Monday, June 18, 2018

Ashtapadi 16 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

அஷ்டபதி 16.

யார் கண்ணனுடன் இருக்கிறாளோ அவள் கொடுத்து வைத்தவள். ஏனென்றால் இந்த விரஹவேதனையை அனுபவிக்கவில்லை என்று ராதை சொல்லுகிறாள்.
1அனில தரள குவலய நயனேன 
தபதி ந ஸா கிஸலயசயனேன 
அனிலதரள –காற்றில் அலைபடும்
குவலய நயனேன –தாமரை போன்ற கண்களை உடைய கண்ணனுடன் இருப்பதால்) 
ஸா- அவள்
கிஸலய சயநேன- இளம்தளிர் படுக்கையில் படுத்து ( விரஹம் மேலிட்டதால்) 
ந தபதி-வெப்பத்தினால் வாடுவதில்லை 
குளிர்ந்த தளிர்களால் ஆன சயனம் வெப்பத்தைக் கொடுக்கிறது விரஹத்தினால்
சகி யா ரமிதா வனமாலினா(த்ருவபதம்)
சகி –தோழி,
யா ரமதே – யார் சுகம் அநுபவிக்கிறாளோ
வனமாலினா- கண்ணனுடன் (அவள்)

2.விகசித ஸரஸிஜ லலிதமுகேன 
ஸ்புடதி ந ஸா மனசிஜ விசிகேன ( யா ரமிதா)
ஸா- அவள்
மனஸிஜ விசிகேன – காமனின் அம்பினால் 
ந ஸ்புடதி- பிளக்கப்படுகிறதில்லை (ஏன் என்றால்) 
விகஸித- மலர்ந்த
ஸரஸிஜ – தாமரை போன்ற 
லலிதமுகேன- அழகிய முகம் கொண்ட கண்ணனோடு இருப்பதால்

3. அம்ருதமதுரம்ருதுதர வசனேன
ஜ்வலதி ந ஸா மலயபவனேன (யா ரமிதா) 
அம்ருத- அமிர்தம் போன்ற 
மதுரம்ருதுதர – மதுரமாகவும் மிருதுவாகவும் உள்ள '
வசனேன –கண்ணனின் சொற்களைக் கேட்பதனால்
மலயபவனேன மலையமாருதத்தால் 
ந ஜ்வலதி- எரிக்கப் படுவதில்லை 
குளிர்ந்த காற்று வெப்பத்தைக் கொடுக்கிறது பிரிவாற்றாமையால்.

4. ஸ்தல ருஹ ருசிர கரசரணேன 
லுடதி ந ஸா ஹிமகரகிரணேன (யா ரமிதா)) 
ஸா- அவள் 
ஹிமகரகிரணேன- சந்திரனின் கிரணங்களால் விரஹம் மேலிட்டு 
நலுடதி- புரளுவதில்லை 
ஸ்தல ருஹ ருசிர கரசரணேன- நிலத்தில் உதித்த் தாமரை போன்ற கைகளும் பாதங்களும் கொண்ட கண்ணனுடன் இருப்பதால்.
தாமரை இருப்பதால் சந்திரன் இல்லை என்றாகிறது. அதனால் சந்திர கிரணங்களால் துன்பம் இல்லை.

5.ஸஜலஜலத ஸமுதயருசிரேண
தஹதி ந ஸா ஹ்ருதிவிரஹதவேன (யா ரமிதா)
ஸா- அவள் 
ஹ்ருதி – ஹ்ருதயத்தில் 
விரஹதவேன – விரஹத்தீயால் 
தஹதி- பொசுக்கப்படுவதில்லை
ஸஜலஜலத ஸமுதய - நீருண்ட மேககூட்டம் போன்ற 
ருசிரேண- ஒளி வீசும் கண்ணனோடு இருப்பதால்

6..கனக நிகஷ ருசி சுசிவஸனேன 
ச்வஸதி ந ஸா பரிஜனஹஸனேன (யா ரமிதா)
கனக நிகஷ ருசி –உரைகல் மேல் பிரகாசிக்கும் பொன் போன்ற 
சுசிவஸனேன – பீதாம்பரத்தை தரித்த கண்ணனோடு இருக்கையில்
பரிஜன ஹஸனேன - சுற்றி உள்ளவர்களால் பரிகாசம் செய்யப் பட்டு. 
(கண்ணன் வருவான் என்று கூறினாயே அவன் வரவில்லையே என்று பரிஹசிப்பவர்களால்)
ந ச்வஸிதி- பெருமூச்சு விடுவதில்லை.
7. ஸகலபுவனஜனவரதருணேன
வஹதி ந ஸா ருஜம் அதிகருணேன(யா ரமிதா)
அதிகருணேன- மிகவும் கருணையுடையவனும் 
ஸகலபுவனஜனவரதருணேன- அகில உலகத்திலும் உள்ளவர்களில் சிறந்த யுவநும் ஆகிய கண்ணனுடன் இருப்பதால்'
ஸா- அவள்
ந ருஜம் வஹதி- ஒருவித கஷ்டமும் அனுபவிப்பதில்லை

8.ஸ்ரீ ஜயதேவ பணித வசனேன
ப்ரவிசது ஹரிரபி ஹ்ருதயம் அனேன 
அனேன – இந்த .
ஸ்ரீ ஜயதேவ பணித வசனேன- ஸ்ரீ ஜயதேவரால் சொல்லப்பட்ட இந்த வார்த்தைகளுடேன் கூட
ஹரி: அபி – ஹரியும்
ஹ்ருதயம் – உள்ளத்தில்
ப்ரவிசது- பிரவேசிக்கட்டும்


No comments:

Post a Comment