Wednesday, July 4, 2018

Ashtapadi 24 in tamil

Courtesy: Smt.Dr.Saroja Ramanujam

அஷ்டபதி 24
கண்ணனுடன் சம்யோகத்திற்குப் பிறகு ராதா கண்ணனை நோக்கி இவ்வாறு கூறுகிறாள்.

1. குரு யதுநந்தன சந்தன சிசிர தரேண கரேண பயோதரே 
ம்ருகமத பத்ரகம் அத்ர மனோபவமங்கள கலச ஸஹோதரே

யது நந்தன – கிருஷ்ணா 
சந்தன சிசிர தரேண கரேண- சந்தனம் போல் குளிர்ந்த உன் கரத்தால் 
மனோபவமங்கள கலச ஸஹோதரே -மன்மதனின் வெற்றிக்கலசம் போன்ற 
அதர பயோதரே – ஸ்தானங்களில் இங்கு
ம்ருகமத பத்ரகம் குரு– கஸ்தூரியால் சித்திரம் வரை.

நிஜகாத ஸா யதுநந்தனே கிரீடதி ஹ்ருதயாநந்தனே ( த்ருவபதம் )
ஸா – அந்த ராதை
யதுநந்தனே – கிருஷ்ணன்
ஹ்ருத்யானநந்தனே க்ரீடதி – மனம் மகிழ சல்லாபித்தபோது
நிஜகாத –கூறினாள்

.2.அலிகுலகஞ்ஜனமஞ்சனகம் ரதிநாயகஸாயக மோசனே 
த்வததர சும்பனலம்பிதகஜ்ஜல உஜ்ஜ்வலய ப்ரிய லோசனே (நிஜகாத)

ப்ரிய- அன்பே 
ரதிநாயகஸாயக மோசனே—மன்மதனின் சரங்களை விடுவதுபோன்ற
த்வததர சும்பனலம்பிதகஜ்ஜல-உன் இதழ்களால் கலைக்கப்பட்ட தீட்டின மையை உடைய 
லோசனே – கண்களில்
அலிகுலகஞ்சனம் –வண்டுகள் கருமையைப் பழிக்கின்ற 
அஞ்ஜனகம் – மையை 
உஜ்ஜ்வலய – தீட்டிவிடு.

3.நயனகுரங்க தரங்க விகாஸநிராகரே ஸ்ருதிமண்டலே
மனஸிஜபாசவிலாசதரே சுபவேச நிவேசய குண்டலே (நிஜகாத)

சுபவேச –அழகான ஆடை அணிந்தவனே 
நயனகுரங்க தரங்க விகாஸநிராகரே – என் கண்கள் என்ற மான்களின் துள்ளலை கட்டுப்படுத்தும் `
மனஸிஜபாசவிலாஸதரே-காமனின் பாசம் போல் இருக்கும்
ஸ்ருதிமண்டலே- காதுகளில்
குண்டலே- குண்டலங்களை 
நிவேசய – பூட்டிவிடு.

4. ப்ரமரசயம் ரசயந்தம் உபரி ருசிரம் ஸுசிரம் மம ஸம்முகே 
ஜிதகமலே விமலே பரிகர்மய நர்ம ஜனகம் அலகம் முகே (நிஜகாத)

ஜிதகமலே –தாமரையை பழிக்கும் 
விமலே – அழகிய 
மம முகே –என் முகத்தின் 
உபரி- மேல்
ஸுசிரம்- எப்போதும் இருக்கும் 
ப்ரமரசயம்-வண்டுகள் கூட்டத்தின் தோற்றத்தை 
ரசயந்தம்- தருகின்ற 
ருசிரம் – அழகான 
நர்மஜனகம் – கவர்ச்சியை உண்டாக்கும் 
அலகம் – கூந்தலை 
சம்முகே- என் முன் வந்து 
பரிகர்மய- சரிப்படுத்து

5.ம்ருகமதரஸவலிதம் லலிதம் குரு திலகம் அலிக ரஜநீகரே 
விஹிதகலங்ககலம் கமலானன விச்ரமிதச்ரமசீகரே (நிஜகாத)

கமலானன- தாமரைபோல் முகம் உடையவனே 
விச்ரமிதச்ரமசீகரே- வியர்வைத்துளிகள் அடங்கியுள்ள 
அலிகரஜநீகரே – அஷ்டமி சந்திரன் போல் உள்ள என் நெற்றியில்
விஹிதகலங்ககலம்-சந்திரனின் களங்கம் போல் உள்ள
லலிதம்- அழகான 
.ம்ருகமதரஸவலிதம்- கஸ்தூரிக்குழம்பால் ஆன
திலகம்—திலகத்தை
குரு- இடு

6.மம ருசிரே சிகுரே குரு மானத மனஸிஜத்வஜசாமரே
ரதிகலிதே லுலிதே குஸுமானி சிகண்டிசிகண்டகடாமரே (நிஜகாத)

மானத-உள்ளம் கவர்ந்தவனே 
மனஸிஜத்வஜசாமரே-காமனின் கொடியில் உள்ள குஞ்சம் போல
ரதி கலிதே லுலிதே – உன்னுடன் சேர்ந்திருக்கையில் தூக்கி முடிந்த 
சிகண்டிசிகண்டகடாமரே- மயிற்றோகையைப் பழிக்கும் 
மம ருசிரே சிகுரே- என் அழகிய கொண்டையில் 
குஸுமானி குரு- மலர்களை சூட்டு.

7. ஸரஸகனே ஜகனே மம சம்பரதாரணவாரண கந்தரே
மணிரசனாவஸநாபரணானி சுபாசய வாஸய ஸுந்தரே (நிஜகாத)

சுபாசய- நல்ல உள்ளம் படைத்தவனே 
சம்பரதாரணவாரண கந்தரே-மன்மதன் என்னும் யானை இருக்கும் மலைச்சரிவு போன்ற
ஸரஸகனே ஸுந்தரே –அகன்று அழகிய 
மமஜகனே – என் இடுப்பில் 
ஒட்டியாணம் மற்றும் வஸ்திரம் ஆபரணம் முதலியவைகளை
வாஸய- அணிவிப்பாய்.

8.ஸ்ரீஜயதேவவசஸி ருசிரே ஸதயம் ஹ்ருதயம் குரு மண்டனே
ஹரிசரணஸ்மரணாம்ருத நிர்மித கலிகலுஷஜ்வரகண்டனே (நிஜகாத)

ஹரிசரணஸ்மரணாம்ருத நிர்மித- ஹரியின் பாதாரவிந்தத்தின் ஸ்மரணமாகிய அம்ருதத்தில் தோய்த்து செய்யப்பட்ட 
கலிகலுஷஜ்வரகண்டனே- கலியின் பாபமாகிற ஜ்வரத்தை நீக்கும்
ஸ்ரீஜயதேவவசஸி – ஸ்ரீ ஜெயதேவருடைய வாக்கான 
ருசிரே மண்டனே – அழகிய ஆபரணத்தை 
ஸதயம் ஹ்ருதயம் குரு- யதுநந்தனா உன்னுடைய கருணையுள்ளத்தோடு ஏற்பாயாக.





No comments:

Post a Comment