Wednesday, June 6, 2018

Everything is HIS will-story

சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை.கு.கருப்பசாமி.*
______________________________________
 🌸 *நான், செத்த பிறகு வா! 🌸*
_______________________________________
*📣குறிப்பு:*
தானே எழுதி, வீனே அழியுது!
தேயுரவில் முளையான வைப்புதலமே,
பயிரை காண்பாருண்டோ! அறுவடைக்கு வருவாருண்டோ இன்றேல்!
யானே மடிகிறேன் தலை சாய! (பதிவை மடிக்கிறேன்)
___________________________________
*நானார் என் உள்ளமார் ஞானங்களார் என்னை யாரறிவார் வானோர் பிரான் வந்தென்னை ஆண்டிலனேல்!*

என பாடியிருக்கிறார் நம் மணிவாசகப் பெருமான்.

அமைச்ச பதவி வகித்தவர், உயர் சிறந்த நிர்வாகியர், திருவாசகம் தந்த தமிழ்ப் புலமையாளர், ஞானி என்றெல்லாம் சிறப்புக்குரியவர் நம் மணிவாசகப் பெருமான்.

மேலும் சொல்கிறார்!...., 'ஈசன் இல்லையேல் என்னை யாருக்குத் தெரியும்' என்று நமக்கு உணர்த்தியிருக்கிறார்.

*'எல்லாம் ஆவன் செயல்', எல்லாம் அவன் செயல்* என்றே புலம்பினார்.

எல்லாம் அவன் செயல் என்று நம் மணிவாசகப் பெருமான் கூறியதை,... எதிர்மறை மதத்தோர் இதை, ......

எல்லாம் அவன் செயல் என்றால், நாட்டில் விளையும் கேடுகளுக்கும் அவன் செயல்தானே என்றனர்.

அதாவது நாட்டில் நிலவின கொடுமைகளுக்கும் இறைவன் செயல்தானே என்றிருக்கின்றனர் சமணோர்.

இது போன்ற வினாவினை இப்போதும் வைத்திருப்போர்களுக்கு, இதன் தத்துவத்தை உணராதே இருக்கின்றனர் எனலாம்.

உணரவில்லை என்பதைவிட தெரியவில்லை என்று சாதாரணமாககூட எடுத்துக் கொள்ளலாம்.

இந்த தெரியாமை, அறியாமை, உள்ளவர்கள் மீது, அவர்களை எண்ணி பரிதாபப்பட்டுக் கொள்ள வேண்டுமே தவிர, இவர்களிடம் கடுஞ்சொல் வாதம் செய்து சுடுசொல் வீசுவது ஒன்றுக்கு ஆகா!

*'எல்லாம் அவன் செயல்'* என்று நம் மணிவாசக பெருமான் ஏன் சொன்னார் என்பதை பார்க்கலாம்.

*நான், எனது* என்பது, அகம்பாவத்தின், ஆணவத்தின் வெளிப்பாடு ஆகும்.

இப்படியான வெளிப்பாடு உள்ளவர்களிடம், நாம் மாற்றுறைத்து கருத்து இயம்பினாலும், அவர்கள் மீது சுடு சொல் வீசுவது நமக்கே பாவம்.

இதைத்தான் நம் தேவார அருளாளர்கள் யாவரும் சமணர்கள் மீது வசைபாடாது, ஈசனின் அருளைக் கொண்டே, சைவத்தை நிமிர்த்தி வைத்திருந்தனர்.

இப்படித்தான், நாட்டை ஆளும் மன்னன் ஒருவனுக்கு, ஞானத் தெளிவு பெற வேண்டும் என்ற ஆசை வந்தது.

இதனால் அதற்குரிய முனிவரைத் தேடிச் சென்று பார்த்து அவரிடம்.......

நான் இந்த நாட்டை ஆள்பவன். எனக்கு ஞானத் தெளிவு பெற விருப்பமாக இருக்கிறது என்றான்.

அதற்கு அந்த முனிவரோ..... *ஞானத் தெளிவு* பெற விருப்பம் இருந்தால், *'நான்'* செத்த பிறகு வா என்றார்.

என்ன சுவாமி, சொல்கிறீர்கள்!, நீங்கள் செத்த பிறகு, நான் யாரிடம் வந்து கேட்பது? என்றான் மன்னன்.

நான், என்பது என்னை அல்ல? உன்னை! என்றார் முனிவர்.

இன்னும் புரியவில்லையே சுவாமி! என்றான் மன்னன்.

உன்னிடம் உள்ள 'நான்' என்ற அகம்பாவம் செத்த பிறகு வா என்று சொன்னேன்! என்றார் முனிவர்.

இப்போதுதான் மன்னனுக்குப் புரிந்தது.

'நான்' என்ற செருக்கை ஒழிக்காத வரையில், ஞானத் தெளிவு பெற முடியாது என்பதை உணர்ந்து விட்டான் மன்னன்.

'எல்லாம் அவன் செயல்' என்ற ஒரு சிறிய மனத்
தெளிவு ஒன்றை மனத்தில் வைத்திருந்தால் போதும், 'நான்' என்ற அகம்பாவி ஒழிந்து ஓடிவிடுவான்.

எப்போதும் ஒருவன் தன்னைத் தாழ்த்திக் கொள்கிறானோ, அவன் உயர்ந்தவனாவான் என விவிலியம் உறைக்கிறது.

அதனாலே மணிவாசகப் பெருமான், *நாயிற்கடைப்பட்ட நம்மையுமோர் பொருட்படுத்தி* என தன்னையே தாழ்படுத்தி 'நாயினும் கீழானவன்' என்று சொல்லிக் கொண்டார்.

அவர் காலத்தில் அப்படி சொல்லியிருக்கிறார். இந்த கலியில் நாம் நம்மைத் தாழ்த்திக் கொள்வதே இல்லை. (தன்னை தாழ்த்திக் கொள்ளாதோர்)

நம்மைத் தாழ்த்திக் கொள்கிற மனப்பக்குவம் நமக்கு இருக்குமானால், *நான்* எனும் அகம்பாவி அழிந்து விடும்.

நம் மணிவாசகப் பெருமான் இறைவனிடம்,.... உனக்கு முன்னால் என்னை எந்த நிலைக்கும் தாழ்த்திக் கொண்டே இருப்பேன் என்று சொல்லால் மட்டும் சொல்லவில்லை.

அதை அவர் செயலிலும் வெளிக்காட்டிக் கொண்ட வெளிப்பாடே தலை மழித்தல் ஆகும். (மொட்டை அடித்துக் கொண்டது)

உடலழகிற்கு முக்கியமானது தலை முடி. என்னதான் நம்மை அழகுபடுத்திக் கொண்டாலும் தலை முடி இல்லையினில் அழகே இராது.

இறைவா!, உன் முன்னால் என் அழகை அழித்து விட்டேன். இனி எப்போதும் இங்ஙனமே இருப்பேன் என இருந்தார்.

உன்னை முழுமையாக சரணடைவதின் அடையாளமே இந்த முடி மழித்தல். உனக்கு முன் இந்த அழகே வேண்டாம் என்றிருந்தார்.

அவர் முடிமழித்தல் செய்து கொண்டு, இறைவன் முன் தன்னைத் தாழ்த்திக் கொண்டாலும், இன்று நம் பார்வைக்கு, மணிவாசகப் பெருமானின் கோலம் மிக மிக அழகான தெய்வீக தோற்றமாகவே தெரிகிறார். 

நாம நம்மை இறைவன் முன்பு, தாழ்த்திக் கொள்ள செய்யப்படுவதுதான் மொட்டை போடுதல் ஆகும்.

இதனை நாம் முடி காணிக்கை என்று நாகரீகமாக கூறிக் கொள்கிறோம்.

கோயில்களிலும் முடி காணிக்கை செலுத்துமிடம் என்றும் எழுதி வைத்து விட்டோம்.

இதோடவும் விடவில்லை. கோயிலை விட்டு வெளியே வந்ததும், மழித்ததை மறைக்க, தொப்பி வாங்கி அணிந்து கொள்கிறோம்.

இது தன்னைத் தாழ்துவது ஆகா!

மனத்தாலும், மொழியாலும், மெய்யாலும் நம்மை இறைவன் முன்பு தாழ்த்திக் கொண்டு பக்குவப்படல் வேண்டும்.

அப்போது, அன்பு மனம் தானாக வரும். அன்பு இருக்கும் இடத்தில் இறைவனும் கூடிவர ஆரம்பித்து விடுவான்!

ஈசன் முன்பு தன்னைத்தானே தாழ்த்திக் கொள்வது போல, ஈசனுக்கு ஒரு சிறு உபயத்தை தர முனைப்பெடுங்கள்.

கோபுரத் தரிசனம் கோடி புண்ணியம்! இதை கோபுரத்தை காணும்போதெல்லாம் தரிசிக்கிறோம்.

இதே கோபுரம் உயர்வதற்கு பங்கெடுத்தீர்களென்றால், எத்தனை கோடி புண்ணியம்? மில்லியன் கணக்குதான் போங்க!

இதனால் புண்ணியம் தனமாகும். எதிர்காலத்தில் நம் பிள்ளைகளை அது காக்கும்!

புண்ணியம் எங்க செய்ய என்று தேடவேண்டாம். நீங்கள் வாசிக்கின்ற இந்த பதிவுக்கு கீழே இருக்கிறது.

அதில், உங்கள் உபயத்தை ஆலய வங்கி கணக்கில் செலுத்தி, புண்ணிய ரசீதை பெற்றுக் கொள்ளுங்கள்!

இராஜபதி கைலாசநாதர் திருக்கோயில் திருக்கோபுரம் அமைய உபயம் அனுப்பி விட்டீர்களா?

அனுப்பாதோர் உபயம் அனுப்பி, புண்ணியத்தை தனமாக்கிக் கொள்ளுங்கள்.

ஈசனுக்கு, நம்மால் முடிந்த, நம் பொருளாதார சூழ்நிலைக்குத் தகுந்த உபயத்தை அனுப்பி, ஈசனின் புண்ணியத்தை தனமாக்கி, வருங்கால நம் பிள்ளைகளுக்கு விட்டுச் செல்லுங்கள்.

இதுவரை உபயம் அனுப்பிய அனைவருக்கும் 'நன்றி' என்று ஒரு வார்த்தையுடன் முடிக்காமல், ஈசனின் கருணை உங்களுக்கு பிரவாகமாக, ஈசனிடம் விண்ணப்பம் செய்து கொண்டோம்.

இனியும் இந்தச் செய்தியை அறிந்து உணர்ந்திருந்தவர்கள், தங்களால் இயன்றதை திருக்கோபுரம் அமைய உபயம் அளிக்குமாறு அனைவரின் பாதகமலங்களில் அடியேன் சென்னிமோதி பணிந்துதெழுந்து வணங்கிக் கேட்கிறேன்...

உபயம் அளியுங்கள்!
உபயம் அளியுங்கள்!!
உபயம் அளியுங்கள்!!!

நீங்கள் அளிக்கும் உபயம், உங்கள் கர்ம வினைகளை ஒழிக்கும். புண்ணியம் சேமிப்பாகும்.

நீங்கள் அளிக்கும் உபயங்கள், திருக்கோபுரத்தில், செங்கற்களாய், காரைபூச்சுக்காளாய், வர்ணங்களாய் உங்கள் பெயரைக் கூறிக் கொண்டிருக்கும்.

ஏன், ஆலயத் தரிசனத்திற்கு செல்லும்போது திருக்கோபுரத்தைக் கடந்து போவேமே!, அப்போது ஒவ்வொருவர் மீதும், உங்கள் உபயம், கோபுர நிழலாய் பதியும். இதனால் அவர்களுடைய ஆசியும் உங்கள் கர்மத்தை ஒழிக்கும்.

இப்புண்ணியம் எதிர்காலத்தில் உங்கள் பிள்ளைகளுக்கு தனமாகத் திரும்பும்.

*மனம் நினைக்க மகேசன் அருளாவான்!*
*உபயம் ஒன்றளிக்க, உமாவும் அபயமாவாள்!*

உபயம் அனுப்பாதவர்கள் கூடிய விரைவில் அனுப்பி ஈசனின் புண்ணியத்தை தனமாக்கிக் கொள்ளுங்கள்.

புண்ணியம் செய்தனமே மனமே புதுப் பூங்குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்
பண்ணி நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே!

இப்போது, இராஜகோபுரத்திற்கு இரண்டாவது நிலைகைளைத் தாங்கி நிற்கும் சூழ்நிலை நடந்து கொண்டிருக்கிறது.

பணத்தை வங்கி கணக்கில் அனுப்ப வேண்டிய முகவரி.

*கைலாஷ் டிரஸ்ட்*
*Kailash Trust*
*இந்தியன் வங்கி.*
*Indian bank*
**கோவில்பட்டி கிளை*
*Kovilpatti branch*
*A/Ç no: 934827371*
*IFSC code: IDIBOOOKO51*
*Branch code no: 256*
-----------------------------------------------------------
நன்கொடை உபயம் செய்பவர்கள், செக்/டி.டி யாகவும் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பலாம்.

செக்/டி.டி - 
"கைலாஷ் டிரஸ்ட்" என்ற பெயர் இடவும்.

*செக்/டி.டி அனுப்ப வேண்டிய முகவரி:*

கைலாஷ் டிரஸ்ட்.
94/207, தனுஷ்கோடியாபுரம் தெரு.
கோவில்பட்டி.
Pin.628 501
தூத்துக்குடி மாவட்டம்.
Cont..98422 63681

மற்றும்,

*கோவை.கு.கருப்பசாமி.*
69.B, பெரியசாமி லே அவுட், இரண்டாவது வீதி,
இரத்தினபுரி போஸ்ட்,
கோயமுத்தூர். 641 027
தொலைபேசி: 99946 43516

சிதம்பரம் சென்று வழிபட்டால் முக்தி! திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி! காளையார் கோயிலில் காலடி வைத்தால் முக்தி! திருவாரூரில் பிறந்தால் மோட்சகம்! அது போல, எந்த ஒரு சிவ தல திருக்கோபுரத்திற்கு உபயம் செய்தால் புண்ணியம்!

இராஜபதி இராஜகோபுரப் பணிக்கு பங்களிப்பு செய்யும் அடியார் பெருமக்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும் என்பதும், அவர்களின் குடும்பம் சந்ததி சந்ததியாக சகல வளங்களும் பெற்று வாழ்வார்கள் என்பதும் ஆன்றோர் வாக்கு.

அதற்கிணங்க இராஜபதி ஆலயத்தில் அமையவிருக்கின்ற இராஜகோபுரத்தால், கோடான கோடி புண்ணியப் பலனை அருளுகின்ற புனிதப் பணிக்கு தாங்கள் மனமுவந்து அளிக்கின்ற ஒவ்வொரு பங்களிப்பும் எம்பெருமான் திருவருளினால் தங்களையும் தங்களின் சந்ததியையும் வாழ வைக்கும் என்பதில் சிறிதேனும் சந்தேகமில்லை. இது நிறுதிடமான உண்மை. சத்தியம்.

எனவே எம்பெருமானின் பாதார விந்தமாக விளங்குகின்ற இந்த இராஜபதி இராஜகோபுரப் புனிதப் பணிக்கு கிள்ளியாவது வழங்குங்கள்! அருளைப் பெறுங்கள்!!

நம் மேல் அடியெதுவும் விழுந்தால் 'அம்மா' என அலறுவோம். அதேபோல வீட்டு நிலையில் இடிச்சுக்கிட்டா, 'சிவ சிவ' என்போம்!

அப்போதெல்லாம்......., வாசல் நிலையில் தலையை இடிச்சுக்கிட்டா, உடனே 'சிவ சிவ' 'சிவ சிவ' என மொழிவார்களாம்.

அவன் நாமத்தைச் சொல்ல வேண்டும் என்பதற்காகவே, வாயிலின் நிலை உயரத்தை குறைவாக வைத்திருந்தார்களாம்.

இப்போது உயரஉயரமாய் வைக்கிறோம். நிமிர்ந்து செல்கிறோம். நிலை இடிப்பதில்லை, சிவ சிவ என சொல்வதில்லை.

இனியேனும் ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு வேளைக்கும் சிவ சிவ, சிவ சிவ, என மொழிவோமாக!

சிவ சிவ என்றால் தீவினை
மாயும்!

அதற்காக சிவனே என்று இருந்து விடாதீர்கள். ஈசன் கோபுர உபயம் கொஞ்சம் ஞாபகம் இருக்கட்டும்.
----------------------------------------------------------
*🏜இராஜபதி கைலாசநாதர் திருக்கோயில் தல வரலாறு:*
அகத்திய முனிவருக்கு, சீடராகிய உரோமச மகரிஷி சிவமுக்தி வேண்டி சிவபெருமானை வேண்டினார்.

ஈசன் அருளால், அகத்திய முனிவர் உரோமச மகரிஷியை அழைத்து அவர் கையில் ஒன்பது தாமரை மலர்களை கொடுத்து, தாமிரபரணி நதி தொடங்கும் இடத்தில் வடுமாறு கூறினார்.

அப்படி இந்த ஒன்பது மலர்கள் ஒதுங்கும் இடத்தில் சிவபூஜை செய்து வந்தால் உனக்கு முக்திபேறு கிடைக்கும் என்று அருளினார்.

உரோம மகரிஷியும் அவ்வாறே சிவபூஜை செய்து முக்திபேறு பெற்றார்.

நவகிரகங்களும் இந்த ஒன்பது ஆலயங்களை வழிபட்டு, அவரவர்களுடைய அருட்சக்தியை பெற்றன.

உரோமச மகரிஷி வழிபட்டு முக்திபேறு பெற்றமையால், இந்த ஆலயங்கள் நவ கைலாயங்கள் எனப் பெயர் பெற்றது.

இந்த நவகைலாங்கள் மிகவும் பழமை வாய்ந்தவை.

இந்த நவ கைலாயங்களில், எட்டாவது தலமாக விளங்குவது *இராஜபதி கைலாசநாதர் திருக்கோயில்* ஆகும்.

சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்பு, தாமிரபரணி ஆற்றின் வெள்ளப் பெருக்கில், முற்றிலும் அழிவுற்றது.

இதன்பிறகு, கோவில்பட்டி கைலாஷ் டிரஸ்ட் மூலம், நிலம் கையகப்படுத்தி இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டில் பூமி பூஜை செய்து, இரண்டாயிரத்து பத்தாவது ஆண்டில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

வடக்கே காளத்திநாதர் என்றால், இங்கே கைலாசநாதர்.

திருமண, புத்திரபாக்கியம், வியாபாரம், விவசாயம், தொழில் விருத்தி, போன்றவைகளை நிவர்த்தி செய்கிறார் கைலாசநாதர்.

இவ்வாலயத்தில், இராகு, கேது தோஷம், திருமணத் தடை போன்றவைகளுக்குப் பரிகாரமும் செய்யப்படுகிறது.

இவ்வாலயத்தில் பதினாறு பிரதோஷம் பார்த்தால், நினைத்த காரியம் கைகூடும்.

இவ்வாலயத்தில் கண்ணப்ப நாயனார் சந்நிதியும் அமைந்திருக்கிறது.

இங்கு வந்து மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் அபிஷேகம் செய்தால், கணவன் மனைவி ஒற்றுமை கூடும்.

நவலிங்க சந்நிதியில் பக்தர்களே தங்கள் திருக்கரங்களால், அபிஷேகம் செய்து, தோஷ நிவர்த்தி பெறலாம்.
_____________________________________
*திருக்கோபுரத்திற்கு உபயம் அளியுங்கள்!*
*திரும்ப பிறப்பில்லா நிலை பேறு பெறுங்கள்!!*
-----------------------------------------------------------
நம பார்வதி பதயே!
ஹர ஹர மகாதேவா!!

தென்னாடுடைய சிவனே போற்றி!
ஏந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி!!

           திருச்சிற்றம்பலம்.
____________________________________
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment