Thursday, June 21, 2018

Dakshinamurthy ashtakam sloka 6 in tamil

Courtesy:Sri.S.Chidambaresa Iyer
   2
                                                            ஸ்ரீ ராம ஜயம்

                                            ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி அஷ்டகம்-6

இப்போது இந்த அஷ்டகத்தின் ஆறாவது ஸ்லோகத்திற்கு வருவோம். அது :

" ராஹு கிரஸ்த திவாகரேந்து ஸத்ருசோ மாயா ஸமாச்சாதனாத்
ஸன்மாத்ர: கரணோப ஸம்ஹரணதோ யோ அபூத் ஸுஷுப்த: புமான்
ப்ராக ஸ்வாப்ஸமிதி  ப்ரபோத ஸமயே ய : ப்ரத்யபிஞாயதே
தஸ்மை  ஸ்ரீ குருமூர்த்தயே  நம  இதம்  ஸ்ரீ  தக்ஷிணாமூர்த்தயே ."

இந்த ஸ்லோகத்தில் ஸ்ரீ பகவத் பாதர்கள் பௌத்தர்களின்  நிரீஸ்வர மற்றும்
சூன்யத்தையே அடிப்படை யாகக்கொண்ட கருத்துக்களை பலமாக கண்டிக்கிறார்கள்.
அவர்களுடைய காலத்தில் அது  மிகவும் இன்றியமையாததாக இருந்தது. தன்னுடைய
மேதாவிலாசத்தினால் அவர்கள் தனியாகவே இதைச்செ ய்தார்கள்.  (அதற்கு
ஏறக்குறைய ஸமமான நிலை இன்று ஏற்பட்டிருக்கிறது. பௌத்தமதத்திற்குப்பதிலாக
மேற்கத்திய கலாசாரம் இன்று நம் கவனத்திற்கு வரவேண்டிய நிலையிலுள்ளது. அது
இன்று நம் ப்ராசீனமான கலாசாரத்தையே அழிக்கும்  பாவனையிலுள்ளது. அது
முற்றிலுமாக அழிக்கப்படாவிட்டால் நம் கலாசாரம் முதலில் க்ஷீணித்து, பின்
முற்றிலுமாக மறைந்து போகும் கட்டத்தில் இன்று உள்ளது. இதில் நமது
அரசாங்கம்  முனையாது . நாம் தான் , நம் மதத்தலைவர்கள்தான் இந்த
விஷயத்தில் அக்கறைகொள்ளவேண்டும் என்றாகிறது.)
பௌத்தர்கள்  வேதம் என்று ஒன்று இல்லை, அது சொல்லும் ஆத்மாவும் இல்லைதான்.
சூன்யத்திலிருந்து தான் எல்லாமே ஏற்பட்டனஎன்று சொல்கிறார்கள் .
தற்காலத்திய ஸயன்ஸும் கிட்டத்தட்ட இதையே தான் சொல்லுகிறது,  சயன்ஸ் படி
எல்லாம் தற்செயலாக ( by chance ) ஏற்பட்டதுதான். இவற்றிற்கு மாறாக, நமது
வேதம் சொல்லுகிறது: "தத் ஸ்ருஷ்ட்வா  ததேவ அநுப்ராவிசத்", என்று.
இவ்வார்த்தைகளின்  அர்த்தம் "அதை (அது) சிருஷ்டித்து விட்டு, அதுவே
அதனுள் புகுந்தது," இங்கு 'அது' என்பது பரமாத்மா.  அதுவே புகு ந்தது
என்று சொல்கிறபடியால், ஒவ்வொரு ஜீவனினுள்ளும் பிரகாசிக்கும் ஆத்மாவும்
அதுவே (பரமாத்மாவேதான் ) என்றாகிறது. ஆத்மாவைப்பற்றி வேதம் சொல்கிறது, "
நீலதோயத மத்யஸ்தாத், வித்யுல்லேகேவ பாஸ்வரா , நீவார ஸூகவத் தன்வீ , பீதா,
பாஸ்வத் அணூபமா, தஸ்யா : சிகாயா மத்யே பரமாத்மா விசிஷ்யதே . ஸ ப்ரும்ம ,
ஸ ஹரி : ஸ சிவ :, ஸே ந்த்ர : பரம:, ஸ்வராட் ."  என்று . இதன் அர்த்தம் :
"நீல நிறமான  ஜலத்தின் மத்தியில், மின்னலின் ஒளிக்கற்றையைப்போன்று, சற்றே
மஞ்சள் நிறத்துடனாக,  ப்பிரகாசிக்கிறது . அது நீவார (கோதுமைபோன்ற ஒருதான்
யம்) விதையின் தோலின் முனையளவு ,அணு போன்று மிகச்சிறியதாக உள்ளது. அந்த
முனையின் முடிவின் மத்தியபாகத்தில்,   பரமாத்மா இருக்கிறார். அவர் தான்
பிரும்மா ,அவர்தான் ஹரி,  அவர்தான் சிவன், அவர் தான் இந்திரன், அவர் தான்
எல்லாருக்கும் மேலானவர், அவர் தான் ஸ்வயமான பிரகாசம் உடையவர். அவர்
தேகத்தின் எந்த பாகத்தில் இருக்கிறார்? அதையும் வேதமே சொல்கிறது .
"ஹ்ருதய குஹர மத்யே"--ஹ்ருதயத்தில்  உள்ள ஒரு சிறு வெளியின் மத்திய
பாகத்தில் --என்று. அந்தச்சிறு வெளியில் அணு போன்று
மிகச்சிறியதாகப்பிரகாசிக்கும் ஆத்மாவே தான்,  பரமாத்மாவாக சகல
அண்டங்களையும் வியாபித்தும், அதற்கு மேலும்  ஆக, "அத்யாதிஷ்டத் தசா
ங்குலம் " என்று புருஷ சூக்தம் விவரிக்கும் படி, எல்லா அண்டங்களையும்
தாண்டி, பரம்பொருளாக த்தானே பிரகாசிக்கிறார்.
 இனி ஸ்லோகத்திற்கு வருவோம்.
எல்லா ஜீவன்களுக்கும் , ஜாக்ரத்  (விழிப்பு நிலை ), ஸ்வப்னம், ( சொப்பன
நிலை ) சுஷுப்தி  ( ஒன்றும் அறியாது தூங்கும்  நிலை) என்று மூன்று
நிலைகள் உள்ளன. விழிப்புநிலையில், எல்லாஇந்திரியங்களு ம்செயல் படுகின்றன.
ஒருவன் தூங்கும்பொழுது சொப்பன நிலையில், அவனுடைய மனது ஓரளவுக்கு செயல்
படுகிறது, மற்ற இந்திரியங்க ள்செ யல் படுவதில்லை. சுஷுப்தியில் ஆத்மா
மட்டும் விழிப்புடன் இருக்கிறது. இந்த நிலையில், சூரிய, மற்றும் சந்திர
கிரஹண சமயங்களில் ,சூரியனையோ , சந்திரனையோ ராஹு  கிரஹம் பீடித்த மாதிரி,
ஆத்மா த விர்த்த மற்ற இந்திரியங்களெல்லாம் மாயையினால் முற்றிலும்
மறைக்கப்பட்டமாதிரி தோன்றுகிறது . ஆத்மா ஏன் மறைக்கப்படவில்லை ?
ஏனென்றால் ஆத்மாவை யாரும் எப்பொழுதும் மறைக்கமுடியாது .அது எப்பொழுதுமே
ஸ்வயமாக பிரகாசிக்கும். ஏனென்றால் அது பரமாத்மாவே தான். இதுவரையில்
தூங்கியிருந்தவன், மறுபடி கண்விழித்தவுடன்,  தான் இதுவரை நன்கு
தூங்கிபோயிருந்ததை உணர்கிறான்.  ஆக, நன்கு தூங்கிய  சமயத்திலும் ,
அவனுக்கு தான் இருப்பது என்கிற உணர்வு இருந்திருக்கிறது .  இந்த
உணர்வைத்தான் நாம் ஆத்மா என்று வர்ணிக்கிறோம்.
இந்த அறிவை கல்லால மரத்தின் கீழிருந்து  உபதேசித்த ஸ்ரீ
தக்ஷிணாமூர்த்திப்பெருமானான குருவுக்கு என் நமஸ்காரங்கள்.

ச. சிதம்பரேசன்   19 ஜூன்  2018
பிராமின்  டு டே , மற்றும் வைதிக ஸ்ரீ  மடல்களுக்கு இந்த கட்டுரையை
அனுப்புவதன் உத்தேசம்:  மேற்கத்திய கலாசாரத்தின் தாக்கத்தால், நம் பிராமண
சமூகம் இன்று பெரும்பாலும் பாதிக்கப்பட்டிருப்பதைத்தவிர்க்கவே தான்.
இன்று நம்மிடையே ஆதி சங்கரர் போன்ற மேதைகள் இல்லை. ஆனாலும்.
இவ்விஷயத்தில் நாம் மெத்தனமாக இருப்பது நமக்குத்தான் பெரும் தீங்கு
விளைவிக்கும்.  இந்த மேற்கத்திய கலாசாரத்தின் தாக்கத்தை முற்றிலுமாக
கூடிய சீக்கிரம் முறியடிக்கவேண்டியது நம் கடமை என்பதை நாம் எல்லோரும்
உணர்ந்தாகவேண்டும். இதற்கு உங்கள் இவருடைய ஒத்துழைப்பும் தேவை என்பது
நான் கூறவேண்டியதில்லை. தங்களுடைய மடல் களில் இதைத்தக்கவாறு
பிரசுரித்தால் இது முடியும் என்று நான் நம்புகிறேன். நன்றி . நமஸ்காரம் .
சிதம்பரேசஐயர் .  19-ஜூன் 2018

No comments:

Post a Comment