Friday, June 1, 2018

Virudapureeswar temple annalvayil - Thevara vaippu sthalam

சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை.கு.கருப்பசாமி*
______________________________________
*தினமும் ஒரு தேவார வைப்புத் தல தரிசனம்:*
(எல்லோரும் தரிசிக்கச் செல்வதற்காக......‌‌.............)
_______________________________________
*தேவாரம் பாடலுக்குள் அமைந்த வைப்புத் தல தொடர் எண்: (6)*

*வைப்புத் தல அருமைகள் பெருமைகள்:*

*🏜விருத்தபுரீஸ்வரர் திருக்கோயில், அன்னல்வாயில்:*
______________________________________
அன்னல்வாயில் தலத்தை இப்பொழுது அன்னவாசல் என்று அழைக்கப்படுகிறார்கள்.

*🌙இறைவன்:* விருத்தபுரீஸ்வரர்.

*💥இறைவி:* தர்மசம்வர்தினி.

*🌴தல விருட்சம்:* வில்வம்.

*📔 பதிகம் உரைத்தவர்:*
அப்பர்.

ஆறாம் திருமுறையில், எழுபத்தொன்றாவது பதிகத்தில், ஏழாவது பாடல்.

*🛣இருப்பிடம்:*
புதுக்கோட்டை - விராலிமலை - மணப்பாறை சாலை வழியில் விராலிமலைக்கு முன்பாகவே அன்னவாசல் என்ற ஊர் வரும்.

இங்கிருந்து கீரனூர் செல்லும் சாலையில் சிறிது தூரம் பயணித்தால் கோயிலை அடையலாம்.

கீரனூர் சாலையில் விசாரித்துச் செல்ல வேண்டும்.

புதுக்கோட்டையில் இருந்து சுமார் பதினாறு கி.மி. தொலைவில் ஆலயம் அமைந்துள்ளது.

*✉ஆலய அஞ்சல் முகவரி:*
அருள்மிகு ஶ்ரீவிருத்தபுரீஸ்வரர் திருக்கோயில்,
அன்னவாசல்,
அன்னவாசல் அஞ்சல்,
வழி இலுப்பூர்,
இலுப்பூர் வட்டம்,
புதுக்கோட்டை மாவட்டம்,
PIN - 622 101

*☎தொடர்புக்கு:*
கிருஷ்ணமூர்த்தி சிவாச்சாரியார்:
99762 38448

சேது கண்காணிப்பாளர்:
(94861 85259)
97884 08173

*🌸ஆலயப் பூஜை காலம்:*
தினமும் காலை 6.00  மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00  மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் ஆலயம் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.

*🏜கோயில் அமைப்பு:*
இவ்வாலயத்திற்கு இராஜகோபுரம் கிடையாது. முகப்பு வாயிலும் இல்லை.

முகப்பு மண்டபத்திற்கு தெற்கிலும், கிழக்கிலும் இரும்புக் கம்பிகளான கிராதிகளால் ஆன உள் நுழையும் வாயில்கள் இருந்தன. *சிவ சிவ, சிவ சிவ* என மொழிந்து வணங்கிக் கொண்டு உள் புகுந்தோம்.

கிழக்கிலுள்ள வாயிலுக்கு எதிரே ஆலயத்தின் தீர்த்தக் குளம் இருந்தது. இங்கு சென்று தீர்த்தத்தை வாரி அள்ளியெடுத்து சிரசிற்கு வார்த்து இறைவனை நினைந்து வணங்கிக் கொண்டோம்.

கிழக்கு வாயில் வழியே உள்ளே நுழைந்தவுடன் முன் மண்டபத்தில் பலிபீடம் இருக்கக் கண்டோம்.

இதனருகாக வந்து நின்று, நம் ஆணவமலம் ஒழிய பிரார்த்தித்து வணங்கிக் கொண்டு, மேலும் மனதில் ஆணவமலம் துளியாதிருக்கும் மனத்தையும் தருமாறு வேண்டிக் கொண்டு தொடர்ந்தோம்.

அடுத்து, நந்தியும் இருக்கக் கண்டு, இவரை வணங்கிக் கொண்டு, மேலும் ஈசனைத் தரிசிக்க உள் புக அனுமதியும் வேண்டிக் கொண்டு நகர்ந்தோம்.

கருவறையில், மூலவரான விருத்தபுரீஸ்வரர் சுயம்பு லிங்க உருவில் கிழக்கு நோக்கி அருட்காட்சி வழங்கிய வண்ணமிருந்தார்.

மனமுருகி பிரார்த்தித்து வணங்கி விட்டு அர்ச்சகரிடம் வெள்ளிய விபூதியைப் பெற்றுக் கொண்டு அப்படியே அவ்விபூதியை திரித்து நெற்றிக்கு தரித்துக் கொண்டு வெளிவந்தோம்.

கருவறை கோஷ்டங்களில் வலம் செல்கையில்,  விநாயகரைக் காணப் பெற்றோம்.

விடுவோமா? சடுதியில் காதுகளைப் பிடித்துத் திருகி தோப்புக்கரணமிட்டுக் தொழுது வணங்கிவிட்டு நகர்ந்தோம்.

அடுத்து, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா மற்றும் துர்க்கை ஆகியோர்கள் இருக்கக் கண்டு, ஒவ்வொருத்தரையும் வணங்கி நகர்ந்தோம்.

கருவறை சுற்றுப் பிராகாரத்தில் செல்லும்போது, மீனாட்சி சுந்தரேஸ்வரரும், வள்ளி தெய்வானையுடன் ஆறுமுகரும் மற்றும காசி விஸ்வநாதர் சந்நிதியும் இருந்தன.

ஒவ்வொரு சந்நிதிக்கும் சென்று ஒவ்வொருவரையும் தொடர்ச்சியாக வணங்கித் தொழுதோம்.

அடுத்து பைரவர் சந்நிதிக்கு வந்து இவர் முன் நின்று, பவ்யபயத்துடன், கூனக்குறுக குனிந்து பணிந்தெழுந்தோம்.

இதற்கடுத்து, சண்டிகேஸ்வரர் தனி சந்நிதியில் தியாணத்தில் அமர்ந்திருந்தார்.

இந்த வணங்கும் நெறிமுறையுடன் வணங்கிக் கொண்டு, உள்ளத்தை கூறி, இல்லாதனதை உள்ளங்கையை விரித்தளித்துக் காட்டி, இவர் தியாணம் கலையாதிருக்கும்படி, அமைதியான முறையில் வணங்கித் திரும்பினோம்.

அடுத்து, அம்பாள் தர்மசம்வர்தினி சந்நிதிக்கு வந்தோம். அம்பாள்  தெற்கு நோக்கி அருட்பிரவாகங்களை வழங்கிய வண்ணமிருந்தாள்.

இங்கேயும், ஈசனிடம் மனமுருகி பிரார்த்தனை செய்து வணங்கிக்கொண்டதுபோல  வணங்கினோம்.

தீபாராதனைக்குப் பின் அர்ச்சகர் தந்த குங்குமப் பிரசாதம் பெற்றுக் கொண்டு அப்படியே வெளிவந்தோம்.

ஆலயத்திற்கு வெளியே உள்ள அறிவிப்புப் பலகையில் கோவில் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும் என்று குறிப்பிட்டு இருந்தாலும், ஆலயத்திற்கு பக்தர்களின் வருகை குறைவாக இருப்பதினால்,  அறிவிப்புப் பலகையில் உள்ள நேரப்படி திறந்திருப்பதில்லை என்ற செய்தியும் இருக்கிறது.

எனவே, அருகில் விசாரித்து அர்ச்சகர் இருப்பிடத்தை அடைந்து கோவிலை திறக்கச் சொல்லி தரிசனம் செய்து கொள்ளலாம்.

*சிறப்புகள்:*
இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள  வைப்புத் தலமாகும்.

கோயிலுக்கு எதிரில் பெரிய குளம் இருக்கிறது. கோயில் முகப்பில் கல் தூண்கள் மட்டும் நிற்கின்றன.

பிராகாரத்தில்  இரண்டு சிவலிங்கங்கள் இருக்கின்றன மிகப் பழமையானவை.

இவ்வாலயத்திற்கு திருப்பணி செய்த செட்டியார் ஒருவரின் அறப்பணிகளைப் பற்றிய கல்வெட்டு ஒன்று கோயிலில் இருக்கிறது.

அருகில் உள்ள சித்தன்னவாசல் என்னும் ஊரின் மலையடியில் பழமையான சிவாலயம் ஒன்றுள்ளது.

*ஆலயப் பழமை:*
இக்கோயில் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.

முகலாயப் பேரரசின்போது, இவ்வாலயத்தை புணரமைத்துக் கட்டப்பட்டதாக தெரியவருகிறது.

*அரிய செய்தி:*
அர்ச்சகர் ஒருவருக்கு பெண்குழந்தை ஒன்று இருந்தது.

திருமணத்திற்கு முன்பே இப்பெண் குழந்தை இறந்துவிட்டது.

அர்ச்சகரின் கனவில் தோன்றிய இறைவன், மதுரை மீனாட்சியை பெளர்ணமி மில் வழிபட்டு வர, தோஷம் நிவர்த்தியாகும் என இறைவன் அருளி மறைந்தார்.

புத்திரப்பேறு இல்லாத அர்ச்சகர்க்கு, இந்த பாக்கியம் கிடைத்தால், அனைவருக்கும் நன்மை கிடைக்கும் பொருட்டு,.....

தென்மேற்கு மூலையில், மீனாட்சி சுந்தரமூர்த்தியையும், வடமேற்கு மூலையில், முருகன் சந்நிதியையும், காசியில் தீர்த்தமாடி மற்றவரும் காசிவிஸ்வநாதரை தரிசிக்கும் பொருட்டு, தெற்கே இவரையும் பிரதிஷ்டை செய்தார்.

இத்தலம் சித்தன்னவாசலுக்கு அருகே அமைந்துள்ளது.

சிற்றண்ணவாசல் என்பதே மருவி, சித்தன்னவாசலாகிவிட்டது.

சித்தன்ன வாசலிலுள்ள ஓவியங்கள், மற்றும் சமணர் குகைகள், காலை நேரங்களில் மட்டும், மக்கள் பார்வையிட அனுமதிக்கின்றனர்.

இங்கிருக்கும் படைப்புகள் யாவையும் ஒன்பதாம் நூற்றாண்டைச் சார்ந்தவையாகும்.

இங்கேயே, மாத்ரூபூதேஸ்வரர் சிவாலயக் கோயில் இருக்கிறது.

சித்தர்கள், மகான்கள், அரசர்கள், வழிபட்ட இப்புண்ணிய க்ஷேத்திரத்தைச் சுற்றிலும், விராலிமலை, நார்த்தமலை, குமாரமலை, தேனீமலை, குடுமியான்மலை, பேரையூர், சித்தன்னவாசல், கொடும்பாளூர் போன்ற தலங்கள் இருக்கின்றன.

மூலம் ஆயில்யம், கேட்டை, ரோகிணி, அஸ்தம் நட்சத்திர தோஷம் உள்ளவர்களும், செவ்வாய் தோஷம், களத்திர தோஷம், ராகு, புத்திர, மாங்கல்ய, மனை தோஷம், வாகன சம்பந்தப்பட்ட பிரட்சினை உள்ளவர்களும், இத்தல ஈசனுக்கும் அம்பிகைக்கும் பால் அபிஷேகம் செய்தும், வில்வ இலையால் அர்சித்தால் நன்மை பயக்க அருளை பெறுவர்.

*அண்ணல்வாயில் வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்:*
🔔கடு வாயர்தமை நீக்கிஎன்னை ஆட்கொள் கண் நுதலோன் நண்ணும் இடம் அண்ணல்வாயில் நெடுவாயில் நிறை வயல் சூழ் நெய்தல்வாயில் நிகழ் முல்லைவாயிலொடு ஞாழல்வாயில் மடு ஆர் தென்மதுரைநகர் ஆலவாயில் மறிகடல் சூழ் புனவாயில் மாடம் நீடு குடவாயில் குணவாயில் ஆன எல்லாம் புகுவாரைக் கொடுவினைகள் கூடா அன்றே.

🙏கடுக்காயைத் தின்னும் வாயினராகிய சமணரை நீக்கி என்னை ஆட்கொண்ட கண்ணுதற் கடவுளாகிய சிவ பெருமான் விரும்பித் தங்கும் இடங்களாகிய அண்ணல்வாயில், நெடுவாயில், பயிர் நிறைந்த, வயல் சூழ்ந்த நெய்தல்வாயில், நிலவும் முல்லைவாயில், ஞாழல்வாயில், வைகை நீர் பொருந்திய அழகிய மதுரை நகரத்து ஆலவாயில், அலை எழுந்து மடங்கும் கடல் சூழ்ந்த புனவாயில், மாடங்கள் உயர்ந்து தோன்றும் குடவாயில், குண வாயில், ஆகிய இவற்றுள் எல்லாம் புகுந்து வணங்குவாரைக் கொடுவினைகள் ஏதும் ஒரு நாளும் பற்றாது.

இப்பாடலில் "வாயில்" என்று முடியும் தலங்களை, வகுத்து அப்பர் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நாக்கின் சுவையறியும் உணர்வு ஆற்றலைக் கெடுக்கும் பொருட்டு சமணர்கள் கடுக்காயை அவ்வப்பொழுது வாயிலிட்டுத் தின்பதை பழக்கமாகக் கொண்டிருந்ததைக் குறிப்பிடும் வகையில் இப்பதிகப் பாடலை கடு வாயர்தமை என்று ஆரம்பித்து அப்பர் பாடியுள்ளார்.

சமண சமயத்தைச் சார்ந்திருந்த அவரை சூலை நோயைக் கொடுத்து ஆட்கொண்டு சைவத்திற்கு மாற்றியதைக் குறிப்பிடுகிறார்.

*🎡திருவிழாக்கள்:*
பிரதோஷம், விநாயகர் சதுர்த்தி, ஐப்பசி அன்னாபிஷேகம், நவராத்திரி, பெரிய கார்த்திகை,‌ தனுர் மாதபூஜை, திருவாதிரை, மாசி மகம் பத்து நாட்கள் பிரமோற்சவம், பங்குனி உத்திரம், வெள்ளிக்கிழமை வார வழிபாடுகள் முறையே தொடர்ந்து நடந்து வருகிறது.

              திருச்சிற்றம்பலம்.

தேவார வைப்புத் தலங்களில் நாளைய தலப்பதிவு, *சிவசைலநாதர் திருக்கோயில், அத்தீச்சுரம்.*
-------------------------------------------------------------
இராஜபதி கைலாசநாதர் திருக்கோயில் திருக்கோபுர உயர்வதற்க்கு உபயம் அனுப்பி விட்டீர்களா?

நீங்கள் அளிக்கும் உபயம், உங்கள் கர்ம வினைகளை ஒழிக்கும். புண்ணியம் சேமிப்பாகும்.

இப்புண்ணியம் எதிர்காலத்தில் உங்கள் பிள்ளைகளுக்கு தனமாக அமையும்.

*மனம் நினைக்க மகேசன் அருளாவான்!*
*உபயம் ஒன்றளிக்க, உமாவும் அபயமாவாள்!*

இராஜபதியில் கைலாசநாதர் திருக்கோயிலில் திருக்கோபுரம் அமைவதற்கு  கடந்த இரு வாரங்களாக அடியார்களிடம் பதிவுடன் சென்று யாசகம் கேட்கிறேன்.

சிலர் உபயம் அளித்திருக்கிறார்கள். சிலர் அனுப்புவதாய் கூறியிருக்கிறார்கள். 

அனுப்பாதவர்கள் கூடிய விரைவில் அனுப்பி ஈசனின் புண்ணியத்தை தனமாக்கிக் கொள்ளுங்கள்.

புண்ணியம் செய்தனமே மனமே புதுப் பூங்குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்
பண்ணி நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே

இப்போது, இராஜகோபுரத்திற்கு இரண்டாவது நிலைகைளைத் தாங்கி நிற்கும் சூழ்நிலை நடந்து கொண்டிருக்கிறது.

இத்துடன் இராஜபதி ஆலய காணொலியும், வாசிக்கும் பத்திரிக்கையும் இணைத்தனுப்பி உள்ளோம்.

படித்து, உபயம் அளியுங்கள்.
அடியார்களே!, பக்தர்களே, பொதுஜனங்களே! ஆலய கோபுர வளர்ச்சிக்கு அவசியம் உபயம் அளியுங்கள்!

பணம் அனுப்ப வேண்டிய முகவரி.

*கைலாஷ் டிரஸ்ட்*
*இந்தியன் வங்கி.*
**கோவில்பட்டி கிளை*
*A/Ç no: 934827371*
*IFSC code: IDIBOOOKO51*
*Branch code no: 256*
_____________________________________
*திருக்கோபுரத்திற்கு உபயம் அளியுங்கள்!*
*திரும்ப பிறப்பில்லா நிலை பேறு பெறுங்கள்!!*
______________________________________
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment