Monday, May 28, 2018

Ashtapadi 5 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam 

கீதகோவிந்த மகா காவ்யம்

அஷ்டபதி 5

அஷ்டபதி 5
ராதை கோபித்து அவனை விட்டு நீங்கினாலும் அவன் நினைவை தடுக்க முடியாமல் அவனை நினைத்து கூறும் அஷ்டபதி இது. ராஸக்ரீடையில் அவன் அழகையும் அந்த அநுபவத்தையும் நினைவு கூறுகிறாள்.

1.ஸஞ்சரத்அதர ஸுதாமதுரத்வனி முகரித மோகன வம்சம் 
சலித த்ருகஞ்சல சஞ்சல மௌளி கபோல விலோலவதம்ஸம்

ராஸே ஹரிம் இஹ விஹிதவிலாஸம் 
ஸ்மரதி மனோ மமகருத பரிஹாஸம்( த்ருவபதம்)

ஸஞ்சரத்அதர- அசையும் உதடுகளில் இருந்து வரும்
ஸுதாமதுரத்வனி – அமுதம் போன்ற இசையை
முகரித – வெளிப்படுத்தும் 
மோகன வம்சம் – அழகிய குழல்
சலித த்ருகஞ்சல – சலிக்கும் கண்கள் 
சஞ்சல மௌளி- தலை அசையும்போது
கபோல விலோலவதம்ஸம்- கன்னத்தில் விளையாடும் குண்டலங்கள்
ராஸே- ராசக்ரீடையின்போது 
க்ருத பரிஹாஸம்- என்னுடன் பரிகாசத்துடன் 
விஹிதவிலாஸம் – விளையாடின
ஹரிம் – ஹரியை 
மனோ – என்மனம் 
ஸ்மரதி- நினைக்கிறது. .

எவ்வளவு அழகான கற்பனை! கிருஷ்ணனின் அழகிய முகத்தில் அசையும் உதடுகள் , அவன் குழலின் இனிய கானம். அவன் குழல் ஊதும்போது கான லயத்திகேற்ப தலையை அசைப்பதனால் கன்னங்களில் விளையாடும் அவன் குண்டலங்கள்.
அதை எவ்வாறு மறக்க இயலும் என்று ராதை ஏங்குகிறாள்.

2.சந்த்ரக சாரு மயூர சிகண்டிக மண்டலவலயித கேசம்
ப்ரசுர புரந்தர தனுரனுரஞ்சித மேதுரமுதிரஸுவேசம் 
ராஸே ஹரிம் இஹ விஹிதவிலாஸம் 
ஸ்மரதி மனோ மமகருத பரிஹாஸம்

சந்த்ரகசாரு மயூர சிகண்டிக– சந்திரனைப் போல அழகிய மயிற்பீலி 
மண்டலவலயித கேசம் –சுற்றி அமைந்த கேசம்
மேதுரமுதிரஸுவேசம்- கார்மேகத்தின் மேல்
ப்ரசுர புரந்தர தனுரனுரஞ்சித- காணப்படும் அழகிய வானவில்லை போல விளங்கும். (அவனை என் மனம் நினைக்கிறது)

கண்ணனின் கேசத்தைச்சுற்றி மயில் தொகைகள் அரை வட்டமாக அமைக்கப் பட்டிருக்கின்றன. அவைகளின் நடுப்பாகம் சந்திரனைப்[போல் உள்ளது. கேசத்துன் கருமை கார்மேகத்தை ஒத்திருக்கிறது. அதன் மேல் வண்ணங்களுடைய மயிற்பீலி ஒரு வானவில்லைப் போல் தோற்றம் அளிக்கிறது. சந்திரனும் வானவில்லும் சேர்ந்த ஒரு அதிசயம்!

3.கோபகதம்பநிதம்பவதீ முக சும்பன லம்பித லோபம் 
பந்துஜீவ மதுராதர பல்லவம் உல்லாஸஸ்மித சோபம் 
ராஸே ஹரிம் இஹ விஹிதவிலாஸம் 
ஸ்மரதி மனோ மமகருத பரிஹாஸம்

கோபகதம்பநிதம்பவதீ முக-அழகிய கோபிகளை 
சும்பன லம்பித லோபம் – முத்தமிடும் ஆசையுடன் கூடிய 
பந்துஜீவ மதுராதர பல்லவம் – குந்துமணி போன்ற அழகிய அவன் உதடுகள் 
உல்லாஸஸ்மித சோபம்- விரிந்த முறுவலுடன் விளங்கும் ( அவனை என் மனம் நினைக்கிறது.)

அவனுடைய சிவந்த உதடுகள் முறுவலிக்க அது அவன் கோபியரை முத்தமிடும் ஆசையைக் குறிக்கிறது என்று எண்ணுகிறாள் ராதை. .

4.விபுல புலகபுஜபல்லவ வலயித வல்லவயுவதி ஸஹஸ்ரம்
கரசரணோரஸி மணிகணபூஷண கிரணவிபின்ன தமிஸ்ரம் 
ராஸே ஹரிம் இஹ விஹிதவிலாஸம் 
ஸ்மரதி மனோ மமகருத பரிஹாஸம்

வலயித வல்லவயுவதி ஸஹஸ்ரம்- ஆயிரக்கணக்கான கோபியரை ஆலிங்கனம் செய்ததனால் ஏற்பட்ட
விபுல புலகபுஜபல்லவ- புளகாங்கிதத்துடன் கூடிய தளிர்போன்ற அவனுடைய புஜங்களையும் 
கரசரணோரஸி – கைகளிலும் பாதங்களிலும் 
மணிகணபூஷண – ஆபரணங்களின் 
கிரணவிபின்ன தமிஸ்ரம்- ஒளியால் இருளை போக்கடிக்கும் (அவனை என் மனம் நினைக்கிறது

ராதை அவனுடைய புளகாங்கிதம் கொண்ட அங்கங்களை நினைவு கூறுகையில், பொறாமையினால் அது அவன் கணக்கில்லாத கோபியரை ஆலிங்கனம் செய்ததால் தான் என்று நினைக்கிறாள். ராசக்ரீடை இரவில் நடைபெறும்போது கண்ணின் அங்கங்களில் உள்ள ஆபரணங்களின் ஒளி இருளைப் போக்கிவிட்டதாம்.

5ஜலதபடலவலதிந்துவிநிந்தக சந்தன திலக லலாடம்
பீனபயோதரபரிஸரமர்தன நிர்தய ஹ்ருதயகபாடம் 
ராஸே ஹரிம் இஹ விஹிதவிலாஸம் 
ஸ்மரதி மனோ மமகருத பரிஹாஸம்

ஜலதபடலவலதிந்துவிநிந்தக-மேகக் கூட்டங்கள் நடுவில் உள்ள சந்திரனை பரிஹசிக்கும் 
சந்தன திலக லலாடம்- சந்தனதிலகத்தை உடைய நெற்றியை 
பீனபயோதரபரிஸரமர்தன- இறுகத் தழுவுதலால் கோபியரின் மார்பை வருத்தும் 
நிர்தய ஹ்ருதயகபாடம் - கருணையில்லாத கதவு போன்ற ஹ்ருதயத்தையும் உடைய ( அவனை என் மனம் நினைக்கிறது)

மேகக்கூட்டங்களால் சந்திரன் மறைக்கப படுகிறான்., ஆனால் கண்ணன் நெற்றியில் உள்ள சந்தனத் திலகம் என்ற சந்திரன் மறைக்கப் படுவதே இல்லை.அதனால் சந்திரனை பரிஹசிக்கும் நெற்றி என்கிறாள்.

6. மணி மயமகரமனோஹர குண்டல மண்டித கண்டம் உதாரம் 
பீதவஸனம் அனுகதமுநிமனுஜ ஸுராஸுரவரபரிவாரம்
ராஸே ஹரிம் இஹ விஹிதவிலாஸம் 
ஸ்மரதி மனோ மமகருத பரிஹாஸம்

மணி மயமகரமனோஹர குண்டல- ரத்னங்களாள் ஆன மகர குண்டலம் 
மண்டித கண்டம் உதாரம்- அலங்கரிக்கும் கன்னங்களையும்
பீதவஸனம் – உடுத்திருக்கும் பீதாம்பரத்தையும் 
அநுகத- அவன் ராசக்ரீடையைக் காண அவனைத் தொடர்ந்த 
முநிமனுஜ ஸுராஸுரவரபரிவாரம்- முனிவர்கள் மனிதர்கள் தேவர்கள் அசுரர்கள் இவர்களையும் உடைய (அவனை என் மனம் நினைக்கிறது )

7. விசத கதம்பதலே மிலிதம் கலிகலுஷபயம் சமயந்தம்
மாமபி கிமபி தரள தரங்க தனங்க த்ருசா மனஸா ரமயந்தம்
ராஸே ஹரிம் இஹ விஹிதவிலாஸம் 
ஸ்மரதி மனோ மமகருத பரிஹாஸம்

விசத கதம்பதலே - கதம்ப மரத்தின் அடியில் 
மிலிதம் – சந்தித்தவனை 
கலிகலுஷபயம் – பாவங்களினால் உண்டான பயத்தைப் 
சமயந்தம்- போக்குபவனை
மாமபி – என்னையும்
கிமபி தரள தரங்க தனங்க த்ருசா-அழகிய காதல் பார்வையினால் கூடிய
மனஸா- மனத்தினால் 
ரமயந்தம்- மகிழ்விப்பவனை ( அவனை என் மனம் நினைக்கிறது )

8. ஸ்ரீஜயதேவபணிதம் அதிசுந்தர மோகன மதுரிபுரூபம் 
ஹரிசரண ஸ்மரணம் பிரதி ஸம்ப்ரதி புண்யவதாம் அனுரூபம்
ராஸே ஹரிம் இஹ விஹிதவிலாஸம் 
ஸ்மரதி மனோ மமகருத பரிஹாஸம்

ஸ்ரீஜயதேவபணிதம் – ஸ்ரீ ஜயதேவரால் இயற்றப்பட்ட 
அதிசுந்தர மோகன மதுரிபுரூபம் – இந்த அதிசுந்தரமான மோகனக்ருஷ்ணனின் வர்ணனை 
ஹரிசரண ஸ்மரணம் பிரதி- ஹரியின் சரணாரவிந்தத்தை பற்றியுள்ள
புண்யவதாம் – புண்ணியவான்களுக்கு 
ஸம்ப்ரதி – இச்சமயம் 
அனுரூபம் – அனுகூலத்தைக்கொடுக்குமாக.


No comments:

Post a Comment