Tuesday, May 1, 2018

Sholinganallur anjaneyar

#கரிகாற்_சோழன்_அமைத்த
#கடிகைக்_கோட்டம்_திருக்கடிகை

நரசிம்மர் அவதாரம் நிகழ்ந்த போது #சப்த_ரிஷிகள் பயந்து நடுங்கி, எம்பெருமானின் வடிவழகைச் சேவிக்க முடியாமல் கோட்டை விட்டார்கள்…!

அதனால் மனம் வருந்தி மீண்டும் சேவிக்க விழைந்த போது, #கடிகாசலம் என்னும் சோளிங்கபுர மலையிலே, யோகத்தில் இருக்கும் கோலத்தில், யோக நரசிம்மனாகக் காட்சி கொடுக்கிறார்! #விஸ்வாமித்ரரும் இங்கே பிரம்ம ரிஷி பட்டத்தைப் பெற்றுக் கொள்கிறார்!

முனிவர்கள் இங்கே தவம் இயற்ற, #இந்திரத்துய்மன் என்னும் மன்னன் அவர்கள் தவத்தைக் காக்கின்றான்! ஆனால் முனிவர்களுக்கு #காலன், #கேயன் என்ற இரு அசுரர்களின் தொல்லை அளவுக்கு மீறிப் போகிறது!

மன்னனால் வெறுமனே போர்ப் படைகளை மட்டும் வைத்துக் கொண்டு அசுரனின் மாயப் படையை ஒடுக்க முடியவில்லை!

முனிவர்களை அழைத்து விஷயத்தைச் சொல்லவும் அவனுக்கு விரும்பவில்லை! யோக நரசிம்மரிடமே முறையிடுகிறான்!

இராமாவாதார முடிவில் இறைவனுடன் செல்லாமல், அடியார்களோடு அடியாராக, இங்கேயே தங்கி விட்டார் அல்லவா #அனுமன்!

அந்தப் பெரும் பக்திக்கு என்ன கைம்மாறு செய்ய முடியும் #இராம_பிரானால்!

சீதையின் உயிரைக் காத்து, இலக்குவன் உயிரைக் காத்து, பரதனின் உயிரைக் காத்து, இதனால் இராமனின் உயிரையே காத்த ஒரு #சிறிய_திருவடி,
சுயநலமான மோட்சமும் வேண்டாம், எனக்கு அடியவர் தொடர்பே போதும் என்கிறது! இவருக்கு என்ன செய்து நன்றிக் கடன் தீர்ப்பது?

#பக்த_சாம்ராஜ்ய_சக்ரவர்த்தி என்று #பிரகலாதனைப் பல யுகங்கள் முன்பே பட்டாபிஷேகம் செய்தாகி விட்டது!

அனுமனுக்கு என்ன பட்டாபிஷேகம் செய்து வைப்பது? 

இதற்கு தகுந்த நேரம் வந்து விட்டது…

ஒவ்வொரு அவதாரத்திலும் தன்னை விட்டுப் பிரியாத #சங்கு_சக்கரங்களையே #அனுமனிடம் கொடுத்து விடுகிறார்!

தன் அடையாளத்தையே பக்தனின் அடையாளமாகவும் ஆக்கி விடுகிறார் பெருமாள்…!

நரசிம்மப் பெருமாள் அனுமனை அழைத்தார். சங்கு சக்கரத்தை கையில் கொடுத்து இந்திரத்துய்ம மன்னனுக்கு உதவுமாறு, இறைவனே அனுமனைச் சோளிங்கபுரம் அனுப்பி வைக்கிறான்!

அனுமன் இந்திரத்துய்மனுடன் சேர்ந்து காலன், கேயன் அசுரனையும் அசுர படைகளையும் வென்று அருகில் உள்ள சிறு மலையில் குளத்தை உருவாக்கி சங்கு சக்கரத்தை சுத்தம் செய்தார் அனுமன்…

பணி முடிந்ததும், அனுமனும் யோக நரசிம்மனைப் பார்த்தவாறு, யோக ஆஞ்சநேயனாக அமர்ந்து விடுகிறான்! (சபரி மலை ஐயப்பனை போல யோகப் பட்டம் தரித்து)
சின்ன மலையின் மேல் சிறிய திருவடியும், பெரிய மலையின் மேல் நரசிம்மனும் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு இருக்கின்றனர்!

அவர்கள் பார்த்துக் கொள்ளும் சாளரமும் (ஜன்னல்) இன்றும் உள்ளது! எதற்கு என்று அரியாமல் சன்னலை தகடு கொண்டு அடைத்து விட்டனர் மானிடர்கள்.

இராமனை அன்றி வேறு ஒருவரையும் வணங்காதவர் அனுமன்!
நரசிம்மப் பெருமாளான ஆளரியை மட்டும் வணங்கி வீற்றிருக்கிறார்!
இன்றும் அனுமனின் கைகளில் சங்கு சக்கரங்களைக் காணலாம்! அனுமன் சங்கு சக்கரங்கள் ஏந்திக் காட்சி தருகிறான்! ஒரு அடியவன் பகவானின் ரூபமாகவே ஆகிவிட்ட அபூர்வக் காட்சி, இங்கு மட்டுமே காண முடியும்!

இப்படி பக்தர்களுக்காகத் தன்னையும், தன் உடைமைகளையும் கூடக் கொடுத்து விடும் ஆளரிப் பெருமான் உக்கிர ரூபி அல்ல! கருணையின் வடிவம்! சாந்த ரூபம்!

No comments:

Post a Comment