Thursday, May 3, 2018

Koovam temple

சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை.கு.கருப்பசாமி.*
__________________________________
🌸 *ஐயா!,....பசிக்குதே!*🌸
_____________________________________
கூவம்.

பெயரை கேட்டாலே நாற்றங்கால் உணர்வு ஏற்படும் அளவுக்கு பெயர் பெற்றது.

ஆனால், கூவம் என்றவுடன், மூக்கைப் பிடிக்கும் நாம், மூக்கின் மீது விரலை வைத்து வியக்கக்கூடிய திருத்தலம் இங்குள்ளது.

தலத்தின் பெயர் கூவம். திருவிற்கோலம் என்பது திருக்கோயிலின் பெயர். சுவாமியின் திருநாமம் திரிபுராந்தகர். இவர் தீண்டாத் திருமேனி ஆவார்.

இங்கு பூசனை புரியும் அர்ச்சகர் வெள்ளியிலான பற்றுக் குறடுகளைக் கொண்டே, சுவாமிக்கு அபிஷேக, அலங்காரம் செய்வார். கைகளால் தீண்டப்பட மாட்டார்.

இத்திருமேனியானவர், வெண்மை, கருமை, செந்நிறம் என மூவகை வண்ணங்களை காட்டி, அந்தந்த நிறத்திற்குண்டான, காலநிலையை  உணர்த்தி வந்திருக்கிறார்.

சுவாமியின் திருவுருவில் வெண்ணிறம் படரும் போது, அந்த நேரத்தில் மழை பெய்திருக்கிறது.

சுவாமியின் திருமேனி கருமை நிறமாகத் தெரியும் காலங்களில் மழை பெய்யாதே இருந்து வந்திருக்கிறது.

சுவாமியின் திருமேனியில் செம்மை நிறம் படர்ந்திருக்கும் காலங்களில் நாட்டில் போர் நிகழ்ந்திருக்கிறதாம்.

அற்புதமான இவற்றையெல்லாம் ஞானசம்பந்த பெருமான் உணர்வால் அறிந்தேதான், *ஐயன் நல்ல அதிசயன்* என இத்தலத்து ஈசனை பாடிப் பரவியிருக்கிறார்.

அப்போது, இத்தலத்தில் தருமசீலர் என்பவர் ஒருவர் வாழ்ந்து வந்தார்.

பொருள் நிரப்பப் பெற்றவரான இவர் ஈசன் அருளும் நிறைந்தவர். வேத வல்லுனரும்கூட.

இரக்க குணம் இவரிடம் இருப்பிடமாய் தங்கிக் கொண்டன. ஆகமங்களில் உள்ளவனைத்தையும் கொண்டவர்.

தான் பிறந்ததே சிவபூஜை செய்யத்தான் என்பதை போல, ஆகமவிதிகளை மீறாமல் சுவாமிக்கு நியம முறையோடு வழிபடுவார்.

வாய்ப்பு கிடைக்கும் நேரங்களிலெல்லாம்
சிவபுராண உபன்யாசம் செய்வார்.

தருமசீலரின் மனைவியான மாணிக்கமும் பெயருக்கேற்ற உத்தமி ஸ்தானத்தை உடையவர்.

வீடு தேடி வரும் அடியார்களுக்கு தங்க இடமளித்து உணவும், உடையும் தந்து, தருமசீலரும் அவர் மனைவியும் துணையிருந்து உபசரிப்பார்கள்.
 
இராணுவம், இவர்களின் தொண்டையும் குணத்தையும் பார்த்து, என்ன குணம்!, என்ன மனது!, என்று இவர்களை பார்த்து பெருமையாகச் பேசி பாராட்டினர்.

எல்லோரும் தருமசீலரைப் பாராட்டுவதை பொறாமைப்பட்டோ, எண்ணமோ. வருணபகவான் ஒரு முடிவை எடுத்தான்.

இவரோ உண்பதற்கும், உடுப்பதற்கும் வாரி வழங்கிக் கொண்டு இருக்கிறாரே? நாம் சற்று ஓய்வு எடுப்போம் இவர் நிலமை எண்ணாவது பார்க்கலாம் என்றிருந்தார்.

நாம் ஓய்வு எடுத்து கொண்டதால், மழை இல்லை. அப்புறம் என்ன பஞ்சந்தான்.

விளைபயிர்கள் யாவும் வாடிச் சாய்ந்தன. ஊரெங்கும் பஞ்சம். விவசாயம் மடிந்ததால் பசிப்பிணி ஆக்கிரமித்தது.

தருமசீலர் மனம் பதைபதைத்தது. அடியார்களுக்கு அமுது செய்விக்க, குதிலில் சேமித்து வைத்திருந்த நெல்லை வாரி வழங்கினார்.

வந்த சிலருக்கு நெல்லுக்குப் பதில் இருந்த அரிசியையும் வழங்கினார். ஏற்கனவே வறுமையோடு இருந்தவர்களைக் கண்டு, ஆடைகளைத் தருவித்துக்  கொடுத்து உதவினார்.

இதனால் பொருளெல்லாம் தீர்ந்து போனது, பொருள் தீர்த்தத்தால், அதே பொருளைப் பெற விளைநிலங்களை விற்று உதவிகளைச் செய்தார்.

பொருளாதார நிலை சீர்கெடவும், கணவரின் தொண்டுக்கு ஆதரவாக மனைவியும், தன் நகைகளைக் கழற்றி கொடுத்து விற்கச் சொன்னாள்.

நகைகளை விற்ற பணத்தைக் கொண்டு சில காலம் வரை அடியார்களின் பஞ்சத்தை தணித்து வந்தார்கள்.

இத்தம்பதிகளின் தானதர்மங்களைக் கண்டு, தொண்டை நாடு பூராவும் போற்றிப் புகழ்ந்தார்கள். நகைகளை விற்ற பணம் எவ்வளவு நாட்களுக்கு தான் தாக்குப்பிடிக்க முடியும்? கூடிய விரைவில் தீர்ந்து போனது.

தருமசீலரின் குடும்பத்திற்குள்ளும் வறுமை புகுந்தது. வரும் அடியவர்களுக்கு அளிக்க ஏதுமில்லை.

இதற்காக அவர் மனம் கலங்கவில்லை. வீடுகளுக்குச் சென்று
பிச்சை எடுக்கத் தொடங்கினார்.

இதில் கிடைத்ததை முதலில் ஏழைகளுக்கு கொடுத்து உதவி வந்தார்.

வறுமையாளர்களிடம் எதை எண்ண எதிர்பார்க்க முடியும்? அவர்களிடம் பஞ்சம் படர்ந்தேன் இருந்தே வந்ததே.

ஒரு நாள் தெருபூராவும் சுற்றி வந்தும் தருமசீலருக்கு, ஒரு ஆளுக்கு உணவு சமைக்க அரிசி கூட கிடைக்கவில்லை.

கையேந்தி வந்த பலரும், தருமசீலரின் நிலையைக் கண்டு,  இவரைப் பார்க்க மனம் இல்லாது திரும்பி நின்றனர்.

இப்படி பல நாள், வெறும் வயிற்றோடவே பட்டினி கிடந்தார்கள்.

இந்நிலையிலும் வழிபாடுகளை நிறுத்தவில்லை. ஒரு நாள் பகல் பூஜையை முடித்து விட்டு, வீடு திரும்பிய தருமசீலர் வாசலிலேயே மயங்கி விழுந்து விட்டார்.

அந்த நேரத்தில், ஐயா பசிக்கிறது!, நடக்க முடியவில்லையே? சிவ சிவா! " என ஒரு குரல் கேட்டது.

அவ்வளவு தான்! மயங்கி படியில் படுத்திருந்தார் சிவ சிவா!' என்ற குரல் கேட்டு தருமசீலர் 'பளிச்'சென்று எழுந்தார்.

விபூதியும் ருத்ராட்ச மாலையும் அணிந்து, சிவனடியார் ஒருவர் பசியுடன் நிற்பதைப் பார்த்தார்.

உள்ளம் நடுங்கியபடி, நடை கிறங்கியபடி அடியரை வரவேற்று, வீட்டில் அமரவைத்து இதோ வருகிறேன் என்று கூறி கிளம்பினார்.

மறுபடியும் ஒரு முறை, பிச்சைக்கு போகாத தெருவுக்குள் புகுந்தார் தருமசீலர்.

முகத்தில் கலக்கத்தோடு வந்த இவரைக் கண்டதும், என்ன கொடுமை? இவருக்கா இந்நிலை? என கலங்கிய சிலர், பல கைபிடி அளவு அரிசியை இட்டனர்.

தருமசீலருக்கோ ஒரே குஷியாகிப் போனது. குறுகிய நேரத்தில் ஒரு படி அரிசி கிடைத்து விட்டதே என்றபடியே வீட்டுக்கு ஓடோடி வந்தார்.

உணவு தயாரானது. களைத்திருந்த அடியார்க்கு அமுது அளித்தனர். அடியாரும் உணவருந்தி, வாழ்த்தி ஆசி கூறி அகன்றார்.

அவர் போனதும் மீதி உணவை உண்ண, தருமசீலரும் மாணிக்கமும் அமர்ந்தனர்.

அப்போது, ஐயோ!, பசிக்கிறதே! குடலே வெளியில் வந்து விடும் போலிருக்கிறதே! என அலறல் சத்தம் வாசலில் கேட்டது.

இதை கேட்ட தருமசீலர், பசிக்கிறக்கத்தில் இருந்தாலும்  "சிவ சிவா!" என மொழிந்து வாயிலைக் பார்த்தார்.

மனைவியிடமும்.....மாணிக்கமே!,  அடியார் வடிவில் இறைவன் வருவதாக ஞானிகள் சொல்லியிருக்கின்றார்களே! அது  உண்மைதான்போல, சோதனை மேல் சோதனையாக இருக்கிறதே என்றார்.

மாணிக்கமும், பசியை ஒழித்த வண்ணம், அழைத்து வாருங்கள், இந்த அண்ணத்தை அவர்களுக்கே பறிமாறி விடலாம் என்றாள் மனைவி.

இருவருமாக வரவேற்று அடியாரை அமர வைத்தனர். இருந்த உணவை பரிமாறினர். அதற்குமேல்  தருமசீலருக்கு நிற்க முடியவில்லை. கீழே விழாமல் இருக்க, சுவற்றில் அழுத்தமாக சாய்ந்து நின்று கொண்டார்.

அவர் மனைவிக்கோ தரையில் உள்ள அணைத்துமே சுழன்ற வண்ணம் இருந்தது. கண்கள் இருட்டி வந்தது.....

சித்தம் சிவனிடம் இருந்தது. அந்த வேளையில்...அம்மா! பெருங்குரல் ஒன்று அசரீரியாக எழுந்தது.

இருவரும் மீளா மிரட்சியுடன் திகைப்புடன் சிறிது விழியைத் திறந்தனர்.

அடியவர் உண்ண அமர்ந்திருந்த இடம் ஒளிப்பிளம்பாகத் தெரிந்தது. 

இந்த ஒளி வெள்ளத்தில் எழுச்சி கண்டனர் இருவரும். தெம்பு எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை.

ஒளி தெரிந்த இடத்தை உற்று நோக்க......

காளை வாகனத்தில் உமாதேவியுடன், திருவிற்கோல நாதராக காட்சியளித்தார்கள்.

தருமசீலரும் மாணிக்கமும் வியந்து பயபக்தியுடன் கைதொழுது விழுந்து வணங்கினார்கள்.

வருந்தாதீர்கள்! உங்கள் தொண்டின் மீது உறுதியான பற்று வைத்திருக்கிறீர்கள்.

அடியார்கள் மீது தாங்கள் கொண்டுள்ள பக்தியை உலகம் அறியவே இவ்வாறு செய்தோம். குடநெல் உங்களுக்குக்கு கோயிலில் கொடுப்போம். பெற்றுக் கொள்க! என்று கூறி மறைந்தார்.

மனைவி பின்தொடரத் தருமசீலர் கோயிலுக்கு ஓடினார்.

அங்கே.., பலிபீடத்தின் அருகில் குடம் முழுவதும் நிறைந்த, நெல்குடம் இருந்தது. அதை எடுத்துக் கொண்டு திருவிற்கோலநாதரை வணங்கிய, தருமசீலர் மீண்டும் தர்மத்தை தொடர்ந்தார்.

அதுவரை வராதிருந்த மழை,  நாம் இல்லாவிட்டாலும் தருமசீலரின் தர்மம் தாளாது, என்று வருணன் மழையை பெய்யவிட்டான்.

தொடர்ந்த மழையினால். பயிர் பச்சைகள் தழைத்தது பஞ்சம் தீர்ந்தது. செழிப்பு மெல்ல மெல்ல நகர்ந்து வந்தன.

கஷ்டம் வந்த போதிலும் கடமை தவறாமல் விடா முயற்சியுடன் போராடிய தருமசீலத் தம்பதியர் அடியார்யானவர்களுக்கு ஒரு பாடம்.

நாம் செய்யும் தொண்டுகளுக்கு ஈசன் துணையாக இருப்பார் என்பதை விளக்கிய வரலாறு இது.

எந்தவித விடாமுயற்சியும், நல்ல உள்ளமும்தான் ஈசனின் காட்சியை காண பேறு வாய்க்கும்!


             திருச்சிற்றம்பலம்.
___________________________________
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை.கு.கருப்பசாமி*
---------------------------------------------------------
அனைத்து அடியார் பெருமக்களின் திருவடிகளில் அடியேனின் சென்னி மோதிய பணிவான வணக்கங்கள்.

இத்துடன் இராஜபதி ஆலய இராஜகோபுரம் அமையவிருக்கும் தலத்தின் அமைப்பிட காணொலியும், மற்றும் விபர பத்திரிக்கைமும் அனுப்பியுள்ளோம்.

அடியார்கள், பக்தர்கள், வணிகர்கள், தங்கள் பொருளாதாரத்துக்கு தகுந்த உபாயத்தை செலுத்தி எதிர்கால சந்ததியின் பிள்ளைகளுக்கு புண்ணியத்தை சேமித்து வைக்க இவ்வாய்ப்பினை ஈசன் அருளினான். ஈசன் தரும் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

எனவே அடியார்கள் பங்கெடுத்து உபாயம் அளிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

பிச்சை கேட்பவனாக உங்கள் முன் இப்பதிவோடு நிற்கிறேன். ஒரு சிறு தொகையாவது அனுப்புத் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நூறு ரூபாயாக கொடுத்தாலும் கோடி பேர் கொடுப்பதில் திருக்கோபுரம் திருவருளாகி உயர்ந்து விடும்.

ஈசனின் கோபுரம் உயர உங்கள் பங்களிப்பானது கோபுரத்தில் கருங்கற்களாய், செங்கல்களாய், சிற்பங்களாய், வண்ணமாய் அமையப் போகிறது.

இதற்கு வித்தான உங்களுக்கு, உங்கள் குடும்பத்திற்கு, பிள்ளைகளுக்கு புண்ணியமாய் இருக்கும்.

இடையூரான காலகட்டத்தில், இந்த புண்ணியம் உங்கள் பிள்ளைகளுக்கு  நல்வழிகாட்டும். 

உங்களுக்கு ஈசன் கருனை பிரவாகமாகட்டும்.

சிவ சிவ சிவ சிவ சிவ. திருச்சிற்றம்பலம்.

பணம் அனுப்ப வேண்டிய ஆலய வங்கி கணக்கு எண்:
--------------------------------------------------------
கைலாஷ் டிரஸ்ட்.
இந்தியன் வங்கி.
கோவில்பட்டி கிளை.
A/Ç.no: 934827371
IFSC code: IDIB000K051
Branches code no: 256

          திருச்சிற்றம்பலம்.

--------------------------------------------------------
*திருக்கோபுரத்திற்கு உதவுங்கள், திரும்ப பிறப்பில்லா நிலை எய்துங்கள்.*

No comments:

Post a Comment