போனவனுக்கு.... .. J.K. SIVAN
இந்த தொடர் பற்றி கொஞ்சம் மன வியாகூலம் சிலருக்கு இருக்கலாம். நான் ஏற்கனவே திரும்ப திரும்ப சொல்லியிருக்கிறேன். வாழ்க்கையின் சுக துக்கங்களை சரி சமமாக பகிர்ந்து கொள்ளும் பக்குவம் வேண்டும். மரணம் என்பது வெறுக்கத்தக்கது அல்ல. இன்றியமையாதது. தப்ப முடியாத முடிவு. அது எவ்விதம் எங்கே எப்போது நேரும் என்பதை மட்டும் சூக்ஷ்மமாக தனது கைக்கடக்கமாக த்திருக்கிறார் பரமன். வந்த இடத்திற்கு திரும்புவது தான் மரணம். அதற்கு சில சடங்குகள் உண்டு. அவசியம். அதை தான் நாம் அறிகிறோம். யாரையும் பயமுறுத்தவோ, எரிச்சல் மூட்டவோ இல்லை சார்.
இறந்தவன் உடலை மண் சட்டி குறிப்பது போல் , அதனுள் நிரப்பப்பட்ட நீர் தான் ஆத்மா கலந்த ஜீவன். ஏன் மூன்று தடவை மண் சட்டியை ஒவ்வொரு தடவையும் ஒரு துளை போட்டு நீரை வெளியேற்றி நீரோடு சுற்றுகிறான் என்பது உடலைவிட்டு வெளியேறும் ஆத்மா எடுக்கும் மூன்று சங்கல்பங்களை குறிக்கும். அது என்ன அந்த மூன்று சங்கல்பம்?
பூமியில் பிறந்த ஜீவன் அதற்கு மூன்று ஆசைகள் வந்துவிடுகிறதே. மண் ஆசை, பெண் ஆசை, பொன் ஆசை. இதோ போர் ஆத்மாவே, இந்த உடலில் நீ ஜீவனாக இருக்கும்போது தேடியா மூன்று ஆசைகளும் வெளியேறுகிறது பார்த்தாயா? உடலும் அழிகிறது. இனிமேல் இந்த பூமியில் உனக்கு எந்த பந்தமும் பாசமும் ஆசையும் இல்லை . உன் கர்மவினைக்கேற்ப புது உடல் காத்திருக்கும். அங்கே போய் மீண்டும் வேண்டுமானால் அவற்றை வளர்த்துக்கொள் . அது உன் தலையெழுத்து.
உடைந்த சட்டி எப்படி மீண்டும் ஒன்று சேராதோ, அதுபோல் இதுவரை நீ இருந்து உடல் இனி உனதல்ல. எந்த தொடர்பும் கிடையாது.
ஆகவே தான் வயதாக ஆக ஆசை பாசங்களை சுகங்களை விட்டு விட பயில வேண்டும். பாரிலுள்ள இச்சைகள் குறைந்தால் பரமனிடம் பற்று வளரும்.
சங்கல்பம் செய்யும் போது கையில் ஜலம் விட்டுக் கொள்ளும் வழக்கம் உண்டு. ஆகவே தான் உடைந்த மண்சட்டி நீர் இறந்தவன் உடலில் படும் வழக்கம்.
மூன்று சுற்று மண்சட்டியோடு வந்த காரியம் செய்யும் கர்த்தா, மூன்றாவது சுற்று முடிவில் இறந்தவன் சிதையை பார்க்காமல் எதிர்பக்கமாக பார்த்து ' ஓம்'' என்று சொல்லிவிட்டு பிறகு கொளுத்திய சந்தனக் கட்டையை சிதையின் தலைப்பகுதியில் வைப்பான். பிறகு மண் சட்டியை உடையும்படி முன்புறமாக கீழே வீசுவான். இந்த சடங்கும்குடும்பத்துக்கு குடும்பம் மாறுபடும். மனோபாவம் மாறுபடுவதில்லையா. சில குடும்பங்களில் கர்த்தா சிதையைபார்த்தபடி நின்றவாறு சந்தனக்கட்டைகொள்ளியை சிதை மீது வைக்கும் பழக்கமும் இருக்கிறது. . சிதைக்கு கொள்ளி வைத்த பிறகு மூத்த பிள்ளையோ, வேறு யார் கர்த்தாவோ, அவன் இறந்த உடலின் பாதங்கள் உள்ள பக்கம் சென்று தன் மோதிர விரலில் அணிந்த தர்ப்பை பவித்திரம், பூணூல் போன்ற வற்றை கழற்றி எரியும் சிதையில் போட்டு வணங்கி உடல் முழுதும் தீயின் வசம் ஆகும் வரை பார்த்துக்கொண்டு நிற்கும் வழக்கமும் இருக்கிறது.
அக்னி தேவனிடம் இவ்வாறு உடலை ஒப்புவித்து விட்டு திரும்புவது
கால தேச வர்த்தமானங்கள் மாறிக்கொண்டே வருகிறது. பழைய வழக்கமான சிதை அடுக்குவது, விரட்டி கட்டைகள் இப்போது தேவைப்படவில்லை. சினிமாவுக்கு ரிசர்வ் செய்வது போல மின்சார எரிக்கும் இடங்களில் பதிவு செய்து கொள்கிறார்கள். ஸம்ப்ரதாயகமாக உடலை மூங்கில் படுக்கையோடு (பாடை ) மின் எரி அறைக்குள் அனுப்புகிறார்கள். கதவு சாத்தப்படுகிறது. சிறிது நேரத்தில் மேலே புகை கூண்டு குழாயில் புகை சில மணியில் சம்படத்திலோ, பையிலோ, டப்பாவிலோ, கையில் சாம்பலாக இறந்தவன் வெளியே வருகிறான். மறுநாள் போய் கண்டங்கத்திரி கையில் கட்டிக்கொண்டு எலும்பு பொறுக்கும் வேலை நின்று போய்விட்டது. சஞ்சயனம் என்று அதற்கு பெயர்
No comments:
Post a Comment