Thursday, May 31, 2018

Ashtapadi 7 in tamil

Courtesy:smt.Dr.Saroja Ramanujam

அஷ்டபதி-7

அஷ்டபதி 7
ஸ்லோகம் 
கம்ஸாரிரபி ஸம்சாரவாஸனாபந்தஸ்ருங்கலாம் 
ராதாம் ஆதாய ஹ்ருதயே தத்யஜ வ்ரஜசுந்தரீ:

கம்ஸாரிரபி- கிருஷ்ணன் (கம்ஸாரி- கம்சனை கொன்றவன்), கம் என்றால் சுகம் கம் ஸாரயதி – கம்ஸாரி: - சுகத்தைக் கொடுப்பவன் 
ஸம்சாரவாஸனாபந்தஸ்ருங்கலாம் – (கர்மவினை என்ற தளைக்குட்பட்ட ஜீவனான), ஸம் ஸம்யக் ஸாரம் ஸம்ஸாரம் – சிருங்காரம், வாஸனா- தொடரும் நினைவுகள் . பந்த ஸ்ருங்கலா- பிணைக்கும் சங்கிலி. அதனால் பிணைக்கப்பட்ட ராதை என்று பொருள். 
ராதாம்-ராதையை 
ஹ்ருதயே ஆதாய- மனதில் கொண்டு
வ்ரஜசுந்தரீ:- மற்ற கோபியரை
தத்யஜ- விட்டு நீங்கினான்.

கிருஷ்ணனும் ராதை கோபித்துக் கொண்டு சென்றதைப் பார்த்து வருந்துகிறான். அவனுடைய மனோநிலையைக் குறிப்பது இந்த அஷ்டபதி. ஜீவன் தன்னை விட்டுப் பிரிந்து சம்சாரத்தில் அகப்பட்டு வருந்துகையில் பகவானும் அந்த ஜீவனைக்குறித்து வருந்துகிறான் என்பது இதன் பொருள்.இனி அஷ்டபதியைக் காண்போம்.

1.மாம் இயம் சலிதா விலோக்ய வ்ருதம் வதூநிசயேன
ஸா அபராததயா மயா அபி ந வாரிதா அதிபயேன

ஸா இயம் – இந்த ராதை 
மாம் – என்னை
வதூநிசயேன –பெண்களுடன் 
வ்ருதம்-சூழப்பட்டவனாகப்
விலோக்ய – பார்த்து
சலிதா-சென்றுவிட்டாள்
மயா அபி- என்னாலும்
அபராததயா – குற்றம் செய்தேன் என்பதனால் 
ந வாரிதா- தடுக்கப்படவில்லை

ஹரி ஹரி ஹதாதரதயா ஸா கதா குபிதேவ (த்ருவபதம் )

ஹரிஹரி- கஷ்டம் !
ஹதாதரதயா- கவனிக்கப படாமையால் 
குபிதேவ – கோபம் கொண்டு
ஸா- அவள் 
கதா – சென்றுவிட்டாள்

2. கிம் கரிஷ்யதி கிம் வதிஷ்யதி ஸா சிரம் விரஹேண
கிம் தனேன ஜனேன கிம் மம ஜீவிதேன க்ருஹேண

ஹரி ஹரி ஹதாதரதயா ஸா கதா குபிதேவ (த்ருவபதம்)

ஸா –அவள், கிம் கரிஷ்யதி ,என்ன செய்வாளோ, சிரம் விரஹேண -விரஹ தாபத்தினால் வெகு நேரம் வருந்தி , கிம் வதிஷ்யதி - தோழியிடம் என்ன சொல்வாளோ? அவளில்லாமல், தனேன -செல்வத்தினாலோ , ஜனேன -மற்றவர்களாலோ அல்லது ஜீவிதேன க்ருஹேண- வாழ்வதினாலோ, கிம் - என்ன பயன்?

3.சிந்தயாமி ததானனம் குடில ப்ரூகோப பரேண
சோணபத்மம் இவ உபரிப்ரமதாகுலம் ப்ரமரேண
ஹரி ஹரி ஹதாதரதயா ஸா கதா குபிதேவ (த்ருவபதம்)

குடிலப்ரூகோபபரேண- கோபத்தால் நெரிந்த புருவத்துடன் கூடிய
ததானனம் – அவள் முகத்தை
சோணபத்மம் – சிவந்த தாமரை மலர்
உபரிப்ரமதாகுலம் ப்ரமரேண- மேல் சூழ்ந்து சஞ்சரிக்கும் வண்டுகள் போல 
சிந்தயாமி. – நினைக்கிறேன்.

4.தாம் அஹம் ஹருதி ஸங்கதாம் அனிசம் ப்ருசம் ரமயாமி
கிம் வனே அனுஸராமி தாம் இஹ கிம் வ்ருதா விலபாமி
ஹரி ஹரி ஹதாதரதயா ஸா கதா குபிதேவ (த்ருவபதம்)

அஹம் – நான் 
தாம் – அவளை 
ஹ்ருதி ஸங்கதாம் –என் ஹ்ருதயத்தில் உள்ளவளாக 
அனிசம் -எப்போதும் 
ப்ருசம் ரமயாமி- மிகவும் இன்பமடைகிறேன். அப்படி இருக்கையில்
கிம் – எதற்காக 
வனே – காட்டில்
அனுஸராமி – தேடிப பின் செல்ல வேண்டும்.?
இஹ- இங்கு 
கிம் – ஏன்
வ்ருதா – வீணாக 
விலபாமி- புலம்ப வேண்டும்?

இறைவன் தன்னை அறியாமையால் விட்டுச்சென்ற ஜீவனிடம் என்றும் பிரியாமல்தான் இருக்கிறான். விட்டுப்பிரிதல் என்பது நம் அறியாமை என்னும் மாயையே. உலக இன்பத்தை நாடி இறைவனை மறந்து விடுவதயு ஒரு நிலை. அந்த உலக வாழ்க்கையால் துன்புற்று என்னை மறந்து விட்டான் இறைவன் என்று குழம்புவது இன்னொரு நிலை. இதுதான் ராதையின் நிலை.

5.தன்வி கின்னம் அசூயாயா ஹ்ருதயம் தவ ஆகலயாமி 
தன்ன வேத்மி குதோ கதா அஸி ந தேன தே அனுனயாமி
ஹரி ஹரி ஹதாதரதயா ஸா கதா குபிதேவ (த்ருவபதம்

தன்வி-மெல்லியலாளே
தவ ஹ்ருதயம் – உன் மனம் 
அசூயயா-பொறாமையினால் 
கின்னம்- வருத்தம் அடைந்திருக்கிறது என்று
ஆகலயாமி- அறிகிறேன்.
குதா கதா அஸி- நீ எங்கு சென்றாய் 
தத் – என்பதை 
ந வேத்மி- அறியேன் 
தேன – அதனால் 
தே- உன்னை 
அனுனயாமி-பின் தொடர்ந்து சென்று சமாதானம் செய்ய முடியவில்லை.

6.த்ருச்யசே புரதோ கதாகதம் ஏவ மே விததாஸி
கிம் புரேவா ஸஸம்ப்ரமம் பரிரம்பணம் ந ததாஸி
ஹரி ஹரி ஹதாதரதயா ஸா கதா குபிதேவ (த்ருவபதம்)

மே- எனக்கு
புரத: - முன்னால்
கதாகதம் ஏவ – நடமாடிக்கொண்டிருப்பவளாகவே
த்ருச்யஸி- காணப்படுகிறாய் ( அதாவது எப்போதும் கண்முன்னால் இருப்பவளாக) 
கிம்_ ஏன்
புரே இவ – முன் போல் 
ஸஸம்ப்ரமம் – ஆர்வமுடன் 
ந ததாஸி பரிரம்பணம் – அணைத்துக்கொள்ளாமல் இருக்கிறாய் ?

7. க்ஷம்யதாம் அபரம் கதாபி தவ ஈத்ருசம் ந கரோமி
தேஹி சுந்தரி தர்சனம் மம மன்மதேன துனோமி. 
ஹரி ஹரி ஹதாதரதயா ஸா கதா குபிதேவ 
(த்ருவபதம்)

கதா அபி – ஒருபொழுதும் 
ஈத்ருசம் – இவ்வாறு
அபரம்- மற்றொரு தவறை
தவ – உன்னிடம் 
ந கரோமி- செய்ய மாட்டேன் 
க்ஷம்யதாம் – மன்னிக்க வேண்டும்.
சுந்தரி- அழகியே
மம – எனக்கு
தர்சனம் தேஹி- தரிசனம் கொடு. 
மன்மதேன- மதனாவஸ்தையால் 
துநோமி- வருந்துகிறேன்.

பகவான் நம்மைப் பிரிந்து படும் அவஸ்தையை இது விவரிக்கிறது. கருணையால் நம்மை காக்க பாடுபடுகிறான். நாம் இருக்கும் இடம் தெரிய வில்லை என்பது நம் மன நிலை அவனை விட்டு தூரத்தில் இருப்பதால் உண்டான பச்சாதாபத்தைக் குறிக்கிறது.நான் உன்னை இனிமேல் விடமாட்டேன் என்று கூறுகிறான்.

கஜேந்தரனும் திரௌபதியும் அல்லலுறும்போது பகவானும் அவர்கள் கூப்பிடமாட்டார்களா என்று தவித்தானாம் . கூப்பிட்டவுடன் ஓடோடி வந்தான்.

8.வர்ணிதம் ஜெயதேவகேன ஹரேரிதம் ப்ரவனே(णे)ன
கிந்து பில்வஸமுத்ர ஸம்பவ ரோஹிணீரமனே(णे)ன 
ஹரி ஹரி ஹதாதரதயா ஸா கதா குபிதேவ (த்ருவபதம்)

இதம் – இந்த சம்பவம் 
ஹரி ப்ரவனே(णे)ன- ஹரியின் மீது மனம் வைத்த 
கிந்து பில்வஸமுத்ர ஸம்பவ ரோஹிணீரமனே(णे)ன- கிந்துபில்வம் என்கிற சமுத்திரத்திலிருந்து தோன்றிய சந்திரனைப்போன்ற 
ஜெயதேவகென – ஜெயதேவரால் 
வர்ணிதம் – வர்ணிக்கப்பட்டது.


No comments:

Post a Comment