2
ஸ்ரீ ராம ஜயம்
ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி அஷ்டகம்--4
இப்பொழுது இந்த அஷ்டகத்தின் நாலாவது ஸ்லோகத்திற்கு வருவோம். அது:
" நா நா ச்சித்ர கடோதரஸ்தித மஹா தீப பிரபா பாஸ்வரம்
ஞானம் யஸ் து சக்ஷுராதிகரண த்வாரா பஹி : ஸ்பந்ததே
ஜானாமீதி தமேவ பாந்தம் அனுபாத்யேதத் ஸமஸ்தம் ஜகத்
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே ."
பொருள் :
ஒரு கடம் (அதாவது 'குடம் ') இருக்கிறது.. அதன் மத்தியபாகத்தில் ஏராளமான
த்வாரங்கள் (துளைகள் ) உள்ளன என்று வைத்துக்கொள்வோம்.
அந்தக்குடத்தினுள்ளில் ஒரு பெரிய தீபம் வைத்தால், அந்த தீபத்தினொளி
குடத்திலுள்ள எல்லா த்வாரங்கள் வழியே, நமக்குத்தெரியும். அந்த தீபத்தின்
ஒளி த்வாரங்களிலிருந்து வருவதுபோன்று தான் நமக்குத்தோன்றும்.
வாஸ்தவத்தில், ஒளி குடத்தின் மத்தியில் வைக்கப்பட்டுள்ள
பெரியதீபத்திலிலிருந்து தான் வருகிறது என்பதும், நமக்கெல்லோருக்கும்
தெரியும். அதாவது இந்த ஞானம் என்பது நமது கண் முதலிய வெளி
இந்திரிங்களால் நமக்குத்தெரிகிறது. மத்தியிலுள்ள பெரிய தீபத்தின் ஒளி
தான் (அதாவது பரமாத்மாவின் பிரகாசம் தான், இந்த ஜகத் முழுக்க உள்ள எல்லா
ஜீவன்களிலும் ஜீவாத்மாவாக பிரதிபலிக்கிறது ) ஸ்ரீ பகவத்பாதர்கள் இந்த
ஸாம்யத்தை வைத்து, உலகெங்கும் காணப்படும் ஜீவாத்ம ஜோதி,
பரமாத்மாமாவினுடையதே என்று நமக்கெல்லாம் காண்பிக்கிறார்கள். அவர்கள்
அம்மாதிரி சொல்வதும் வேதத்திலுள்ளதும் , மஹாவாக்கியங்களில்,
சொல்லப்பட்டதுமான உண்மையைத்தான். வேதம் சொல்வது, "தத் தவம் அஸி "
(அர்த்தம்: நீ { ஜீவாத்மான நீ } அதுவாகவே {பரமாத்மாகவே } தான்
இருக்கிறாய் ),, "அயம் ஆத்மா பிரும்ம " ( அர்த்தம்: இந்த ஆத்மா
-{ஜீவாத்மா} என்பது பிரும்மமே, { பரமாத்மாவே தான் }) என்பது போன்ற மஹா
வாக்கியங்கள். பரமசிவனான ஸ்ரீ தக்ஷிணாமூர்த்திதான் இந்த தத்துவத்தை
ஸநகாதி நான்கு முனிவர்களுக்கு உபதேசித்தார். அப்படிப்பட்ட. பரமசிவனின்
இந்த ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஸ்வரூபத்திற்கு இந்த நமஸ்காரம் என்று ஸ்ரீ
பகவத்பாதர் இந்த ஸ்லோகத்தில் சொல்லுகிறார்.
குறிப்பு : இந்த ஸ்லோகங்களைப்படிக்கும் எல்லோருக்கும் பணிவுடன்
இதைச்சொல்லுகிறேன் . நான் , இங்கு எழுதுவதெல்லாம் இந்த ஸ்லோகங்களின்
மேலார்ந்த அர்த்தங்கள் தான். இவற்றின் உள்ளார்ந்த அர்த்தங்களை தகுந்த
பண்டிதர்கள் மூலம் தான் தெரிந்துகொள்ளவேண்டும். ஸ்ரீ பகவத்பாதரின்
சிஷ்யர் ஸ்ரீ சுரேஸ்வராச்சார்யர் அவர்கள், இதற்கு , "மானஸோல்லாஸம்" என்ற
தெளிவான உரை எழுதியிருக்கிறார். அதை நம் அன்பர்கள் படிக்க வேண்டுகிறேன்.
ச. சிதம்பரேச ஐயர் . 15 ஜூன் 2018

No comments:
Post a Comment