உ
சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை.கு.கருப்பசாமி.*
__________________________________
*தினமும் ஒரு தேவார வைப்புத் தல தொடர்:*
(எல்லோரும் தரிசிக்கச் செல்வதற்காக.................)
___________________________________
*தேவாரம் பாடலுக்குள் அமைந்த வைப்புத் தல தொடர் எண்: (8)*
*வைப்புத் தல அருமைகள் பெருமைகள்:*
*🏜சிவசைலநாதர் திருக்கோயில், அத்தீச்சுரம்:*
*நேற்றைய பதிவின் மீதிப் பதிவு இன்று:*
______________________________________
திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சிவபெருமான், உமையாளுடன் கோவில் கொண்டு எழுந்தருளியுள்ள ஆலயங்களில் அருள்மிகு பரமகல்யாணி உடனுறை சிவசைலநாதர் ஆலயம் தேவார வைப்புத் தலங்களில் ஒன்று.
கடனையாறு என்று அழைக்கப்படும் கருணையாற்றின் கரையில் அமைந்துள்ள சிவசைலம் என்னும் இவ்வூரின் பெயர் கடம்பவனமாகும்.
மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்று சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இக்கோயில்.
இந்தக் கோயிலின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், எழுந்து நிற்கும் நிலையில் உள்ள நந்திகேசுவரைப் பற்றியதே.
இந்த நந்திகேசுவரர், இந்திர சபையின் தலைமை சிற்பியான, மயனால் உருவாக்கப்பட்டதாகும்.
இத்தலத்தில், கொலுவீற்றிருக்கும் பரமகல்யாணி அம்மன் நான்கு கைகளுடன் மேற்கு நோக்கி அமைந்திருந்தும், நமனை நடுங்க வைத்து நமக்கெல்லாம் நல்அருள் பாலிக்கும் நாயகனை நாம் நான்கு திசைகளில் இருந்தும் தரிசிக்கக்கூடியதும் இத்தலத்தின் சிறப்புகளில் ஒன்றாகும்.
*தல அருமை:*
திருமறை காலத்தில் திருக்கைலாயத்தில் அன்னை பார்வதிக்கும், பரமேஸ்வரனுக்கும் நடந்த திருக்கல்யாண வைபவத்தை பார்ப்பதற்காக முனிவர்களும், ரிஷிகளும், ஞானிகளும் வடக்கே சென்றதால் பூவுலகத்தை தாங்கும் பூமித்தாய் வடக்கே தாழ்ந்து தெற்கே உயர்ந்தாள்.
இதனால் உலகத்தை சமன் செய்வதற்காக இந்த உலகத்தை இயங்க செய்யும் காரணகர்த்தா, அகத்தியர் மற்றும் அத்ரி போன்ற முனிவர்களை தெற்கே அனுப்பினார்.
இவ்வாறு அனுப்பப்பட்ட அத்ரி முனிவர், சுயம்புலிங்க தரிசனம் காண விரும்பினார்.
அவருடைய ஆசையை நிறைவேற்றும் வகையில் அகத்திய முனிவர், மேற்கு தொடர்ச்சி மலையில் திரிகூடபர்வதம்(மூன்று மலைகள் சேருமிடம்) சென்று தவம் செய்தால் சுயம்புலிங்க தரிசனம் கிடைக்கும் என்று கூறினார்.
அகத்திய முனிவரின் ஆலோசனைப்படி அத்ரி முனிவர் தன் துணைவியார் அனுசுயாதேவி மற்றும் சீடர்கள் கோரட்சகர், தத்தாத்ரேயர் முதலானோரோடு திரிகூடபர்வதம் வந்து தவம் செய்ய தொடங்கினார்.
ஒருமுறை பவுர்ணமி தினத்தன்று பூஜை செய்வதற்கு கடம்ப மலர்களை பறிப்பதற்காக கடம்பவனம் சென்றனர் அத்ரி முனிவரின் சீடர்கள்.
அப்போது ஒரு பாறையின் மீது பசுக்கள் தாமாகவே பால் சொறிந்து செல்வதை கண்ட சீடர்கள், அப்பாறையின் அருகில் சென்று பார்த்தனர்.
அப்போது ஒரு சிறிய சுயம்புலிங்கத்தை அவர்கள் பார்த்து உவகையுடன் அத்ரி முனிவரிடம் தாங்கள் கண்டதை தெரிவித்தனர்.
இதனையடுத்து அத்ரி முனிவர், தனது துணைவியாருடன் வந்து சுயம்புலிங்கத்தை கண்டு ஆனந்த களிப்பில் தாம் கண்டதை வேதமந்திரமாக சொல்கிறார்.
*🔔அத்ரினாம் பூஜிதம ஸ்தம்பம் பக்தாபீஷ்ட பிரதாயகம் வந்கேதம் சிவசைலேசம் பிண்டிகாம் ஷோடசானுதம் சதுர்புஜாம் விசாலாட்சிம் தேவீம் பசுபதீம் முகீம் பாசாங்குச வல்லபாம் அம்பாம் தீரைலோகிய நாயகீம் தேவீம் பரமகல்யாணிம்'*
🙏அத்ரியாகிய நானே தவத்தின் பயனாய் சுயம்புலிங்க தரிசனம் செய்ய நினைத்தேன்.
ஆனால் முக்திக்கு பக்திதான் அவசியம் என்று நிரூபிக்க பக்தர்களுக்கு காட்சியளித்த இறையே, பூமிக்கு மேலே ஒரு பாகமும் கொண்டு சிவம் சைலத்தில் தோன்றியதால் சிவசைல நாதர் என்று அழைக்கப்பெறும் பெருமானே, நான்கு கைகளுடன் பரமகல்யாணி என்ற திருநாமத்துடன் விளங்கும் அன்னையை இங்கு காணும் பாக்கியத்தை தந்தருள்வீராக! என்பதே இப்பாடலின், இந்த தேவமந்திரத்தின் பொருளாகும்.
இதன் மூலம் சிவசைலத்தில் அமைந்துள்ள சிவபெருமான் பூமிக்கு மேலே ஒருபாகமும், பூமிக்கு கீழே பதினைந்து பாகமும் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் என்பதை அறிய முடிகிறது.
*கோயில் உருவான விதம்:*
முன்னாளில் செந்தமிழ் பாண்டிய நாட்டினை மணலூரை தலைநகராக கொண்டு சைவநெறி போற்றி சிறப்பாக ஆண்டு வந்தார் சுதர்சனப்பாண்டியன்.
இந்த மன்னன் பிள்ளை பேறு இல்லாமல் பெரிதும் வருந்தினான்.
பிள்ளை பேற்றினை பெறுவதற்காக இம்மன்னன் பொருநையின் கரையில் அசுவமேத யாகம் ஒன்றை செய்தான்.
யாகத்தின் முடிவில் எத்திசையும் சென்று வரத்தக்க படையுடன் அரச பரியினை (குதிரை) அலங்கரித்து அதனுடன் தனது சகோதரன் சத்யமூர்த்தியையும் அனுப்பி வைத்தான்.
கிழக்கு திசையிலும், தென் திசையிலும் வெற்றி பயணம் முடிந்தபின் பரி மேற்கு திசையில் பயணத்தை தொடங்கியபோது சிவசைலநாதர் கந்தவேளிடம் *எண்திசை வென்று இத்திசை நோக்கி வரும் பரியினை கட்டுவாயாக* என்று பணிந்தார்.
மறைச்சிறுவனாக சென்ற குமரக்கடவுள், அக்குதிரையை பிணித்தான்.
அதனால் எழுந்த போரில் சத்தியமூர்த்தி மண்ணில் வீழ்ந்திட மணலூருக்கு செய்தி பறந்தது.
சுதர்சனப்பாண்டியன் மதகரியென களத்தில் புகுந்து மறைச்சிறுவனுடன் போர் புரிந்து முடிவில் மகுடம் கீழே விழ மண்ணில் மன்னன் வீழ்ந்த தருணத்தில், முருகன் வேலுடன் தோன்றி சிவசைலநாதர் சுயம்புமூர்த்தியாக இருக்கும் இடத்தை கூறி மறைந்தார்.
நான் என்ற அகப்பற்றும், நான் நடத்தும் வேள்விப்பரி இது என்ற புறப்பற்றும் அக்கணமே நீங்கப்பெற்ற சுதர் சனப்பாண்டியன், சுயம்பு மூர்த்தியின் தரிசனம் பெற்று மகிழ்ந்தான்.
இறைவன் அருளால் போர்க்களத்தில் மாண்டோர் மீண்டும் உயிர் பெற்று எழுந்தனர்.
பாண்டிய மன்னனின் பரிவேள்வி முழுமையடைந்தது. இறையருளால் கந்தவேளும், சுதர்சனப்பாண்டிய மன்னனின் மகவாக தோன்றினான்.
அம்மகவிற்கு குமரபாண்டியன் என பெயர் சூட்டி பெருமிதமடைந்த மன்னன் தனக்கு அருள்பாலித்த சிவசைலநாதருக்கு கோயில் எழுப்பினான்.
*மறுவீடு சடங்கு:*
சாதாரணமாக கோயில்களில் திருக்கல்யாணம் மட்டுமே நடக்கும்.
ஆனால், இங்கு, வழக்கமாக திருமணத்திற்கு பிறகு பெண்ணும், மாப்பிளையும் மறுவீடு செல்லும் சடங்கும் நடக்கிறது.
சிவனையும் கல்யாணியையும் ஆழ்வார்குறிச்சி, ஆம்பூர் மக்கள் அவர்கள் ஊருக்கு மறுவீடு அழைத்து செல்வர்.
சிவனும், கல்யாணியும் அங்கு மூன்று நாட்கள் தங்குவர். அவர்களை சிவசைலம் அனுப்பும் போது, மணமக்களுக்கு சீர் வரிசை தருகிறார்கள்.
*பிரார்த்தனை:*
நினைத்த காரியம் நிறைவேற இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
*நந்திகேஸ்வரர் சரிதை:*
இக்கோயிலில் சிவனை பார்த்தபடி கிழக்கு நோக்கி உள்ள நந்திக்கும் ஒருகதை உண்டு.
அந்த நந்தியை பார்த்தால், எழுந்திருக்க முனைவது போவது போல இருக்கும்.
தேவலோக தலைவனான இந்திரன் ஒருமுறை சிவனது கோபத்திற்கு ஆளானான்.
அதற்கு விமோசனமாக, நான் மேற்கு நோக்கி சுயம்புவாக இருக்கும் கோயிலில் நந்திகேஸ்வரரை பிரதிஷ்டை செய், என கூறினார்.
இந்திரனும் உலகின் முதல் சிற்பியான மயனை கொண்டு நந்தி சிலையை வடித்தான்.
சிற்ப சாஸ்திரங்களின்படி ஒருசிலை உயிரோட்டமாக எந்த குறையும் இல்லாமல் வடிக்கப்பட்டதால் அது உயிர்பெற்றது. எழுவதற்காக கால்களை தூக்கியது.
உடனே, ஒரு உளியால் நந்தியின் முதுகில் சிறு கீறலை ஏற்படுத்தினார். அதன் பிறகே நந்தி அங்கே எழ முனையவில்லை.
மயன் அப்போது ஏற்படுத்திய கீறல் இன்றளவும் நுட்பமாக தெரிவதைக் காணலாம்.
*பரமகல்யாணி:*
இங்கு அமர்ந்துள்ள சிவனுக்கு சொந்த ஊர் சிவசைலம். அவரது துணைவி பரமகல்யாணிக்கு சொந்த ஊர் அருகில் உள்ள கீழ ஆம்பூர்.
இவளது விக்ரகம் இங்குள்ள கிணற்றில் இருந்து எடுக்கப்பட்டது. தற்போது அந்த கிணறு அக்ரஹார தெருவில் இருக்கிறது.
எனவே மனித திருமணங்களில் பெண் வீட்டார் மாப்பிளை வீட்டாருக்கு சீதனங்கள் தருவது போல, இன்றளவும் திருக்கல்யாணத்தன்று தங்கள் ஊர் பெண்ணுக்கு மக்கள் சீதனம் கொடுக்கின்றனர்.
இந்த பகுதியில் வசித்த அக்னிஹோத்ரி தம்பதிக்கு குழந்தை, இல்லை. அவர்களது வேண்டுதலுக்கு செவிசாய்த்த உமையவள், ஒரு கிணறு வெட்டுங்கள். அதில் கல்யாணியாக நான் கிடைப்பேன். அதனை எடுத்து பிரதிஷ்டை செய்யுங்கள், என கூறினாள்.
*பெண்கள் இழுக்கும் தேர்:*
சிவசைலத்தில் முக்கியமானது பங்குனித்திருவிழா. பதினோறு நாட்கள் நடக்கும் இவ்விழாவில் கடைசிநாள் தேரோட்டம் நடக்கும்.
இதில் அம்பாள் தேரை பெண்கள் மட்டுமே இழுத்து நிலைக்குக் கொண்டு வருவார்கள்.
*உரலில் மஞ்சள்:*
இங்கு, சிவன் சன்னதிக்கு அருகில் ஒரு உரலும் உலக்கையும் இருக்கின்றன.
திருமணம் ஆகாதவர்கள் இதில் போடப்பட்டிருக்கும் மஞ்சளை உலக்கையால் இடித்து அதில் கொஞ்சம் எடுத்து பூசிக்கொண்டால் திருமணம் நடக்கும் என்பதும் நம்பிக்கையாகும்.
இதற்காக மஞ்சள், உலக்கையுடன் கூடிய உரல் இங்கே வைக்கப்பட்டுள்ளது.
*தல பெருமை:*
இறைத்தொண்டில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட சுதர்சனப்பாண்டியன் ஒரு நாள் சிவதரிசனம் செய்ய சிவசைலத்திற்கு வந்து சேர்ந்தான்.
கோவிலுக்கு வரும் வழியில் கருணையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் மன்னனால் கோவிலுக்குள் செல்ல முடியவில்லை.
மனம் தளராது எவ்வாறேனும் இறையை வழிபட்டே தலைநகர் திரும்ப வேண்டும் என்று எண்ணி வெள்ளம் வடிவதற்கு இறைவனை இறைஞ்சினான்.
வேண்டு பவருக்கு வேடிக்கை காட்டுவதை வாடிக்கையாக கொண்ட அப்பன், வேந்தனிடத்தும் விளையாட நினைத்தார்.
வெள்ளம் வடிந்து மன்னன் ஆவலுடன் கோவிலுக்குள் நுழைந்தபோது பூஜை முடிந்து கோவில் நடை சாத்தப்பட்டது.
சாத்திய நடை திறப்பதற்கில்லை என்பது மரபு.
மன்னனின் திடீர் வருகையால் அர்ச்சகர் கோயிலின் பிரதான நாட்டிய மங்கைக்கு பிரசாதமாக கொடுத்து, அவள் தலையில் சூடியிருந்த மலர்மாலையை திரும்ப பெற்று மன்னனுக்கு பிரசாதமாக கொடுத்தார்.
சிவதரிசனம் செய்ய முடியாவிட்டாலும் அவருக்கு சூட்டிய புஷ்பத்தையாவது தரிசிக்கும் பாக்கியம் கிடைத்ததே என்று எண்ணி மனம் மகிழ்ந்த மன்னன் அம்மாலையை கண்ணில் ஒற்றிக்கொண்டபோது மலரில் ஒரு உரோமம்(முடி) தட்டுப்பட்டது.
அது அபசகுணம் என்று கருதிய மன்னன், அர்ச்சகரிடம் பிரசாதத்தில் முடி எப்படி வந்தது? என்று கேட்டான்.
அதற்கு அர்ச்சகர், சுவாமியின் திருமுடியில் திருமுடி சடை உண்டு. மாலையை பிரிக்கும்போது, சுவாமியின் திருமுடி ஒன்றும் பிரிந்து வந்திருக்கும் என்று கூறினார்.
அப்படியானால் அந்த சடைமுடியை நான் தரிசிக்க வேண்டுமே!. ஏற்பாடு செய்யுங்கள் என்று அர்ச்சகருக்கு கட்டளையிட்டான் மன்னன்.
சரி! ஆவண செய்கிறேன் என்று சொல்லிவிட்டு, இப்போது செய்வதறியாது திகைத்தார் அர்ச்சகர்.
இறைவனிடம் மனம் உருகி பிரார்த்தனை செய்தார். தான் உரைத்த பொய்யிலிருந்து தன்னை காப்பாற்றுமாறும், இல்லையேல் உயிர் நீக்கப்போவதாகவும் முறையிட்டு அழுதார்.
அர்ச்சகருக்கு சிவசைலநாதர் அசரீரியாகத் தோன்றி, சுதர்சனப்பாண்டியனை சோதிக்கவே தாம் இவ்வாறு செய்ததாகவும், அவனுக்கு தரிசனம் தந்து உன்னை காப்பேன் என்றும்கூறி, எனது மூன்று புறங்களிலும் துளைகள் அமைப்பாயாக! என்றும் கூறினார்.
சில நாட்களுக்கு பிறகு கோவிலுக்கு வந்தான் மன்னன். அப்போது மன்னனை கூட்டிச்சென்ற அர்ச்சகர், சுவாமிக்கு பின்னால் உள்ள துளைக்கு நேராக வந்து நிற்கும்படி வேண்டினார்.
அதன் படியே மன்னன், சுவாமியின் பின்புறம் உள்ள துளைப்பக்கமாக வந்து நிற்க அர்ச்சகர் கர்ப்பக்கிரகத்தினுள் இருந்து கற்பூர தீபம் காட்ட அந்த தீப ஒளியில் துளையின் பின்னால் இருந்த பாண்டிய மன்னன் இறைவனை ஜடாதளியாக... தரிசனம் கிடைத்தது.
இவ்வரியக் காட்சியைக் கண்ட மன்னனுக்கு, அப்பர் உணர்ந்து பாடிய பாடல் நினைவுக்குத் தோன்றியது.
*கண்காள் காண்மின்களோ, கடல் நஞ்சுண்ட கண்டன் தன்னை எண்தோள் வீசிநின்று ஆடும் பிரான்தன்னைக் கண்காள் காண்மின்களோ* என்று அப்பரின் பாடல் நினைவு வந்தது மன்னனுக்கு.
இதைக் கண்ட திகைப்பில் ஆழ்ந்து, இறைவா!' அர்ச்சகர் கூறியது பொய் என்று கருதினேன். என்னை மன்னித்தருள்க என்று இறைவனிடம் மனமுருக வேண்டிக்கொண்டதாக வரலாறு தெரிவிக்கிறது.
திருச்சிற்றம்பலம்.
தேவார வைப்புத் தலங்களில் நாளைய தலப்பதிவு *ஐராவதேஸ்வரர் திருக்கோயில், அத்தீஸ்வரம் (பெருந்தோட்டத்.)*
____________________________________
இராஜபதி கைலாசநாதர் திருக்கோயில் திருக்கோபுரம் அமைய உபயம் அனுப்பி விட்டீர்களா?
அனுப்பாதோர் உபயம் அனுப்பி, புண்ணியத்தை தனமாக்கிக் கொள்ளுங்கள்.
ஈசனுக்கு, நம்மால் முடிந்த, நம் பொருளாதார சூழ்நிலைக்குத் தகுந்த உபயத்தை அனுப்பி, ஈசனின் புண்ணியத்தை தனமாக்கி, வருங்கால நம் பிள்ளைகளுக்கு விட்டுச் செல்லுங்கள்.
இதுவரை உபயம் அனுப்பிய அனைவருக்கும் 'நன்றி' என்று ஒரு வார்த்தையுடன் முடிக்காமல், ஈசனின் கருணை உங்களுக்கு பிரவாகமாக, ஈசனிடம் விண்ணப்பம் செய்தோம்.
இனியும் இந்தச் செய்தியை அறிந்து உணர்ந்திருந்தவர்கள், தங்களால் இயன்றதை திருக்கோபுரம் அமைய உபயம் அளிக்குமாறு அனைவரின் பாதகமலங்களில் அடியேன் சென்னிமோதி பணிந்துதெழுந்து வணங்கிக் கேட்கிறேன்...
உபயம் அளியுங்கள்!
உபயம் அளியுங்கள்!!
உபயம் அளியுங்கள்!!!
நீங்கள் அளிக்கும் உபயம், உங்கள் கர்ம வினைகளை ஒழிக்கும். புண்ணியம் சேமிப்பாகும்.
இப்புண்ணியம் எதிர்காலத்தில் உங்கள் பிள்ளைகளுக்கு தனமாக அமையும்.
*மனம் நினைக்க மகேசன் அருளாவான்!*
*உபயம் ஒன்றளிக்க, உமாவும் அபயமாவாள்!*
உபயம் அனுப்பாதவர்கள் கூடிய விரைவில் அனுப்பி ஈசனின் புண்ணியத்தை தனமாக்கிக் கொள்ளுங்கள்.
புண்ணியம் செய்தனமே மனமே புதுப் பூங்குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்
பண்ணி நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே!
இப்போது, இராஜகோபுரத்திற்கு இரண்டாவது நிலைகைளைத் தாங்கி நிற்கும் சூழ்நிலை நடந்து கொண்டிருக்கிறது.
இத்துடன் இராஜபதி ஆலய காணொலியும், வாசிக்கும் பத்திரிக்கையும் இணைத்தனுப்பி உள்ளோம்.
பணத்தை வங்கி கணக்கில் அனுப்ப வேண்டிய முகவரி.
*கைலாஷ் டிரஸ்ட்*
*இந்தியன் வங்கி.*
**கோவில்பட்டி கிளை*
*A/Ç no: 934827371*
*IFSC code: IDIBOOOKO51*
*Branch code no: 256*
நன்கொடை உபயம் செய்பவர்கள், செக்/டி.டி யாகவும் அனுப்பலாம்.
செக்/டி.டி - "கைலாஷ் டிரஸ்ட்" என்ற பெயர் இடவும்.
செக்/டி.டி அனுப்ப வேண்டிய முகவரி:
கைலாஷ் டிரஸ்ட்.
94/207, தனுஷ்கோடியாபுரம் தெரு.
கோவில்பட்டி.
Pin.628 501
தூத்துக்குடி மாவட்டம்.
Cont..98422 63681
-----------------------------------------------------------
*இராஜபதி கைலாசநாதர் திருக்கோயில் தல அருமை:*
அகத்திய முனிவருக்கு, சீடராகிய உரோமச மகரிஷி சிவமுக்தி வேண்டி சிவபெருமானை வேண்டினார்.
ஈசன் அருளால், அகத்திய முனிவர் உரோமச மகரிஷியை அழைத்து அவர் கையில் ஒன்பது தாமரை மலர்களை கொடுத்து, தாமிரபரணி நதி தொடங்கும் இடத்தில் வடுமாறு கூறினார்.
அப்படி இந்த ஒன்பது மலர்கள் ஒதுங்கும் இடத்தில் சிவபூஜை செய்து வந்தால் உனக்கு முக்திபேறு கிடைக்கும் என்று அருளினார்.
உரோம மகரிஷியும் அவ்வாறே சிவபூஜை செய்து முக்திபேறு பெற்றார்.
நவகிரகங்களும் இந்த ஒன்பது ஆலயங்களை வழிபட்டு, அவரவர்களுடைய அருட்சக்தியை பெற்றன.
உரோமச மகரிஷி வழிபட்டு முக்திபேறு பெற்றமையால், இந்த ஆலயங்கள் நவ கைலாயங்கள் எனப் பெயர் பெற்றது.
இந்த நவகைலாங்கள் மிகவும் பழமை வாய்ந்தவை.
இந்த நவ கைலாயங்களில், எட்டாவது தலமாக விளங்குவது *இராஜபதி கைலாசநாதர் திருக்கோயில்* ஆகும்.
சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்பு, தாமிரபரணி ஆற்றின் வெள்ளப் பெருக்கில், முற்றிலும் அழிவுற்றது.
இதன்பிறகு, கோவில்பட்டி கைலாஷ் டிரஸ்ட் மூலம், நிலம் கையகப்படுத்தி இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டில் பூமி பூஜை செய்து, இரண்டாயிரத்து பத்தாவது ஆண்டில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
வடக்கே காளத்திநாதர் என்றால், இங்கே கைலாசநாதர்.
திருமண, புத்திரபாக்கியம், வியாபாரம், விவசாயம், தொழில் விருத்தி, போன்றவைகளை நிவர்த்தி செய்கிறார் கைலாசநாதர்.
இவ்வாலயத்தில், இராகு, கேது தோஷம், திருமணத் தடை போன்றவைகளுக்குப் பரிகாரமும் செய்யப்படுகிறது.
இவ்வாலயத்தில் பதினாறு பிரதோஷம் பார்த்தால், நினைத்த காரியம் கைகூடும்.
இவ்வாலயத்தில் கண்ணப்ப நாயனார் சந்நிதியும் அமைந்திருக்கிறது.
இங்கு வந்து மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் அபிஷேகம் செய்தால், கணவன் மனைவி ஒற்றுமை கூடும்.
நவலிங்க சந்நிதியில் பக்தர்களே தங்கள் திருக்கரங்களால், அபிஷேகம் செய்து, தோஷ நிவர்த்தி பெறலாம்.
திருச்சிற்றம்பலம்.
_____________________________________
*திருக்கோபுரத்திற்கு உபயம் அளியுங்கள்!*
*திரும்ப பிறப்பில்லா நிலை பேறு பெறுங்கள்!!*
திருச்சிற்றம்பலம்.
____________________________________
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
No comments:
Post a Comment