Monday, April 2, 2018

Talaiyalangaladu temple

நமசிவாய வாழ்க!!! 146, (4-2-2018)

கபில முனிவர் பூஜித்த தலம்!!!

மூலவர் அழகான மேனி. அம்பாள் தெற்கு நோக்கிய சன்னதி. இக்கோயில் "எண்கண்' கோயிலுடன் இணைந்தது. அருமாமையில் எண்கண், குடவாயில் பெருவேளூர், முதலிய திருமுறைத் தலங்களும், மணக்கால், காட்டூர் முதலிய வைப்புத் தலங்களும் உள்ளன!!!

தாருகாவனத்து முனிவர்கள் சிவபெருமானை அழிப்பதற்காக வேள்வி ஒன்றை நடத்தினார்கள். அதில் தோன்றிய யானையின் தோலை சிவன் உரித்தார். மானை தன் கையில் ஏந்திக்கொண்டார். முயலகன் என்ற அரக்கனை அழித்து அவனது முதுகின் மீது ஏறி நர்த்தனம் ஆடிய தலம்!!! 

சங்க காலத்தில் இத்தலத்தில் பாண்டியன் நெடுஞ்செழியனுக்கும் ஏனைய தமிழ் வேந்தர் இருவருக்கும் கடும் போர் நிகழ்ந்தது. இதில் பாண்டியன் நெடுஞ்செழியன் வெற்றிபெற்றான். அவனுக்கு தலையானங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன் என்ற சிறப்பு பெயர் ஏற்பட்டது!!!

காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.  
     
நர்த்தனபுரீஸ்வரர் திருக்கோயில், தலையாலங்காடு.

திருவாரூரிலிருந்து (15 கி.மீ.,) கும்பகோணம் செல்லும் வழியில் தலையாலங்காடு உள்ளது.

No comments:

Post a Comment