசைகளைக் கண்டு வெறுப்பு கொண்டார்.

வாழ்க்கை, உறவு, சொந்தம், செல்வம் என்று எல்லாவற்றின்மீதும் வெறுப்புமிழ்ந்தார்.

ஒரு நாள், வயல் வரப்பில், தலையை வைத்து, படுத்திருந்தார்.

அந்த சமயத்தில் வயல் வேளைக்குச் சென்ற இரு பெண்கள் அவரைப் பார்த்து,......

ஏன்டீ!,... அங்க பாரு!, எல்லாத்தையுந் துறந்தாலும், தலையணைசுகமா, மனசு வயல் வரப்பு கேக்குது பாரேன்!, என்று சொல்லிச் சென்றது அவர் காதில் விழுந்து விட்டது.

உடனே பட்டினத்தார், வயல் வரப்பிலிருந்து தலையை விலக்கி, வரண்ட வயலில் தலையை வைத்து படுத்துக் கொண்டார்.

வயலுக்குச் சென்றுவிட்டு திரும்பிய அதே பெண்கள் இருவரும், இப்போது பட்டினத்தாரைப் பார்த்துவிட்டு,..........

அங்கபாருடி, வரப்பை தலையணை சுகம்போல வைத்திருக்கிறாரு என்று நாம சொன்னதற்கு கோபம் பாரேன்!, அதனால, தலையை இழுத்து வரன்ட நிலத்துல வச்சுக்கிட்டாரு பாரு!.

என்னதான் துறவானாலும் *நானென்கிற* கொஞ்சம் இருக்கிறது பாத்தியா! என்றனர்.

சூசகமாக ஒளிந்திருக்கும் ஆணவ வார்த்தையை அப்பெண்கள் உதித்ததை நினைத்துப் பார்த்த பட்டினத்தார், அவர்களை மனதிற்குள் பாராட்டினார்.

இந்த நிகழ்வு மூலமாக அவருக்கு மேலும், *நானென்கிற* ஆவனம் நீங்கிப்போக மேலோன்மையாக இருந்தது அவ்வுணர்த்துதல்.

உலக மாயையில் சிக்காமல், அஞ்ஞானம் விலகி, ஞானம் ஏற்பட்டு சர்வமும் ஈஸ்வர மயமே என்றும், அனைத்தும் பரம்பொருளே என்று எண்ணுகிற நிலையெல்லாம் வந்த பிறகு தான், நாம கேட்கிற முக்தி என்கிற மோட்ச சாம்ராஜ்யத்தை அடைய முடியும்.

இப்போது நாம் நடந்து கோள்ளும் நிலையைப் பார்க்கும்போது, அதன் எல்லைக் கோடு வரையாவது போக முடியுமா என்பது சந்தேகமாக இருக்கிறது.

No comments:

Post a Comment