Monday, July 16, 2018

Dakshinamurthy ashtakam sloka 8 in tamil

Courtesy:Sri.S.Chidambaresa iyer


                                                                               2

ஸ்ரீ ராமஜயம்

                                                        ஸ்ரீ
தக்ஷிணாமூர்த்தி  அஷ்டகம் -- 8

இது இந்த அஷ்டகத்தின் எட்டாவதும் கடைசியுமான ஸ்லோகம் . இதற்கப்புறம்
வரும் இரண்டு ஸ்லோகங்களும் , இவற்றின் (இந்த எட்டு ஸ்லோகங்களினுடையவும்,
) விளக்கமாகவும், பலஸ்ருதியுமானவை.

" விஸ்வம் பச்யதி கார்ய காரணதயா ஸ்வ ஸ்வாமி ஸம்பந்தத :
சிஷ்யாசார்யதயா ததைவ பித்ரு புத்ராத்யாத்மநா பேதத :
ஸ்வப்னே ஜாக்ரதி  வா ய ஏஷ புருஷோ மாயா பரிப்ராமித:
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே  II

பரமேஸ்வரனாகிய பரம்பொருள் ஒன்றாகவே தான் இருக்கிறார்.
ஸ்வயம்பிரகாசகராகவும் இருக்கிறார். இந்த பிரபஞ்சம் முழுக்க அவர் தான்
இருக்கிறார். ஆனால், அவர் தன்னை இந்தப்பிரபஞ்சத்தின் காரணமாகவும்,
காரியமாகவுள்ள இந்த பிரபஞ்சமாகவும் தோற்றமளிக்கிறார். ஆக, காரணமாகவுள்ள
இந்தப்பிரபஞ்ச கர்த்தாவான அவரும், காரியமாய் தோற்றமளிக்கும்
இப்பிரபஞ்சமும் ஒன்றே தான் என்பதை நாம் அறியவேண்டும்.
இதற்கு  'ஒரு விதத்தில்'  உவமை தங்கமாகிய உலோகமும்,அதனால் தோற்றமளிக்கும்
நகையும் , மண்ணான தாகஇருந்தாலும், தோற்றத்தில் பானையாகக்காட்சியளிக்கும்
மண்பாண்டமுமே. இங்கு 'ஒரு விதம்'  என்று சொல்வதற்குக்காரணம், பிரபஞ்சம்
ஸ்ருஷ்டிசெய்யும் காரியத்தில், பரம்பொருளே, தானே பிரபஞ்சமுமாகிறார்,  நகை
செய்யும் ஆசாரி மாதிரியாகவோ, அல்லது குயவன் மாதிரியோ ஆக்கப்படும்
பொருளிலிருந்து வேறாக  இல்லை.
பரம்பொருள் தன்  இச்சைப்படி, தானே யஜமானாகவும், அவர்கீழ் வேலை செய்யும்
வேலைக்காரனாகவும்  தோற்றமளிக்கிறார். அதேமாதிரி குருவாகவும் அவருடைய
சிஷ்யனாகவும்,, தகப்பனாகவும், அவருடைய புத்திரனாகவும் , இவ்வாறு வேறு
வேறு மாதிரியாகவும், தோற்றமளிக்கிறார். மொத்தத்தில் இவையெல்லாம் வெறும்
தோற்றமே தான். ஸ்வப்னத்திலும், விழித்த நிலையிலும் அவர் இவ்வாறு
தோற்றமளிப்பது , அவர் தன்னுடைய அம்சமான மாயையின் வெளிப்பாடால் தான்,
இவ்வாறான  விளையாட்டில் ஈடுபடுகிறார். இந்தத்தோற்றங்கள் (
எஜமானன்-வேலைக்காரன், குரு-சிஷ்யன், தகப்பன்-புத்திரன்  என்ற
வேறுபாடுகள்) எல்லாம் மித்யை (இல்லாததை இருப்பது மாதிரிக்காட்டும்
தோற்றங்கள்) , அவை  மாயையினால் உண்டானவை .
ஆக, நிஜத்தில் இருப்பது பரம்பொருள் ஒன்று தான். மற்றவையெல்லாம் வெறும்
தோற்றமே தான், என்று நமக்குப்போதிக்கும் லோக குருவான ஸ்ரீ
தக்ஷிணாமூர்த்திக்கு என் நமஸ்காரங்கள்.

No comments:

Post a Comment