Tuesday, May 8, 2018

Are you a brahmin- Periyavaa

நான் பிராமணன்????

யார் பிராமணன்????

நெற்றியில விபூதியை பட்டையா வைச்சுக்க மாட்டேன்....
திருமண்     இட்டுக்க மாட்டேன்.....
கோபி சந்தனம்    இட்டுக்க  மாட்டேன்.........
ஸந்தியாவந்தனம் பண்ண மாட்டேன். நேக்கு நேரமே இல்லை...ஒரு  நாளைக்கு    மூணு  வேளை  சரி..... இரண்டு வேளை..
சரி  ஒரு வேளையாவது??????.........நேரமே   கிடைக்க  மட்டேங்குது...........................

ஔபாஸனம் பண்றியா? (அப்படின்னா என்ன சார்)

ஞாயிற்றுக்கிழமையாவது சஹஸ்ரகாயத்ரி பண்றியா? 

இல்லை சார். ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் தான் கொஞ்சம் ஃப்ரீ...
சரி ஆயிரெத்து எட்டு  வேனாம்   ஒரு நூற்றி  எட்டு...

ம்ம்ம்ம்ம்ம்ம்..நேரம்  கிடைக்கவில்லை...........

வேதபாடசாலைக்கு போயிருக்கியா?
இல்லை சார் அங்கெல்லாம் போனது இல்லை.

வேதம் படிச்சிருக்கியா?
இல்லை சார் எங்க ஊர்ல பாடசாலை இல்லை
ருத்ரம் சமகம்.....புருஷ  சூக்தம்  ஸ்ரீ சூக்தம்   தெர்யுமா?........ 
படிச்சிருக்கியா?
இல்லை சார் சொல்லிக் கொடுக்க ஆள் இல்லை.

பிடி அரிசி திட்டம் மூலமா கொஞ்சமாவது அரிசி எடுத்து வைக்கிறேளா?

இல்லை சார். எங்க ஆத்துல அந்த பழக்கம் இல்லை சார்.

வருஷா வரும் ஆவணி அவிட்டத்துக்கு அடுத்த நாள் வர்ற காயத்ரி ஜபம் அன்னிக்காவது சஹஸ்ரகாயத்ரி பண்ணுவேளா?

இல்லை சார். ஆபிஸ்ல பெர்மிஷன் கொடுக்கிறதே பெரிய விஷயம்.

பாடசாலைக்கு எதாச்சும் கைங்கர்யம் பண்றேளா?
நான் ஏன் சார் பண்ணனும்? ஒவ்வொரு பாடசாலையிலும் பணம் கொட்டிக் கிடக்குது.

வைதீகாளுக்கு எதாச்சும் உபகாரம் பண்றேளா?
அவாளுக்கு எதுக்கு சார் நான் உபகாரம் பண்ணனும். ஒவ்வொரு ஹோமத்துலயும் அவாளுக்கு நல்ல காசு...................................................
பக்கத்துல ஏதுவவது   கோவிலுக்கு போவது உண்டா?  ஸ்வாமி  தரிசனம்       பண்ணுவது  உண்டா?....ஒழிந்த  நேரத்தில் ஏதாவது கைங்கரியம்     பண்ணூவியா?????????
ம்ம்ம்ம்..அதுக்கு எல்லாம்    ஏது  நேரம்?????

இப்படி எதுவுமே பண்ணாம உனக்கு என்ன ம....ருக்குடா பூணூல். 
பேசாம அதை கழட்டி பன்றிக்கோ நாய்க்கோ போடவேண்டியது தானே. என்ன ரோமத்துக்கு நான் பிராமணன்னு சொல்லிட்டு திரியறே.......................

 மன்னிக்கனும் இதை நான் எழுதல....எனக்கு ஒருத்தர்  அனுப்பியது...

யோசிச்சா சரியாதான் கேட்கிறார்னு தோனுது. ... முஸ்லிம் தினம் 5 வேளையும் தொழுகை. ..வெள்ளிக்கிழமை மசூதி செல்ல தவறுவதில்லை...
கிருத்தவர் பைபிள் வாசிப்தையும்,ஞாயிறு சர்ச் செல்லவும் மறப்பதில்லை....
இவர்கள் தங்களின் அடையாளங்களை மறுக்கவோ. ..மறைக்கவோ முயல்வதில்லை. 

நாம் மட்டும் ஏன் இப்படி???

குறைந்தபட்சம் இரு வேளை சந்தியாவது செய்வது என்று  நான் முடிவு செய்துவிட்டேன்.....ஏனெனில் சந்தியாவந்தனம் வேதகாலத்திலிருந்து அனைவராலும் உச்சரிக்கப்பட்டு என் மூதாதையர் அனைவராலும் தொடரப்பட்டு மிக மிக அதிக vibration கொண்டதுதான் சந்தியாவந்தனம், மேலும் நாம் மட்டுமே உச்சரிக்கத் தகுதிவாய்ந்த மிக மிக உசத்தியானது...காயத்ரி மந்திரம். இவை எனது தலைமுறையோடு கண்முன் அழிந்து....என் மூதாதையர் சாபத்திற்கு ஆளாகமாட்டேன்....
ஆதலால் நான் மீண்டும் உன்மையான பிராமணன் ஆக போகிறேன்........

நீங்கள்?????

என்றென்றும் நமஸ்காரங்களுடன்...

No comments:

Post a Comment