உ
சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை.கு.கருப்பசாமி*
______________________________________
🍃 *சாப காலத்தை குறைத்த ஈசன்!,*🍃
_______________________________________
பிரமாண்ட நடன நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. சக்தி கணங்கள் ஆனந்தக்களிப்பில் இருந்தனர்.
அந்த நடனத்தை சக்திலோகத்தில் இருந்த அன்னப்பறவைகளும் ரசித்துப் பார்த்தது, அவைகளும் இவர்களுடன் சேர்ந்து நடனமாடின.
சிவனும் பார்வதியும் இந்த நடனத்தைக் கண்டு மகிழ்ச்சியுடன் இருந்தர்.
இந்த வேளையில், சிவனின் தலையிலுள்ள சந்திரனின் கலை ஒன்று காகமாக வடிவெடுத்தது வெளிவந்தது.
அந்த காகம் அங்கிருந்த அன்னப்பறவைகளின் அழகில் லயித்தது. ஏதாவது, ஒரு அன்னத்துடன் உறவு வைத்துக் கொண்டால் என்ன என்று எண்ணியது.
நினைத்தது போலவே ஒரு அன்னத்தை காகம் அழைக்க, அதுவும் காகத்துடன் உறவு வைத்துக் கொண்டது.
அந்த அன்னம் அப்போதே கர்ப்பமடைந்து இருப்பத்தோர் முட்டைகளை இட்டது. இதிலிருந்து இருபது அன்னங்களும், ஒரு காகமும் உருவாயின.
அந்த காகமே மனித ரூபம் பெற்று காக புஜண்டர் என்னும் சித்தராக மாறியது.
நினைத்த நேரத்தில் காகமாக மாறிவிடும் சக்தியும் இந்த சித்தருக்கு இருந்தது.
இந்த கருத்தும் போக, இன்னொரு கருத்தும் நிலவுவதாகவும் உளன.
அது, வாரிஷி என்னும் முனிவர் மீது, கணவனை இழந்த பெண் ஒருத்தி காதல் கொண்டாள்.
முனிவர் அவளைச் சபித்து விட்டார். கணவனை இழந்த நிலையில் இன்னொருவன் மீது நாட்டம் கொண்டதால் உன் வயிற்றில் ஒரு குழந்தை பிறப்பதாக! என சொல்லி விட்டார்.
இதன்படி அந்தப்பெண் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றாள். அந்த குழந்தை சந்திர வம்சத்தை சேர்ந்ததென்றும், அதுவே காகபுஜண்டர் என்னும் சித்தராக மாறியது என்றும் புஜண்டரின் பிறப்பு பற்றி மாறுபட்ட இப்படியான ஒரு கருத்தும் உள்ளன.
உஜ்ஜயினியில் உள்ள மகாகாளர் சிவன் கோயிலுக்கு காகபுஜண்டர் தினமும் செல்வார்.
*ஓம் நமசிவாய* என்னும் திருநாமத்தை ஒரு லட்சம் முறை ஓதுவார். சிறந்த பக்தரான இவரது பக்தியை உலகுக்கு வெளிப்படுத்த நினைத்த சிவன், திருமாலின் வாகனமான கருடனை அழைத்தார்.
கருடனே! இப்பூவுலகில் பிறந்திருக்கும் காகபுஜண்டன் அழிவே இல்லாதவனாக இருப்பான். உலகம் அழிந்தால் தேவர்களும், மனிதர்களும், பூதங்களும் அந்த கல்பத்திற்குரிய பிரம்மனும்கூட அழிந்துவிடுவார்கள் என்பது உலக நியதி.
ஆனால், இந்த காகபுஜண்டனுக்கு உலகம் அழிந்தால்கூட, அழிவு வராது. அந்தளவிற்கு அவன் எனது சிறந்த பக்தனாக விளங்குகிறான், என்றார்.
கருடன் ஆச்சரியத்துடன் பறந்து சென்றான். காகபுஜண்டருக்கோ சிவன் மீதுதான் பக்தி அதிகமே தவிர, திருமால் கோயில்களுக்கு செல்ல மாட்டார்.
போதாக்குறைக்கு திருமாலின் பக்தர்களையும் மதிக்க மாட்டார். காகபுஜண்டரின் குரு, இதற்காக புஜண்டரைக் கண்டித்தார்.
எந்த தெய்வமாயினும் சமமே என்பதை எடுத்துச் சொன்னார். ஆனால், காகபுஜண்டரோ இதைக் கண்டுகொள்ளவேயில்லை.
பொறுமைமிக்க குரு, திரும்பத் திரும்ப அனைத்து தெய்வங்களும் சமமே என்பதை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்.
ஒருமுறை காகபுஜண்டர் மகாகாலர் ஆலயத்தில் சிவனை வணங்கிக் கொண்டிருந்தபோது, அங்கு அவரது குரு வந்தார்.
காகபுஜண்டர் குரு வருவதை அறிந்தும்கூட, அவர் மீது கொண்ட கோபத்தால் எழுந்து மரியாதை செய்யவில்லை.
திருமாலை வணங்கச்சொல்கிறாரே என்ற கோபம் தான் அவரை அப்படி நடந்து கொள்ளச் செய்தது.
இதை, குருவும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், சிவபெருமானுக்கு கோபம் வந்துவிட்டது.
தனது அன்பிற்குரிய பக்தன் என்றுகூட பார்க்காமல்,......... காகபுஜண்டா! குருவுக்கு மரியாதை செய்யாதவன், எனது பக்தனாக இருக்க தகுதியில்லாதவன். நீ இதுவரை ஜபித்த மந்திரங்களின் பலனை இழந்து விட்டாய். திருமாலை மதிக்கும்படி குரு சொன்னதை நீ ஏற்றிருக்க வேண்டும். மேலும் கோபத்தின் காரணமாக குருவிற்கு மரியாதைகூட செலுத்த தவறிவிட்டாய். குருவிற்கு மரியாதை செலுத்தாத நீ பலகாலம் இந்த பூமியில் பத்தாயிரம் பிறவிகளுக்கு குறையாமல் பிறப்பாயாக!. நரக வேதனை அனுபவிப்பாய், என்றார்.
அசரீரியாக ஒலித்த இந்த குரல் கேட்டு காகபுஜண்டர் நடுங்கி விட்டார். குருவிடம் மன்னிப்பு கேட்டார்.
குருவும் புஜண்டர் மீது அன்பு கொண்டு சிவபெருமானை வணங்கி சாபவிமோசனம் தரும்படி கேட்டார்.
குருவின் மனிதாபிமானம் கண்டு மகிழ்ந்த சிவன், பத்தாயிரம் பிறவிகளை ஆயிரம் பிறவிகளாக குறைத்தார்.
பிறவிகளை எடுத்தாலும் பிறவிக்குரிய துன்பங்கள் எதுவும் அணுகாது என்றும், தான் ஏற்கனவே வாக்கு கொடுத்ததைப் போல உலகமே அழிந்தாலும் காகபுஜண்டன் அழிய மாட்டான் என்றும் வாக்களித்தார்.
இப்படி தொள்ளாயிரத்து தொன்னூற்று ஒன்பது பிறவிகளை எடுத்து முடித்த காகபுஜண்டர், கடைசியாக ஒரு அந்தணரின் வீட்டில் பிறந்தார்.
பல அற்புத சித்திகளை நிகழ்த்திக் காட்டினார்.
ஒரு சமயம் சதுரகிரி மலைக்குச் சென்ற காகபுஜண்டர், போகரின் சீடர்கள் சிலரை தனது சீடர்களாக்கிக் கொண்டார்.
சூரசேனன் என்ற சீடன், காட்டில் பழம் பறித்துக் கொண்டிருந்தபோது ஒரு விஷக்கனியை தவறுதலாக சாப்பிட்டு இறந்து போனான்.
அவனுக்கு, நாக தாலி என்ற மூலிகையைக் கொண்டு அவனை உயிர் பெறச் செய்தார் காகபுஜண்டர்.
இப்படி பல அற்புதங்களைச் செய்தார். உலகம் பலமுறை அழிந்தபோதும், அதை உச்சியில் இருந்து பார்த்தவர் காகபுஜண்டர்.
கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கண்டுபிடிக்கும் விதத்தையும், தட்பவெப்ப நிலை மாறுதல் களையும் பற்றி அவர் சில நூல்களில் சொல்லியிருக்கிறார்.
நட்சத்திரங்களில் அவிட்டத்திற்கு சொந்தக்காரர் காகபுஜண்டர்.
ஒருசிலர் காகபுஜண்டரே, சிவனருளால் அவிட்ட நட்சத்திரமாக மாறினார் என்றும் சொல்கின்றனர்.
தனது கடைசிக் காலத்தை காகபுஜண்டர் திருச்சியிலுள்ள உறையூரில் கழித்ததாகவும், அங்கேயே சமாதியானார்.
பொதுவா சாபம் கிடைக்கப் பெற்றவர்கள், அதற்குண்டான செயலில் உழன்றே ஆக வேண்டும் இது நியதி.
ஆனால், கொடுக்கப்பட்ட சாபத்தை குறைத்த செயல் காகபுஜண்டருக்கு மட்டுமே கிடைத்தது.
பத்து ஆயிரம் பிறவியெடுக்கும்படி கொடுத்த சாபத்தை, ஆயிரம் பிறவியாக குறைத்தார் ஈசன்.
அதுபோல, நாம் பெருக்கி பெருக்கி சேர்த்து வைத்திருக்கும், வினைப்பயன்களை அறுக்க, ஆலய புணரமைப்புகள் மூலம் களைய, ஆங்காங்கே ஈசன் திருவருள் செய்து வருகிறான்.
இதை எல்லோரும் சரியாக உணரப் பெறாமல் இருக்கின்றனர்.
ஆலயத் தொண்டு, ஆலய உபயம், போன்றவற்றினால் மட்டுமே, காகபுஜண்டருக்கு சாப காலம் குறைந்தது மாதிரி, நாம் செய்யும் ஆலய உபயத்தால், நம் வினைகளும் குறைந்து அறுபட்டுப் போகும்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கோபுரத் தரிசனம் கோடி புண்ணியம்! இதை கோபுரத்தை காணும்போதெல்லாம் நமக்குத் தோன்றும்.
இதே கோபுரத் திருப்பணிக்கு பங்கெடுத்தீர்களென்றால், எத்தனையோ கோடி புண்ணியம் தனமாகும்.
இதனால் புண்ணியம் தனமாகும். எதிர்காலத்தில் நம் பிள்ளைகளை அது காக்கும்!
புண்ணியம் எங்க செய்ய என்று தேடவேண்டாம். நீங்கள் வாசிக்கின்ற இந்த பதிவுக்கு கீழே இருக்கிறது.
இதில், உங்கள் உபயத்தை ஆலய வங்கி கணக்கில் செலுத்தி, புண்ணிய ரசீதை பெற்றுக் கொள்ளுங்கள்!
இராஜபதி கைலாசநாதர் திருக்கோயில் திருக்கோபுரம் அமைய உபயம் அனுப்பி விட்டீர்களா?
அனுப்பாதோர் உபயம் அனுப்பி, புண்ணியத்தை தனமாக்கிக் கொள்ளுங்கள்.
ஈசனுக்கு, நம்மால் முடிந்த, நம் பொருளாதார சூழ்நிலைக்குத் தகுந்த உபயத்தை அனுப்பி, ஈசனின் புண்ணியத்தை தனமாக்கி, வருங்கால நம் பிள்ளைகளுக்கு விட்டுச் செல்லுங்கள்.
இதுவரை உபயம் அனுப்பிய அனைவருக்கும் 'நன்றி' என்று ஒரு வார்த்தையுடன் முடிக்காமல், ஈசனின் கருணை உங்களுக்கு பிரவாகமாக, ஈசனிடம் விண்ணப்பம் செய்து கொண்டோம்.
இனியும் இந்தச் செய்தியை அறிந்து உணர்ந்திருந்தவர்கள், தங்களால் இயன்றதை திருக்கோபுரம் அமைய உபயம் அளிக்குமாறு அனைவரின் பாதகமலங்களில் அடியேன் சென்னிமோதி பணிந்துதெழுந்து வணங்கிக் கேட்கிறேன்...
உபயம் அளியுங்கள்!
உபயம் அளியுங்கள்!!
உபயம் அளியுங்கள்!!!
நீங்கள் அளிக்கும் உபயம், உங்கள் கர்ம வினைகளை ஒழிக்கும். புண்ணியம் சேமிப்பாகும்.
நீங்கள் அளிக்கும் உபயங்கள், திருக்கோபுரத்தில், செங்கற்களாய், காரைபூச்சுக்காளாய், வர்ணங்களாய் உங்கள் பெயரைக் கூறிக் கொண்டிருக்கும்.
ஏன், ஆலயத் தரிசனத்திற்கு செல்லும்போது திருக்கோபுரத்தைக் கடந்து போவேமே!, அப்போது ஒவ்வொருவர் மீதும், உங்கள் உபயம், கோபுர நிழலாய் பதியுமே. இதனால் அவர்களுடைய ஆசி உங்களுடைய விதியை நல்வழிக்கு இழுத்துச் செல்லும்.
இப்புண்ணியம் எதிர்காலத்தில் உங்கள் பிள்ளைகளுக்கு தனமாகத் திரும்பும்.
*மனம் நினைக்க மகேசன் அருளாவான்!*
*உபயம் ஒன்றளிக்க, உமாவும் அபயமாவாள்!*
உபயம் அனுப்பாதவர்கள் கூடிய விரைவில் அனுப்பி ஈசனின் புண்ணியத்தை தனமாக்கிக் கொள்ளுங்கள்.
புண்ணியம் செய்தனமே மனமே புதுப் பூங்குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்
பண்ணி நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே!
இப்போது, இராஜகோபுரத்திற்கு இரண்டாவது நிலைகைளைத் தாங்கி நிற்கும் சூழ்நிலை நடந்து கொண்டிருக்கிறது.
சிதம்பரம் சென்று வழிபட்டால் முக்தி! திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி! காளையார் கோயிலில் காலடி வைத்தால் முக்தி! திருவாரூரில் பிறந்தால் மோட்சகம்! அது போல, எந்த ஒரு சிவ தல திருக்கோபுரத்திற்கு உபயம் செய்தால் வினை அழியும், புண்ணியம் நல்கும்!
இராஜபதி இராஜகோபுரப் பணிக்கு பங்களிப்பு செய்யும் அடியார் பெருமக்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும் என்பதும், அவர்களின் குடும்பம் சந்ததி சந்ததியாக சகல வளங்களும் பெற்று வாழ்வார்கள் என்பதும் ஆன்றோர்களின் வாக்காகும்.
அதற்கிணங்க இராஜபதி ஆலயத்தில் அமையவிருக்கின்ற இராஜகோபுரத்தால், கோடான கோடி புண்ணியப் பலனை பெறுகின்ற புனிதப் பணிக்கு தாங்கள் மனமுவந்து அளிக்கின்ற ஒவ்வொரு பங்களிப்பும் எம்பெருமான் திருவருளினால் தங்களையும் தங்களின் சந்ததியையும் வாழ வைக்கும் என்பதில் சிறிதேனும் சந்தேகமில்லை. இது நிறுதிடமான உண்மை. சத்தியம்.
எனவே எம்பெருமானின் பாதார விந்தமாக விளங்குகின்ற இந்த இராஜபதி இராஜகோபுரப் புனிதப் பணிக்கு கிள்ளியாவது வழங்குங்கள்! அருளைப் பெறுங்கள்!!
நம் மேல் அடியெதுவும் விழுந்தால் 'அம்மா' என அலறுவோம். அதேபோல வீட்டு நிலையில் இடிச்சுக்கிட்டா, 'சிவ சிவ' என்போம்!
வாசல் நிலையில் தலையை இடிச்சுக்கிட்டா, உடனே 'சிவ சிவ' 'சிவ சிவ' என மொழிவார்களாம்.
அவன் நாமத்தைச் சொல்ல வேண்டும் என்பதற்காகவே, வாயிலின் நிலை உயரத்தை குறைவாக வைத்திருந்தார்களாம்.
இப்போது உயரஉயரமாய் வைக்கிறோம். நிமிர்ந்து செல்கிறோம். நிலை இடிப்பதில்லை, சிவ சிவ என சொல்வதில்லை.
இனியேனும் ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு வேளைக்கும் சிவ சிவ, சிவ சிவ, என மொழிவோமாக!
சிவ சிவ என்றால் தீவினை
மாயும்!
அதற்காக சிவனே என்று இருந்து விடாதீர்கள். ஈசன் கோபுர உபயம் கொஞ்சம் ஞாபகம் இருக்கட்டும்.
----------------------------------------------------------
*🏜இராஜபதி கைலாசநாதர் திருக்கோயில் தல வரலாறு:*
அகத்திய முனிவருக்கு, சீடராகிய உரோமச மகரிஷி சிவமுக்தி வேண்டி சிவபெருமானை வேண்டினார்.
ஈசன் அருளால், அகத்திய முனிவர் உரோமச மகரிஷியை அழைத்து அவர் கையில் ஒன்பது தாமரை மலர்களை கொடுத்து, தாமிரபரணி நதி தொடங்கும் இடத்தில் வடுமாறு கூறினார்.
அப்படி இந்த ஒன்பது மலர்கள் ஒதுங்கும் இடத்தில் சிவபூஜை செய்து வந்தால் உனக்கு முக்திபேறு கிடைக்கும் என்று அருளினார்.
உரோம மகரிஷியும் அவ்வாறே சிவபூஜை செய்து முக்திபேறு பெற்றார்.
நவகிரகங்களும் இந்த ஒன்பது ஆலயங்களை வழிபட்டு, அவரவர்களுடைய அருட்சக்தியை பெற்றன.
உரோமச மகரிஷி வழிபட்டு முக்திபேறு பெற்றமையால், இந்த ஆலயங்கள் நவ கைலாயங்கள் எனப் பெயர் பெற்றது.
இந்த நவகைலாங்கள் மிகவும் பழமை வாய்ந்தவை.
இந்த நவ கைலாயங்களில், எட்டாவது தலமாக விளங்குவது *இராஜபதி கைலாசநாதர் திருக்கோயில்* ஆகும்.
சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்பு, தாமிரபரணி ஆற்றின் வெள்ளப் பெருக்கில், முற்றிலும் அழிவுற்றது.
இதன்பிறகு, கோவில்பட்டி கைலாஷ் டிரஸ்ட் மூலம், நிலம் கையகப்படுத்தி இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டில் பூமி பூஜை செய்து, இரண்டாயிரத்து பத்தாவது ஆண்டில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
வடக்கே காளத்திநாதர் என்றால், இங்கே கைலாசநாதர்.
திருமண, புத்திரபாக்கியம், வியாபாரம், விவசாயம், தொழில் விருத்தி, போன்றவைகளை நிவர்த்தி செய்கிறார் கைலாசநாதர்.
இவ்வாலயத்தில், இராகு, கேது தோஷம், திருமணத் தடை போன்றவைகளுக்குப் பரிகாரமும் செய்யப்படுகிறது.
இவ்வாலயத்தில் பதினாறு பிரதோஷம் பார்த்தால், நினைத்த காரியம் கைகூடும்.
இவ்வாலயத்தில் கண்ணப்ப நாயனார் சந்நிதியும் அமைந்திருக்கிறது.
இங்கு வந்து மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் அபிஷேகம் செய்தால், கணவன் மனைவி ஒற்றுமை கூடும்.
நவலிங்க சந்நிதியில் பக்தர்களே தங்கள் திருக்கரங்களால், அபிஷேகம் செய்து, தோஷ நிவர்த்தி பெறலாம்.
நாமும் ஆலயத் தொண்டுக்கு உபயம் சில செய்தால், நிச்சயமாக அந்த உபயம் உங்கள் வினைகளை அறுக்கும். மேன்மையை கொடுக்கும்.
நாம் பணத்தை சேர்த்து வைத்திருக்கிறோமோ! இல்லையோ? எப்படியும் வினைகளை கண்டிப்பாக சேர்த்து வைத்திருப்போம். இது நம் உள் மனதில் ஒழிந்திருப்பது அனைவருக்கும் தெரியும்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான வினைகளைப் பற்றிருப்போம். இதன் எதிர்வினைகளை எண்ணாது நாமும், காலத்தைத் தொலைத்துக் கொண்டிருப்போம்.
நோய்க்கு மருந்தொன்று இருப்பதுபோல், வினைகளை அறுப்பதற்கும் ஆலயத் தொண்டாக மருந்து ஒன்று இருக்கிறது.
அனைத்தும் படைக்கும் ஈசன், ஏன் சிலவைகளை மட்டும் நம்மளை வைத்தே செய்ய இயக்குகிறான்?
நாம் செய்த வினையை, நாமலாலேயே அறுப்பதற்காகத்தான், அந்த வாய்ப்பினை ஈசன் நமக்குத் தந்தும் இயக்குகிறான்.
இந்த வாய்ப்பைப் படுத்திக் கொண்டோர், வினை அகழ்ந்து நிம்மதி பெறுவர் என்பது சத்தியம்.
நிம்மதி இருந்தாலே, நமக்கு நல்வன ஒவ்வொன்றும் தன்னாலே வந்து சேருமே!
நம்மகிட்ட இருக்கும் பொருள் என்னென்ன என்று தெரிந்து வைத்திருக்கும் நாம், நம் வினைகளை எவ்வளவு கோர்த்து வைத்திருக்கிறோம், எவ்வளவு புண்ணியத்தைச் சேர்த்து வைத்திருக்கிறோம் என்பதை நினைத்துப் பார்த்திருக்க மாட்டோம். - அது முடியவும் முடியாது...
இருந்த வினையை ஒழிக்கவும், புண்ணியத்தைப் பெறவும் ஆலயத் தொண்டு ஒன்றாலே மட்டும் ஒழிக்க முடியும்.
அந்த வினைகளை ஒழிக்க, எவ்வளவோ ஆலயங்களில் மருந்தாக, நமக்கு விதைக்கப்பட்டிருக்கிறது.
No comments:
Post a Comment