Thursday, June 21, 2018

Ashtapadi 19 in tamil

Courtesy: Smt.Dr.Saroja Ramanujam

அஷ்டபதி 19
அடுத்த நாள் கண்ணன் ராதையிடம் வந்து அவளை சமாதானப்படுத்துகிறான்.

மற்றவைகளுக்கு இல்லாத ஒரு மேன்மை இந்த அஷ்டபதிக்கு உண்டு. அதை அந்த ஸ்லோகம் வரும்போது பார்க்கலாம்.

1.வதஸி யதி கிஞ்சிதபி தந்தருசி கௌமுதீ
ஹரது தர திமிரம் அதிகோரம்
ஸ்புரததர சீதவே தவ வதன சந்த்ரமா
ரோசயது லோசன சகோரம்

கிஞ்சிதபி- ஏதாவது ஒரு வார்த்தையாவது 
வதஸி யதி- நீ கூறினால்
தந்தருசி கௌமுதீ- உன் பற்களின் ஒளியாகிற நிலவு 
தரதிமிரம் அதி கோரம்- மிகவும் பயங்கரமான என் பயத்தை ( நீஎன்னை வெறுத்துவிட்டாய் என்ற பயத்தை) 
ஹரது-போக்கடிக்கட்டும்.
தவ – உன்னுடைய
வதன சந்த்ரமா- முகமாகிய சந்திரனில் 
ஸ்புரத் அதர சீதவே – துடிக்கும் உதடுகளாகிய அம்ருதத்தை 
மம – என்னுடைய் லோசனசகோரம்- கண்கள் என்னும் சகோரரபக்ஷிகளை ரோசயது- இன்புறச்செய்யட்டும்

ப்ரியே சாருசீலே முஞ்ச மயி மானம் அனிதானம் 
ஸபதி மதனானலோ தஹதி மம மானஸம்
தேஹி முக கமல மதுபானம் (த்ருவபதம்)

ப்ரியே சாருசீலே- பிரியமான அழகியே 
மயி- என்னிடத்தில் 
அனிதானம் – காதலுக்குப் பொருந்தாத 
மானம் – கோபத்தை 
முஞ்ச – விட்டுவிடு.
ஸபதி-தற்சமயம் 
மதனானல: -மன்மதனால் தூண்டப்பட்ட நெருப்பு
மம மானஸம்- என் மனதை
தஹதி – எரிக்கிறது
முககமல மதுபானம் - உன் இதழமுதத்தை
தேஹி – தருவாயாக.

2.ஸத்யமேவாஸி யதி ஸுததி மயி கோபினீ
தேஹி கர நகர சர காதம்
கடய புஜ பந்தனம் ஜனய ரத கண்டனம்
யேன வா பவதி ஸுக ஜாதம் (ப்ரியே)

ஸுததி- அழகான பற்களை உடையவளே
ஸத்யம் ஏவ – உண்மையாகவே 
மயி- என்னிடத்தில் 
யதி கோபினி – கோபமாக இருந்தால் 
கர நகர சர காதம் – உன் கூர்மையான் நகமாகிய சரத்தினால் என்னை அடித்து விடு. 
புஜபந்தனம் கடய – உன் கைகளால் என்னைக் கட்டிவிடு. 
ரதகண்டனம் ஜனய- உதடுகளால் என்னை கடித்துவிடு. 
யேன வா பவதி ஸுகஜாதம் – அது சுகத்தைக் கொடுக்கும்

3த்வமஸி மம ஜீவனம் த்வமஸி மம பூஷணம்
த்வமஸி மம பவஜலதி ரத்னம்
பவது பவதீஹ மயி ஸததமனுரோதினீ
தத்ர மம ஹ்ருதயம் அதி யத்னம் (ப்ரியே)

த்வமஸி- நீதான் 
மம ஜீவனம்- உயிர்.
த்வமஸி- நீதான் 
மம-என் 
பூஷணம் – ஆபரணம் (சிறப்பு அம்சம்) 
த்வமஸி- நீதான்
மம- எனக்கு 
பவஜலதி- வாழ்க்கையாகிற கடலில் கிடைத்த 
ரத்னம் – ரத்தினம்
இஹ – இங்கு 
பவதீ – நீ
ஸததம் – எப்போதும் 
அனுரோதிநீ- மனம் குளிர்ந்தவளாக
பவது – இருப்பாயாக. 
தத்ர- அதற்காக 
மம ஹ்ருதயம் – என் இதயம் 
அதியத்னம். – மிகவும் யத்தனிக்கிறது.

4. நீல நளினாபமபி தன்வி தவ லோசனம்
தாரயதி கோகனத ரூபம்
குஸும ஸரபாண பாவேன யதி ரஞ்ஜயஸி
க்ருஷ்ணமித மேததனு ரூபம் (ப்ரியே)

தன்வி –மெல்லியலாளே
தவ லோசனம் – உன் கண்கள் 
நீல நளிநாபம் அபி – நீல தாமரை போல் இருந்தும்
கோகனத ரூபம் – சிவந்த வர்ணம்
தாரயதி- தரித்துள்ளது (கோபத்தினால்) 
குஸுமசரபாணபாவேன – (உன் கண்கள் என்கிற) மன்மதனின் அம்புகளால்
இதம் க்ருஷ்ணம்அபி – இந்த கிருஷ்ணனை (நீல வண்ணனையும்)
யதி ரஞ்சயஸி-சிவப்பாக செய்தாயானால் ( அம்புகளால் ஏற்பட்ட உதிரப் பெருக்கினால் ) ரஞ்சயஸி என்றால் சந்தோஷப்படுத்துவது என்றும் அர்த்தம்) 
ஏதத்- இது
அனுரூபம் – பொருத்தமாக இருக்கும்.

5ஸ்புரது குச கும்பயோ: உபரி மணி மஞ்சரீ
ரஞ்ஜயது தவ ஹ்ருதய தேசம்
ரஸது ரஸனாபி தவ கனஜகன மண்டலே
கோஷயது மன்மத நிதேசம் (ப்ரியே)

குசகும்பயோ: உபரி- உன் கும்பஸ்தனங்களின் மேல்
மணிமஞ்சரீ –மணிஹாரம் மலர்க்கொத்துப்போல 
ஸ்புரது- அசையட்டும்
தவஜகனமண்டலே- உன் இடுப்பில் 
ரஸனா அபி – மேகலையும்
ரஸது- ஒலிக்கட்டும். 
மன்மதநிதேசம்- மன்மதனின் செய்தியை 
கோஷயது – கோஷிக்கட்டும்

6ஸ்தல கமல பஞ்ஜனம் மம ஹ்ருதய ரஞ்ஜனம்
ஜனித ரதி ரங்க பர பாகம்
பண மஸ்ருணவாணி கரவாணி சரணத்வயம்
ஸரஸ லஸதலக்தக ஸராகம் (ப்ரியே)

மஸ்ருணவாணி- அழகிய வாக்கை உடையவளே 
பண- கட்டளையிடு 
ஸ்தலகமலபஞ்ஜனம்- நிலத்தாமரையொத்த
மம ஹ்ருதய ரஞ்ஜனம் – என் இதயத்தை மகிழ்விக்கும்
சரணத்வயம் – உன் பாதங்களை 
ஜனித ரதி ரங்க பர பாகம்- ஒன்றுக்கொன்று அழகு செய்வதாக இன்பம் விளைவிக்கும்
ஸரஸ லஸதலக்தக ஸராகம்-பாதங்களின் ஒரே நிறமுடைய செம்பஞ்சுக்குழம்புப் பூசுவதை 
கரவாணி –செய்கிறேன்.

7ஸ்மரகரள கண்டனம் மம சிரஸி மண்டனம்
தேஹீ பத பல்லவம் உதாரம்
ஜ்வலதி மயி தாருணோ மதன கதனானலோ
ஹரது ததுபாஹித விகாரம் (ப்ரியே)

பத பல்லவம் உதாரம் –அழகிய தளிர்போன்ற பாதத்தை 
ஸ்மர கரள கண்டனம் –மன்மதவேதனையால் ஏற்பட்ட விஷத்தை தணிக்கும் பொருட்டு
மமசிரஸி – என் தலையில்
மண்டனம் தேஹி – அலங்காரமாக வை. 
மயி – என்னிடத்தில் 
தாருண; - பயங்கரமான
மதனகதனானல: : காதல்தீயானது 
ஜ்வலதி – தகிக்கிறது. 
ததுபாஹித விகாரம் ஹரது –அதனால் ஏற்பட்ட பாதிப்பு விலகட்டும்.

இந்த அஷ்டபதியின் வரலாறு பின்வருமாறு.
ஜெயதேவர் ஒருநாள் ராதையின் கோபத்தையும் கண்ணன் அவளை சமாதானப்படுத்துவதையும் கூறும் இந்த அஷ்டபதியை எழுதிக்கொண்டு இருந்தார். அப்போது மேற்கண்ட வரிகளை எழுதியவர் பகவான் தலை மேல் ராதையின் பாதங்களை வைப்பதாவது ? இது அபசாரமல்லவா என்று எண்ணியவராய் அதை மாற்ற முயற்சித்தபோது ஒன்றும் சரியாக அமையாமல் அதை அப்படியே விட்டுவிட்டு ஸ்நானம் செய்வதற்கு போய் விட்டார். அப்போது கண்ணன் ஜெயதேவர் உருவம் கொண்டு அங்கு வந்து பத்மாவதியிடம் தான் எழுதிக்கொண்டிருந்ததை தரும்படி கேட்டு அவர் எந்த வரிகளை வேண்டாம் என்று நீக்கினாரோ அதையே எழுதிவிட்டுப் போய்விட்டான். ஜெயதேவர் ஸ்நானம் முடித்து வேறு கற்பனையுடன் வந்து அந்த ஏட்டை எடுத்துப் பார்த்தால் எதை வேண்டாம் என்று நீக்கினாரோ அதே வரிகள் எழுத்ப்பட்டிருப்பதைப் பார்த்து பத்மாவதியிடம் இது யார் எழுதியது என்று கேட்டார். அப்போது அவள் "நீங்கள் தான் ஸ்நானம் செய்யப்போனவுடன் திரும்பி வந்து இதை எழுதிவிட்டு நான் ஸ்நானம் செய்துவிட்டு வருகிறேன் என்று சொல்லிப் போனீர்கள்?" என்றாள் அப்போதுதான் அவருக்கு அது கண்ணனின் விளையாட்டு என்று தெரிந்தது. தன் காணாத பகவானை பத்மாவதி கண்டு விட்டாள் . அவள் பாக்கியம் செய்தவள் என்று அது முதல் அடுத்த அஷ்டபதிகளுக்கு தன் முத்திரையை பத்மாவதி ரமண ஜெயதேவகவி என்று .மாற்றிக்கொண்டு விட்டார்.

இதனால் பகவானுக்கு அவர் பக்தர்களின் மேல் உள்ள அன்பு தெரிகிறது. பாகவதத்தில் ஓர் சம்பவம் இதற்கு உதாரணமாக காண்கிறோம். நாரதர் கண்ணனைக்காண த்வாரகைக்கு வருகிறார் அப்போது எல்லாபத்தினிகள் வீட்டிலும் அவனைகண்டு பிறகு ஒரு தனி இடத்தில் பூஜை செய்பவனாகக் காண்கிறார்." எல்லோரும் உன்னை வணங்க நீ யாரை வணங்குகிறாய்?" என்று கேட்க அவன் என் பக்தர்களின் பாத தூளி இங்கு இருக்கிறது. அதை வணங்குகிறேன் என்று சொல்கிறான். இதிலிருந்து பக்தபராதீனன் என்பது நிதர்சனமாகத் தெரிகிறது.

8. இதி சடுல சாடுபடு சாரு முர வைரிணோ
ராதிகாம் அதிவசன ஜாதம்
ஜயது பத்மாவதி ரமண ஜயதேவகவி
பாரதீபூஷிதம் மாநிநீஜனஜனிதசாதம் (ப்ரியே)

இதி- இவ்வாறு 
முரவைரிண: -கிருஷ்ணனுடைய 
சடுல சாடு படுசாரு- அதி சாமர்த்தியமானதும் அழகியதுமான 
ராதிகாம் அதி- ராதையை குறித்துக் கூறிய 
வசனஜாதம் – வார்த்தைகளை உடைய 
பத்மாவதீரமண- பத்மாவதியின் பதியான 
ஜயதேவகவி- ஜெயதேவரால் 
பாரதீபூஷிதம்- வாக்கினால் அலங்கரிக்கப்பட்ட 
மாநிநீஜனஜனித சாதம் – ஊடல் கொண்ட பெண்களுக்கு சுகம் அளிப்பதுமான கீதம் 
ஜயது- வெல்லட்டும்





No comments:

Post a Comment