Thursday, June 7, 2018

Ashtapadi 12 in tamil

Courtesy: Smt.Dr.Saroja Ramanujam

அஷ்டபதி 12

அஷ்டபதி 12
விரஹதாபத்தால் மெலிந்த ராதையால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. அதனால்சகி மீண்டும் கண்ணனிடம் சென்று ராதையின் நிலையைக் கூறுகிறாள்.

1.பச்யதி திசி திசி ரஹஸி பவந்தம் 
தததரமதுரமதூனி பிபந்தம்

நாத ஹரே ஸீததி ராதா ஆவாஸக்ருஹே(த்ருவபதம்)

நாதஹரே – ஹரே கிருஷ்ண 
ராதா- ராதை 
ஆவாஸக்ருஹே- உங்கள் சந்திக்குமிடத்தில் இருப்பவளாய்
ஸீததி- வருந்துகிறாள்
ரஹஸி-தனிமையில் 
திசி திசி – ஒவ்வொரு திசையிலும் 
பவந்தம் – நீஇருப்பதாகவும்
தததரமதுரமதூனி பிபந்தம் –அவளுடைய தேனொத்த அதரபானம் செய்பவனாகவும் 
பச்யதி- காண்கிறாள்.

2. த்வதபிஸரண ரபசேன வலந்தீ
பததி பதானி கியன்தீ சலன்தீ (நாதஹரே)

த்வதபிஸரண ரபசேன- உன்னை சந்திக்கும் ஆவலால்
வலன்தீ- இழுக்கப்பட்டு 
கியன்தி பதானி- சில அடிகள்
சலந்தீ- செல்பவளாய்
பததி –முடியாமல் விழுகிறாள்

3.விஹிதவிசதபிஸா கிஸலயவலயா
ஜீவதி பரம் இஹ தவ ரதிகலயா(நாதஹரே )

விஹிதவிசத பிஸா- வெளுத்த தாமரைத்தண்டையே
கிஸலய வலயா- வளையாகக் கொண்டு ( சாதாரண கங்கணம் பாரமாகத் தோன்றியதால் அல்லது மெலிந்த கரங்களில் இருந்து வளை நழுவுவதால் )
தவரதிகலயா- உன் மீது கொண்ட ப்ரேமையால் மட்டுமே 
இஹ – இவ்வுலகில்
பரம் ஜீவதி – உயிர்வாழ்கிறாள்.

4.முஹுரவலோகித மண்டன லீலா 
மதுரிபுரஹம் இதி பாவனசீலா(நாதஹரே)

மதுரிபு: அஹம் இதி- நானே கண்ணன் 
பாவனசீலா- என்ற பாவனையில் 
மண்டனலீலா – உனக்குகந்த ஆபரணங்களை பூட்டிக்கொண்டு 
முஹு: அவலோகித – அவற்றைத் திரும்ப திரும்பப் பார்க்கிறாள்.

5. த்வரிதம் உபைதி ந கதம் அபிஸாரம்
ஹரி: இதி வததி சகீம் அனுவாரம் 
ஹரி: - ஹரி 
த்வரிதம் – விரைவாக 
அபிஸாரம்-சந்திக்குமிடத்திற்கு
கதம் – ஏன்
ந உபைதி- வரவில்லை என்று
அனுவாரம் – அடிக்கடி 
சகீம் – தோழியை 
வததி- கேட்கிறாள்

6.ச்லிஷ்யதி சும்பதி ஜலதரகல்பம் 
ஹரிருபகாத இதி திமிரம் அனல்பம் (நாதஹரே)
திமிரம் அனல்பம் – அடர்ந்த இருளைக் கண்டு
ஜலதரகல்பம் – நீருண்டமேகம் போல் இருப்பதால்
ஹரி: உபகாத – ஹரி வந்துவிட்டார் என்று'
ச்லிஷ்யதி- தழுவுகிறாள்
சும்பதி –முத்தமிடுகிறாள்

7. பவதி விலம்பினி விகளிதளஜ்ஜா
விலபதி ரோதிதி வாஸகஸஜ்ஜா(நாதஹரே )

வாஸகஸஜ்ஜா- சந்திக்கும் இடத்தில் தயாராக உள்ளவள்
பவதி விலம்பினி – நீ வராமல் தாமதிக்கையில் 
விகளிதலஜ்ஜா – வெட்கத்தை விட்டு
விலபதி ரோதிதி- புலம்பி அழுகிறாள்.

8.ஸ்ரீஜயதேவகவேரிதம் உதிதம்
ரஸிகஜனம் தனுதாம் அதிமுதிதம்(நாதஹரே)

ஸ்ரீஜயதேவகவே:- ஸ்ரீஜயதேவகவியிடம் 
உதிதம்இருந்து- தோன்றிய 
இதம் – இந்த கவிதை 
ரஸிகஜனம்- ரசிகர்களை 
அதிமுதிதம்- மிகவும் இன்புற்றவர்களாய்
தனுதாம்- ஆக்கட்டும்

குருவால் நல்லுபதேசம் பெற்றபின் கூட நம்மால் பகவானைத்தேடிச் செல்ல முடியவில்லை. நம் பாசபந்தங்கள் தடுக்கின்றன. அப்போது பகவானின் அருள் இருந்தால் மட்டுமே அது சாத்தியம் ஆகிறது. அதனால் நம் சார்பில் குருவே பகவானை வேண்டுகிறார் , " இந்த ஜீவன் உன்மேல் பக்தி கொண்டாலும் சக்தியற்றது , நீதான் இதை காத்தருள வேண்டும்." என்று




No comments:

Post a Comment