Monday, June 18, 2018

Ashtapadi 17 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

அஷ்டபதி- 17

1.ரஜனிஜநிதகுருஜாகர ராக கஷாயிதம் அலஸநிவேசம் 
வஹதி நயனம் அனுராகம் இவ ஸ்புடம் உதிதரஸாபிநிவேசம்

நயனம் –உன் கண்
ரஜனிஜநிதகுருஜாகர ராக கஷாயிதம்- இரவு தூங்காதனாலும் கலக்கமற்று சிவந்து 
அலஸநிவேசம்- மெதுவாக மூடித்திறந்து 
உதிதரஸாபிநிவேசம்- தீவிரமான ஸ்ருங்கர ரஸத்த்தில் ஆழ்ந்து 
அனுராகம் இவ ஸ்புடம்- தெளிவாக ( அவளுடன் ) காதலை தெரிவிப்பதாக 
வஹதி- இருக்கிறது.

அதாவது இரவு பூராவும் அவளுடன் களித்துவிட்டு இங்கு வருகிறாய் என்று குற்றம் சாட்டுகிறாள். 
கண்ணன சொல்கிறான் " இல்லை இல்லை இரவு முழுவதும் உன்னையே நினைத்துக்கொண்டிருந்ததனால் தூக்கம் இல்லாமல் என் கண்கள் அப்படி உள்ளன்" என்று. அதற்கு ராதை சொல்கிறாள்.

ஹரிஹரி யாஹி மாதவ யாஹி கேசவ மா வத கைதவவாதம்
தம் அனுஸர ஸரஸீருக லோசன யா தவ ஹரதி விஷாதம் (த்ருவபதம்)

ஹரிஹரி- கஷ்டம்! 
யாஹி மாதவ – மாதவா நீ போய்வா
யாஹி கேசவ – கேசவா நீ போகலாம்.
கைதவ வாதம்- உன் வஞ்சகமான இன்சொல் 
மா வத – பேசவேண்டாம் 
ஸரஸீருஹலோசன -தாமரைக்கண்ணனே 
யா – எவள்
தவ – உன்னுடைய 
விஷாதம் – மனச்சோர்வை 
ஹரததி- அகற்றுகிறாளோ
தாம் அனுஸர- அவளையே பின்பற்றிச்செல்

2. கஜ்ஜலமலினவிலோசன சும்பன விரசிதநீலிமரூபம்
தசன வஸநம் அருணம் தவ க்ருஷ்ண தநோதி தனோரனுரூபம் (ஹரிஹரி)

க்ருஷ்ண – கிருஷ்ணா
கஜ்ஜலமலினவிலோசன சும்பன-மைதீட்டிய விழிகளை முத்தமிட்டதால் 
விரசித நீலிம ரூபம்- கரும் நிறம் உடையவையாகி 
தவ – உன்னுடைய 
அருணம் தசனவஸனம்-சிவந்த உதடுகள் 
தனோ: -உடலுக்கு
அனுரூபம தனோதி- ஒத்ததக ஆயிற்று ( ( கருமை நிறமாக)

கிருஷ்ணன் சொல்கிறான் " இல்லை அவை நான் உன்னைத்தேடி அலைந்தபோது வண்டுகளால் கடிக்கப்பட்டு அவ்வாறு ஆயின என்று. 
அதற்கு ராதை உன் ஏமாற்றுவேலை இங்கே வேண்டாம் என்று போகச்சொல்லுகிறாள்.

3.வபு: அனுஹரதி தவ ஸ்மரஸங்கர கர நகரக்ஷத ரேகம்
மரகதசகலகலிதகலதௌத லிபேரிவ ரதிஜயலேகம்(ஹரிஹரி)
தவ வபு:- உன்னுடல் 
ஸ்மரஸங்கர கர நகரக்ஷத ரேகம்- காதல் விளையாட்டினால் நகக்குறிபட்டு
மரகதசகலகலிதகலதௌத லிபேரிவ- மரகதக் கல் மேல் தங்க ரேகைகள் போல 
ரதிஜயலேகம்-காதலில் ஜெயத்தை காட்டுவது 
அனுஹரதி- போல தோற்றம் அளிக்கிறது.

கண்ணன் " நான் உன்னைத் தேடி அலையும்போது முட்கள் குத்திய வடுவல்லவா அவை !' என்கிறான். 
ராதை "உன்னை அறிவேன். போய் வா என்கிறாள்.

4.சரண கமலகலத் அலக்தகஸிக்தம் இதம் தவ ஹ்ருதயம் உதாரம்
தர்சயதீவ பஹிர்மதனத்ரும நவ கிஸலய பரிவாரம் (ஹரிஹரி)

தவ ஹ்ருதயம் உதாரம் – உன் பரந்த மார்பில் 
சரணகமல காலத்- அவளுடைய பாதங்களில் இருந்து சிந்திய 
அலக்தக ஸிக்தம் – செம்பஞ்சுக் குழம்பின் கறை
மதனத்ரும நவ கிஸலய பரிவாரம் - மன்மதனாகிற மரத்தின் தளிர்வரிசை 
பஹி: வெளியில் 
தர்சயதி இவ –காண்பிப்பதுபோல் இருக்கிறது.

"அவை சிகப்பு நிற கற்களால் உண்டானவை ." என்கிறான்.
ராதை பொய்யுரை போதும் போய் வா என்கிறாள்.

5..தசனபதம் பவததரகதம் மமஜனயதி சேதஸி கேதம்
கதயதி கதம் அதுனா அபி மயா ஸஹ தவ வபுரேதத் அபேதம்(ஹரிஹரி)

பவததரகதம் – உன் உதடுகளில் 
தசனபதம்-பற்களின் அடையாளம் 
மம சேதஸி- என்மனதில் 
கேதம்- துக்கத்தை
ஜனயதி- உண்டாக்குகிறது. (இன்னொரு பெண்ணின் அடையாளமாதலால்) 
அதுனா அபி- அப்படி இருக்கையில் இப்போது கூட
தவ வபு: -உன் உடல் 
மயா ஸஹ- என்னுடன் கூட
ஏதத் அபேதம் – பேதமில்லாமல் இருக்கும் தன்மையை ( நாம் இருவரல்ல ஒருவர் என்னும் உணர்வை ) 
கதம் கதயதி – எவ்வாறு கூறும்?

கண்ணன், " என் உதடுகளை வண்டு தாமரை என்று நினைத்துக் கடித்துவிட்டது "என்று கூற,
ராதை "போதும் போதும் நான் இனிமேல் உன்னை நம்பத்தயாரில்லை போய்வா. "என்கிறாள்.

6. பஹிரிவ மலினதரம் தவ க்ருஷ்ண மனோ அபி பவிஷ்யதி நூனம் 
கதம் அத வஞ்சயசே ஜனம் அனுகதம் அஸமசரஜ்வரதூனம் (ஹரிஹரி)

க்ருஷ்ண-கிருஷ்ணா
நூனம் - நிச்சயம் 
தவ மன: அபி- உன் மனதும் 
பஹி: இவ – உன் உடலைப்போல (வனத்தில் அலைவதால்) 
மலினதரம் – மிகவும் அழுக்கடைந்து 
பவிஷ்யதி- இருக்க வேண்டும்.
அத கதம் – பிறகு ஏன்
அசஸமசரஜ்வரதூனம் – மன்மதனின் சரத்தால் துயருறும் 
அனுகதனம் – உன்னை நம்பி இருக்கும் 
ஜனம் –ஜீவனை 
வஞ்சயசே- ஏமாற்றுகிறாய்

கண்ணன "நான் உன்னை ஏமாற்றவே மாட்டேன் ," எனக்கூற 
ராதை கோபம் தணியாமல் 'போய் வா ,' என்கிறாள்.

7. ப்ரமதி பவான் அபலாகவலாய வனேஷு கிம் அத்ர சித்ரம்
ப்ரதயதி பூதநிகைவ வதூவத நிர்தய பால சரித்ரம் (ஹரிஹரி)
பவான் – நீ
வனேஷு – வனங்களில் 
அபலாகவலாய – அபலைகளை கவர்வதற்கே (kavala –devour)
பிரமாதி- அலைகிறாய் 
அத்ர- என்பதில்
'கிம் சித்திரம் – என்ன ஆச்சரியம் 
பூதனிகா ஏவ- பூதனை வரலாறே 
வதூவத நிர்தய பால சரித்ரம் – உன் தயை அற்ற பெண்வதம் செய்த பாலலீலையை 
ப்ரதயதி- பறை சாற்றுகிறதே .

அதனால் 'உன்னை நம்ப மாட்டேன் நீ போகலாம் ,' என்கிறாள்

8.ஸ்ரீஜயதேவபணித ரதிவஞ்சித கண்டித யுவதிவிலாபம் 
ச்ருணுத ஸுதாமதுரம் விபுதாலயதோ அபி துராபம்(ஹரிஹரி)

விபுதா:- பண்டிதர்களே 
ஸ்ரீஜயதேவபணித – ஸ்ரீ ஜெயதேவரால் கூறப்பட்ட
ஸுதாமதுரம்- அமிர்தத்திற்கொப்பான
விபுதாலயதோ அபி – தேவர் உலகத்திலும் 
துறாப்ம் – கிடைக்காத 
ரதிவஞ்சித- காதலில் ஏமாற்றமடைந்து
கண்டித யுவதிவிலாபம்- மனமுடைந்த யுவதியின் ப்ரலாபத்தை 
ச்ருணுத- கேளுங்கள்

ராதை கண்ணனுடன் சேர ஆவல் இருந்தும் பொறாமையால் இவ்விதம் அவனைப் புறக்கணித்தாள். அந்த மாயவனுக்கா தெரியாது அவள் மனம் ! அங்கிருந்து போவதைப்போல் விலகி சிறிது தூரத்தில் சென்று காத்திருந்தான். ராதையின் சகி அவளுக்கு நல்லுரை கூற, விடியும் சமயம் அவள் சமாதானம் ஆகி இருப்பாள்என்று கண்ணன் மறுபடி அவளிடம் வந்தான். இதைக்கூறுவது அடுத்த இரண்டு (18, 19)அஷ்டபதி. 19 வது அஷ்டபதி சரித்திரப்புகழ் வாய்ந்தது. அதைப்பிறகு காண்போம்.


No comments:

Post a Comment